தேவதை குழந்தைகள்!
குழந்தைகள் தினம்!
கள்ளமில்லா அன்பை
வெள்ளமாய் தரும்
ஜீவன்கள்!
கோபம் கூட
மறைந்து போகிறது
மழலையின் சிரிப்பில்!
குழந்தைகள் எழுதும்
எழுத்துக்கள் இல்லா
சுவர்கள் தூய்மையாக
இருந்தாலும்
எதையோ இழந்து நிற்கின்றன!
குழந்தை
பூவாய் மலர்கையில்
வாசமாகிறது
வீடு
குழ்ந்தைகள்
தாத்தாவின் முதுகில்
குதிரையேற்றம்
நடத்துகையில்
குழந்தையாகிறார் தாத்தா!
கடவுள் கொடுத்த
கடவுள்
குழந்தை!
குழந்தையின்
மெத்தென்ற ஸ்பரிசம் பட்டதும்
சத்திழக்கின்றன சண்டித்தனம்
செய்த சங்கடங்கள்!
எதிரியைக் கூட
எளிதில் வீழ்த்துகிறது
குழந்தையின் சிரிப்பு!
அப்பாவோடு ஒட்டிக்கொள்கின்றன
பெண்குழந்தைகள்!
அம்மாவோடு நெருக்கம்
காட்டுகின்றன
ஆண்குழந்தைகள்!
எதிர்பாலின ஈர்ப்பு! என்றாலும்
எல்லாக் குழந்தைகளையும்
ஈர்க்கின்றது தாத்தா உறவு!
பிள்ளைகள்
தவழ்கையில் ஈரமாகிறது
பூமி!
கண்ணாடிகளாய்
குழந்தைகள்!
நம்மை பிரதிபலிக்கிறது!
நல்லதை ஊட்டுவோம்
நல்லதை பெறுவோம்!
உடைத்தால் சிதறும்
பிடிக்க முடியாது!
பிடிவாதங்கள்
உடைபட்டுப்போகின்றன
குழந்தைகள் முன்!
எல்லா தேவதைகளும்
தோற்கிறார்கள்
குழந்தைகள் முன்!
குழந்தைகள் தேவதைகள்!
கொடுக்கிறார்கள் குறைவில்லா
மகிழ்ச்சியை!
மனதை மயக்குகின்றன
மழலையின்
குறும்புகள்!
கட்டணமின்றி
பயணிக்கலாம்
குழந்தைகள் உலகில்!
நொடியில் மறைந்து போகிறது
குழந்தைகளிடம் மட்டும்
கோபம்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!



கவிதை குழந்தைகளுக்கு சமர்ப்பணம்.
ReplyDeleteஅற்புதமான வரிகள் சகோதரரே. இதை விட குழந்தைகளைக் கவனித்து கவிதை தர முடியாது. அழகான கவிதை. பகிர்வுக்கு நன்றிகள்..
ReplyDeleteசிறப்பான வரிகளால் குழந்தைகளைச் சீராட்டி நிற்கும் சிறந்த
ReplyDeleteபடைப்பிற்கும் குழந்தைகளுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும் !மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
அற்புதமான கவிதை. குழந்தைகளே சொர்க்கம் ❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteஅருமை
ReplyDeleteCongratulations enkal ennaingal thangal karaingkalaal vannamagi irukkirathu super sir
ReplyDelete