காமன் வெல்த்! நோ ஹெல்த்!
சிங்களன்
செய்தான் வன்கொடுமை!
ஆங்கோர் மாநாடு காமன்வெல்த்!
அனைவருக்கும் தந்திடுமோ ஹெல்த்!
வினை விதைத்து
விட்டு
தினை அறுக்க முயலுகிறது இலங்கை!
துணை போக முயலுகிறது நம் “கை”
அண்டை நாட்டுடன் சண்டை!
அழைத்து வந்திடும் தீராத தொல்லை!
சப்பைக் கட்டு கட்டுகிறது இந்தியா!
இசைப்பிரியா மரணம்!
இதயம் இல்லாதவருக்கும் ரணம்!
இது ஒன்றே உணர்த்தும்
சிங்களம் வண்மம்!
பாலசந்திரன் படுகொலை!
காலனும் கலங்குவான்!
சேனல் நான்கின் காட்சிகள்
செப்புவதோ உண்மைகள்!
கம்பளம் விரித்து அழைக்கிறது
காமன் வெல்த்!
காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு
இல்லை காமன்சென்ஸ்!
தமிழர் உணர்வை புரியாமல்
தமிழினத் தலைவரோடு பேச்சுவார்த்தை!
உண்மை அறிந்தும் உணர்வில்லாமல்
உறங்கிக் கிடக்கிறது இறையாண்மை!
மனசாட்சி இல்லா
ஆட்சிக்கு
மறுவிருந்து கேட்கிறது இலங்கையில்!
குற்றம் புரிந்தவனோடு குலாவ
சுற்றத்திடம் சுற்றறிக்கை விடுகிறது!
அரியனை ஒன்றே அதன் நோக்கம்!
ஆட்சி கட்டில் அதன் பக்கம்!
காட்சிகள் மாறும் நம் பக்கம்!
வீழ்ச்சியில் கரையும் அதன் சாயம்!
எல்லா உள்ளங்களும் ஒன்றிணைக!
பொல்லா சிங்களன் முகத்திரை கிழிக்க!
போரில் மனிதம் மீறியதை
பாரில் எடுத்துரைப்போம்! சிங்களன் செய்த
சில்லறைத் தனங்கள் தோண்டும் அவனுக்கு
கல்லறை! அதுவரை அவனுக்கில்லை
நிம்மதியான நித்திரை!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
மனசாட்சி இல்லா ஆட்சிக்கு
ReplyDeleteமறுவிருந்து கேட்கிறது இலங்கையில்!
வாழ்த்துக்கள்...
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை இலங்கை யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சென்று வந்தேன். ஒவ்வொரு வீதியிலும் புத்தர் சிலைகள். இப்பொழுது நினைத்துப் பார்க்கின்றேன், அச்சிலைகள் எல்லாம் கண்களை திறந்து கொண்டிருந்ததா, மூடிக்கொண்டு இருந்ததா என்று.
ReplyDeleteவலி உணர்த்தும் வரிகள்... ஜெயக்குமார் சாரின் வரிகள் வேதனை பகர்கிறது...
ReplyDeleteஒவ்வொரு வரியும் செருப்படி கொடுத்தது போல் இருந்தது . தமிழர்களின் உணர்வை மதிக்காமல் அதில் கலந்துகொண்டால் அதற்கான பலனை தேர்தலில் அனுபவிப்பார்கள் .
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
ReplyDeleteமுதலில் இப்படியொரு கருத்தைக் கவியாக்கியமைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் தங்களுக்கு. செய்த துரோகத்தை மறைக்க நினைக்கும் அரசும், துரோகத்திற்கு உடந்தை போன அரசும் திட்டமிட்டு ஏற்பாடு செய்ததே காமன்வெல்த் மாநாடு இனவெறி பிடித்த சிங்களனுக்கு தட்டிக் கொடுக்கும் கைக்கு நம்மவர்கள் கைகள் டாட்டா காட்ட வேண்டிய சரியான நேரம் வந்து விட்டது. இனவெறியில் மிஞ்சிய நம் சொந்தங்களுக்காவது புது விடியல் பிறக்கட்டும். பகிர்வுக்கு நன்றி.
valithaan sonthame...
ReplyDeleteமிக அருமை..
ReplyDeleteஈழதமிழச்சிகளுக்கு நடந்த கொடுமைகளை நேரில் சந்தித்தவள் நான்....
நெகிழ வைத்தது....