புகைப்பட ஹைக்கூ 60

புகைப்பட ஹைக்கூ 60


நாய்ப்பாசம்
அல்ல!
தாய்ப்பாசம்!

வாடகைத்தாய்
ஆனது
நாய்!

பாசங்கள் கூடுகையில்
மறைகிறது
வேசங்கள்!

மடி தந்து
மனதில் நின்றது
நாய்!

விளங்க
வைத்தது
விலங்கு!

மக்களிடம் மறைந்தது
வெளிப்பட்டது
மாக்களிடம்!

தாயன்பு இழந்ததும்
கிடைத்தது
நாயன்பு

ஊரார் பிள்ளையை
ஊட்டிவளர்க்கிறது
தாயான நாய்!

பிள்ளை வேறுபட்டும்
மாறுபட வில்லை
தாய்!

  பரிவோடு
  பாலும் சுரந்தது
  நாய்!

  வாயில்லா ஜீவனிடம்
  வழிந்தது
  அன்பு!

  வாலாவிருக்காமல்
  பாலாய் சுரந்தது
  பரிவு!

  ஐந்தறிவிடம்
  ஜனித்தது
  ஆறாய் பரிவு!

  பால் வேறுபடினும்
  வேறுபடவில்லை
  பரிவு!

  மிருகத்தில்
  புகுந்தது
  மனிதம்!

  நாய் அல்ல!
  நல்லதொரு
  தாய்!
  
  விலங்கிற்கு
  விலங்கிட்டது
  பாசம்!

    தாய்  மறந்தாலும்
    மறுக்கவில்லை!
    நாய்!

    மிருகமானாலும்
    உருகிப்போனது
    தாய்!

 
  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Comments

 1. /// தாய் மறந்தாலும்
  மறுக்கவில்லை!
  நாய்! ///

  Super...

  எனது கணினி Mother Board கோளாறு...

  Comments From Android phone...

  see U...

  ReplyDelete
 2. மனிதத்தை
  மறவாத
  விலங்கினம்.

  மனிதத்தை
  மறந்து
  விலங்கினமாய்
  வாழுகிறது
  மனித இனம்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2