புகைப்பட ஹைக்கூ 59

புகைப்பட ஹைக்கூ 59


ஒளி
கொடுக்கிறது
ஒளி!

கரைய கரைய
படிகிறது
பாடம்!

உருகியதும்
உருப்பெற்றது
கல்வி!

விளக்கேற்றியதும்
விடைபெற்றது
மின்சாரம்!

வெட்டிவெட்டிக் கொடுக்கிறார்கள்
தட்டிக் கேட்பாரில்லை!
மின்சாரம்!

மெழுகின் ஒளியில்
மிளிர்கிறது
அறிவு!

அறிவொளி பரவ
சுடர்விட்டது
மெழுகுவர்த்தி!

இருளைவிரட்டி
இறந்து போனது
மெழுகுவர்த்தி!

உடலை ஈந்து
ஓளி ஏற்றியது
மெழுகுவர்த்தி!

இருண்டாலும்
சுடர்விட்டது
அறிவொளி!

இருட்டை விரட்டியது
இரக்கமுள்ள
மெழுகுவர்த்திகள்!

வளர்கையில்
தேய்கிறது
மெழுகுவர்த்தி!

தடை போட்டதும்
வெளிவந்தன
மெழுகுவர்த்திகள்!

தியாகத்தீயில்
வளர்ந்தது
கல்வி!

உருக உருக
உயர்ந்தது
படிப்பு!

கருகும் கல்வியை
மெருகேற்றியது
மெழுகுவர்த்தி!

எரிந்தாலும்
வளர்த்தது கல்வி!
மெழுகுவர்த்தி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Comments

 1. /// உருக உருக
  உயர்ந்தது
  படிப்பு! ///

  அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. உள்ளம் உருகுதையா உங்கள் ஹைகூ காண்கையிலே !

  ReplyDelete
 3. ஒளி கொடுக்கும் ஒளி அனைத்தும் அருமை!

  வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 4. மெழுகுவர்த்தி ஒளியில் பிரகாசிக்கும் வரிகள் ரசித்தேன்

  ReplyDelete
 5. ஒளிரும் வரிகள்
  அருமை ஐயா

  ReplyDelete
 6. நண்பருக்கு வணக்கம்..
  ஒளிரும் வெளிச்சத்தில் தங்கள் ரசனை ஒளிந்து புன்னகை காட்டியிருப்பது அருமை நண்பரே. அருமையான கவிவரிகள். பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள் நண்பரே..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2