இரண்டுலட்சம் பக்க பார்வைகள் கடந்தது தளிர்!
இரண்டுலட்சம் பக்க பார்வைகள்
கடந்தது தளிர்!
கடந்த 4-1-11 அன்று பொங்கல்
வாழ்த்தோடு ஆரம்பித்தது தளிர் வலைப்பூ. வலைப்பூ என்றால் என்னவென்றே தெரியாமல்
உருவானதுதான் தளிர். முதலில் யாருமே வரவில்லை! அப்படியே வளர்ந்து திரட்டிகளில்
ப்ளாக்கர் நண்பன் பதிவுகளை படித்து இணைத்தேன். அப்புறம் சிலர் வருகை தர பார்வைகள்
எண்ணிக்கை கூடியது. ஒரு கட்டத்தில் தமிழ் மணம் திரட்டியில் இணைந்தபோது நிறைய
பார்வையாளர்கள் கூடினர். இந்த சமயத்தில்தான் வலைச்சரத்தில் என் ராஜபாட்டை ராஜா
அவர்கள் என்னை அறிமுகப்படுத்த இன்னும் சிலர் பாலோவர் ஆனார்கள். அப்படியே
வளரும்போதுதான் தளிரில் களைகள் ஆரம்பம் ஆயின.
வலைப்பூவில் சிலர் கதைகளை மட்டுமே எழுத
சிலர் கவிதைகளை எழுத, சிலர் நகைச்சுவைகளை எழுத, சிலர் சினிமாவிமர்சனம் மட்டும்
எழுத என தனித்தனியாக எதோ ஒன்றை மட்டும் எழுதி வந்தனர். எனக்கு அப்படி எழுத
தோன்றவில்லை! ஒரு பல்சுவை வார இதழாய் இருக்க வேண்டும் நமது வலைப்பூ என்ற
எண்ணத்தில் கதை, கவிதை, ஜோக்ஸ் என கலந்து கட்டி எழுதினேன். பிற தளங்களில் இருந்து
பகிர்ந்தேன். அப்படி செய்யும்போது நிறைய பேர் வருகிறார்கள் என்று சினிமா தகவல்களை
நிறைய போட ஆரம்பித்துவிட்டேன்! இதைப்போட்டால் நிறையபேர் வருவார்கள் என்று நான்
எழுதுவதை நிறுத்தி காப்பிபேஸ்ட் செய்ய ஆரம்பித்தேன்! நிறைய பேர் வந்தார்கள்! ஆனால்
தொடரவில்லை! கமெண்ட்கள் வரவில்லை!
அப்போதுதான் பிற தளங்களுக்கு சென்று
கமெண்ட் செய்து அவர்களை என் தளத்திற்கு அழைத்தேன்! அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
இன்று என் தளத்திற்கு தொடர்ந்து வரும் நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர். இந்த
சமயத்தில்தான் கொன்றைவானத்தம்பிரானுடன் சிறு சர்ச்சை! அவர் சொல்வது முதலில்
எரிச்சலாக இருந்தாலும் பின்னர் உண்மை புரிந்தது. அதன்படி காப்பிபேஸ்ட்டை
குறைத்தேன்! சொந்தமாக எழுத முயற்சித்தேன்! ஆனால் பல்சுவைகளில் ஜோக் எழுத
முடிவதில்லை! அதை பிற புத்தகங்களில் இருந்து பகிர்கிறேன். கதைகள் எழுத
பொறுமையில்லை! அதனால் ஹைக்கூ மற்றும் கதம்பச்செய்திகளை தொகுத்து தந்து
கொண்டிருக்கிறேன்! சிறுவர்பகுதியும், தமிழ் இலக்கண சம்பந்தமான ஒரு பகுதியும்
தொடர்ந்து வருகிறேன்.
கடந்த ஜூலை மாதம் முதல் தளிரில் சினிமா
செய்திகள் குறைந்துவிட்டன. அவ்வப்போது ஒன்றிரண்டு மட்டுமே! அது மட்டும் இல்லாமல்
காப்பிபேஸ்ட் செய்த தரமில்லாத ஹிட்ஸ்க்கு மட்டும் உதவிய பல பதிவுகளை
நீக்கிவிட்டேன். இதனால் எனது தளத்திற்கு பார்வைகள் குறைந்தாலும் பரவாயில்லை என்று
முடிவு செய்து தரமான செய்திகளை மட்டும் தர முடிவு செய்து அப்படியே
செயல்பட்டுவருகிறேன். இன்னும் சிறப்பாக
தளிரை கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
காப்பி பேஸ்ட் செய்ய ஆரம்பித்த பின் என்னை
தமிழ்மணம் நீக்கிவிட்டதால் அதில் பதிவுகளை இணைக்க முடிவதில்லை. மற்ற திரட்டிகளின்
உதவியோடு இன்று இரண்டு லட்சம் பார்வைகள் கடந்துள்ளது. மூன்று ஆண்டுகளில்
1350க்கும் அதிகமான பதிவுகளை கொடுத்து 3500க்கும் அதிகமான பின்னூட்டங்களை பெற்று
இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
2011ல் ஒரு முறை மட்டுமே வலைச்சரத்தில்
அறிமுகமான நான் 2012 ஜூலைக்கு பின் நான்கு முறை அறிமுகம் செய்யப்பட்டேன். 2013லும்
இதுவரை நான்கு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளேன். வலைச்சர அறிமுகம் என்னை மேலும்
ஊக்கப்படுத்தி உற்சாகம் தந்துள்ளது.
பல நல்ல நண்பர்களை இந்த வலைப்பூ பெற்றுத்
தந்துள்ளது. இன்னும் பெற்றுத்தரும் என்று நம்புகிறேன். இரண்டுலட்சம் பார்வைகளை
தாண்டுவது என்பது சில நாளாய் நான் கொண்ட ஒரு லட்சியம். அதை கடந்துவிட்டேன். இன்னும்
சில லட்சியங்கள் உண்டு அதுவும் விரைவில் ஈடேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
கூடன்குளம் சம்பந்தமாக பதிவுகள் தினமலரில்
இருந்து வெளியிட்டபோது பார்வைகள் அதிகரித்தது. அதனால் சில விவாதங்கள் சண்டைகள்
ஏற்பட்டது. அதன் பின் கொண்றைவானத் தம்பிரானுடன் சில சர்ச்சைகள், அதைத்தவிர வேறெந்த
சர்ச்சையிலும் தளிர் ஈடுபடாமல் பீடு நடை போட்டுவருகிறது உங்களின் பேராதரவுடன்.
இதுவரை தளிருக்கு ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி! இதுவரை கமெண்ட்
செய்தவர்களின் பெயர்களை கீழே தந்துள்ளேன். அவர்கள் மட்டுமின்றி சைலண்ட்
ரீடர்களுக்கும், பெயரிலியாய் கருத்திட்டவர்களுக்கும், தினம் தோறும் தவறாமல்
கருத்திடும் நண்பர் தனபாலனுக்கும் விசேசமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
தளிர் மேலும் வளர்ச்சியடைய உங்கள் ஆலோசனைகளை
கமெண்டில் சொல்லுங்கள்! தவறுகளை திருத்திக்கொள்கிறேன். நன்றி!
இதுவரை கமெண்ட் செய்து தளிரை
உரமிட்டு வளர்த்த உள்ளங்கள் இவர்கள் அனைவருக்கும் நன்றி!
முதல்
கமெண்ட் ஸ்ரீ அனுராதா, தளிர் அண்ணா
கவிதைகள் 10-1-11
முதல் கமெண்ட் நானே என் மனைவி பெயரில் போட்டுக்கொண்டேன்! ஹிஹி!
கூடல்பாலா,
பிலாசபி பிரபாகர், அபுசானா, ஏ.ஆர் ராஜகோபாலன் mahan thamesh தமிழ்வாசிபிரகாஷ், பிரகாஷ் சோனா, இ.பு.ஞானபிரகாசம்,
கவிதைவீதி சவுந்தர், மதுரை சரவணன், கே.எஸ்.எஸ்.ராஜ், மதுரன், உங்கள் நண்பன்,இருதயம், சூர்யஜீவா, நிவாஸ்,கும்மாச்சி, சின்னதூறல்,கோகுல், வைரை சதீஷ், ஜெய்சங்கர்
ஜெகன்னாதன் ,saravanan
flim,தமிழ்தோட்டம்,எல்,கே,rajvel,sanmugakumar,vanjur,அரசன்,stalin,
அம்பாளடியாள்,
அஸ்மா, mohamed faaique, ஐடியாமணி, முனைவர்,குணசீலன்,சி.பி.செந்தில்குமார்,சித்ரவேல்சித்ரன்,
புலவர்.சா.இராமானுசம்,anishj,
siva007,lakshmi, dr, palanikandhasami,saro, ஆமினா, சூப்பர்,
ஆளுங்க,suriyajeeva,rajkumar, www.podakkdutntj.com,pc,karupaiah,
pudukai selva, sivamjothi28,thiyagarajan,ashik, balu, vp.murugan,
விக்கியுலகம்,உலகசினிமாரசிகன், நம்பிக்கைபாண்டியன்,ஷஹி, கோவைநேரம், என்ராஜபாட்டை
ராஜா,தமிழ்ச்செல்வன்,கார்த்திகேயனி, திண்டுக்கல் தனபாலன், சதீஷ் செல்லதுரை,
இராஜராஜேஸ்வரி,தமிழ்மகன், சிசு,வலைஞன், கோபிநாத்,நிலாமதி,மாசிலா,ஹிஷாலி,ராம்கோபி,
ரியாஸ்,செந்தில்குமார், கலை,செந்தில், சுஜி, ம.தி.சுதா, அட்சயா,cpadenews, தோழன்
மா.பா.தமிழன்வீதி,bsnl,advacate p.r.jayarajan, more entertainment,sunfun, online
workersfor all, hotlinknsinதிரட்டி, கூகிள்சிறிகொம்,வல்லத்தான், தனிமரம், வரலாற்றுசுவடுகள்,
ரமணி, ப்ரேம்.எஸ், சிவகுமார், மனசாட்சி, ஹாரிபாட்டர், டி.என் ,முரளிதரன்,
ஃபுட்நெல்லை,ரெவெரி, கலாகுமரன், திரட்டு.கொம்,அவர்கள் உண்மைகள், எழில், சீனு,
சங்கவி,இரா.மாடசாமி,இரவின்புன்னகை, மேகா, தமிழ்நுட்பம்,
krishnamoorthi,அன்பைத்தேடி அன்பு, சிட்டுக்குருவி, சசிகலா,
ரமேஷ்வெங்கடபதி,eazyeditorial calander, rishvan, கவி காயத்ரி, நாஞ்சில்மனோ,
மோகன்குமார், அகரத்தான்,கோவி, புதுகைத்தென்றல்,ஹேமா,
ஞானம்சேகர்,பாலகணேஷ்,கிருஷ்ணாரவி,செழியன், சி.பிரேம்குமார்,கதிர்ராத்,
வவ்வால்,நண்டு@நொரண்டு, கவிஅழகன், கவிசெங்குட்டுவன், போக்கிரி,சஃபி, பழனிகந்தசாமி,
சென்னைப்பித்தன், ஸ்ரீராம்,கோமதிஅரசு,ஆயிஷாபருக்,கல்விக்கூடல்,
ஜெயதேவ்தாஸ்,அதிசயா, மதுமதி,இட்ஸ்டிபரண்ட்,sury,rasan,tamilcomics sounder,
வே.சுப்ரமண்யன்,ஆட்டோமொபைல்,சாமூண்டீஸ்வரிபார்த்தசாரதி, ரத்னவேல்நடராஜன், ஆர்.வி
சரவணன்,வேடந்தாங்கல் கருண், கரந்தைஜெயக்குமார், கொன்றைவானத்தம்பிரான்,
விச்சு,குமரன்விவேகா, தங்கம்பழனி,சேதுராமன் ராமலிங்கம், பட்டுராஜ்,
கோவை.மு.சரளா,விருச்சிகன், சே.குமார்,பாலமுருகன்,சேஷாத்ரி இ.எஸ்.,சீனி,
அப்பாத்துரை, கவிதைவீதி சவுந்தர்,மட்டைஊறுகாய், எஸ்தர்சபி,உமா, நிலவைத்தேடி,
தேவதாஸ் எஸ்.என்.ஆர், தமிழின்ஃபொவே,தமிழ்காமெடிஉலகம், குட்டன்,
கீதமஞ்சரி,அகல்,ஸ்ரவாணி, சுடர்விழி, தமிழ்களஞ்சியம்,அரசன் சே,தொழிற்களம்குழு,
எஸ்.ஆர்.எச்.தினபதிவு, சீனி,மோகன்பாலு, சிவஹரி,கலை,
செங்கோவி,முத்தரசு, அருணாசெல்வம், ஹாரி.ஆர்,anvicter,ramamoorthi, உஷா அன்பரசு,
மாற்றுப்பார்வை, ஸ்கூல்பையன், ஆதிரா, கவிஞர் கி.பாரதிதாசன், தமிழ்கிங்,ஆத்மா,
பரிதிமுத்துராசன், அமர்க்களம்கருத்துக்களம்,குமரன், தவக்குமரன்,செம்மலைஆகாஷ்,
குமரன்சங்கர்,ஜெயந்திரமணி,ஆண்ட்ராய்ட்கீக்,ஹாரி ருசாந்த்,ரவிஉதயன்,
நிஜாமுதின்,செல்வராணிகுமரன்,பூந்தளிர், எஸ்.பிரகாஷ்,கவியாழிகண்ணதாசன்,
கோவைஆவி,ரிவர்லைவ்ஜாப்ஸ்,ஜகத்,பராரி, ரஞ்சனிநாராயணன்,கமலக்கண்ணன், முரளி,ராயதுரை,
தமிழ்செல்வி, டினேஷ்சாந்த்,ஜீவன்சுப்பு, மகேந்திரன், முகமதலிஜின்னா, (14) எஸ்.சதீஷ்,அபிஶ்ரீ,பெருவுடையான், வடிவேலு,
கணபதி டபிள்யூ, பரணிதரன் கே, நாடிநாரயணன் மணி, குற்றாலலிங்கம் முருகன்,
ரவிக்குமார் கே, ரூபக்ராம், மதிசுதனா தக்சின், வலைச்சரம் சீனா ஐயா,தமிழன்
பொதுமன்றம், வினோத்குமார், ராஜா,ரியாஸ் அகமத்,ஆசை, கார்த்திக், தணிகை, கருவாச்சி
அர்விந்த், கார்த்திக் சேகர், இளமதி, பட்டிக்காட்டன் ஜெய், மதன் புதிய உலகம்,
இராஜமுகுந்தன் வவ்வையூரான்,சாய்ராம், அருள், ப.பிரகாஷ்,வருண்வருணா,
கோவிந்த்ராஜ்,அ.பாண்டியன், அலேக்ஸ்1019, எம்,எஃப் நிரோஷன்,கோகுல்,ராஜி,
பரிதி,தர்மதீனா, சாரி, பகவான் ஜி, ராஜலஷ்மிபரமசிவம்,மணிமாறன்,
வெற்றிவேல்,மேரிஜோஸ்,ப்ளே ராஜ்,தஸ் கார்த்தி,வியபதி,
சத்யாநம்மாழ்வார்,ஜோதிஜி,ஶ்ரீனிவாசன்,கமல் எம்.கெ.யூ.சி, பி.எஸ்.டிபிரசாத்.
உங்க எல்லோருக்கும் இதோ ட்ரீட்! ஸ்விட் எடுங்க! கொண்டாடுங்க!
தினம் தோறும் தவறாது வந்து உற்சாகப்படுத்தும் பின்னூட்டப்புயலை கவுரப்படுத்த பெயரை பெரிது படுத்தி ஹைலைட் செய்துள்ளேன்! மேலும் என்னை வலைச்சரத்தில் முதலில் அறிமுகம் செய்த ராஜபாட்டை ராஜா, நீண்ட இடைவெளிக்கு பின் தளிர் என்று ஒரு வலைப்பூ இருக்கிறது என்று மீண்டும் நினைவுபடுத்திய சிவஹரி இருவருக்கும் என் நன்றியை தெரியப்படுத்தி ஹைலைட் செய்துள்ளேன்!
இன்னும் நிறைய சொல்லலாம்! ஆனால் தொடர்கதை போல நீண்டுவிடும்! எனவே இத்துடன் நிறைவு செய்கிறேன்!
இது மட்டுமில்லாமல் நிறைய ஆலோசனைகள் வழங்கிய அனைத்து வாசகர்களுக்கும், தொடர்ந்து வரும் நண்பர்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்! நன்றி!
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பல...
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேஷ் அண்ணா, எல்லாராலும் சொல்ல முடியாத சில விஷயங்களை - முக்கியமாக காப்பி பேஸ்ட், தமிழ்மண நீக்கம், வாக்குவாதங்கள் - வெளிப்படையாக சொல்லியிருக்கிறீர்கள்...
ReplyDeleteலட்சங்கள் பெருகட்டும்;வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழ்தோட்டத்தில் நண்பரான என் இனிய நண்பருக்கு! தமிழ் பதிவுலகில் பலராலும் விரும்பப்படும் அன்பருக்கு என் இனிய வாழ்த்துக்கள்! தொடருங்கள் தோழரே! கிருஷ்ணாலயாவிற்கு தாங்கள் குறிப்பிட்டது போல தமிழ்பதிவர்களின் ஆதரவு இல்லை! இருப்பினும் தொடர்ந்து பயணிப்பது முகமறியா பெயரறியா வாசக நண்பர்களால் தான்!
ReplyDeleteதமிழ்தோட்டத்து நட்பு இன்று வரை தொடர்வதில் மகிழ்கிறேன்! நன்றி தோழரே !
வாழ்த்துகள் நண்பா!
ReplyDeletevaazhthukkal sako...
ReplyDeleteinnum valarungal...!
வாழ்த்துக்கள்...சுரேஷ்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா. தங்களின் பணி தொடரட்டும். புதிய சாதனைகளைப் படைக்கட்டும்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே பல லட்சங்கள் பெருக தங்கள் பணி இனிதே தொடரட்டும்
ReplyDeleteதிரட்டிகளை சாராது உங்கள் முயற்சியால் இவ்வளவு பார்வையாளர்களை கொண்டிருப்பதற்கு பாராட்டுக்கள் . நல்ல படைப்புக்களை வழங்கக் கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு.பக்கப் பார்வைகள் 2 லட்சத்தை கடந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇது சாதாரண சாதனை அல்ல.
ReplyDeleteஇமாலய சாதனை. சுயபுராணங்கள் இன்றி
காப்பி பேஸ்ட் இன்றி அனைத்தும் சொந்தமான
ஆக்கப்பூர்வ படைப்புகளாக தரவிருப்பது பற்றி
மிக்க மகிழ்ச்சி. அது தான் வலைத்தளங்களின் சிறந்த
பயன்பாடாக இருக்க முடியும் . சாதனைகள் மேன்மேலும்
தொடர என் உளப்பூர்வ வாழ்த்துக்கள்.
உங்கள் நல்ல மனதிற்கு தாங்கள் மேன்மேலும் வளர கடவுளும் தங்களிடம் நட்பு கொள்வார்°°°
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேஷ். வாழ்க வளமுடன்
ReplyDelete