புகைப்பட ஹைக்கூ 57

புகைப்பட ஹைக்கூ 57 வழித்துணை
 ஆனது
 வாழ்க்கைதுணை!

 இளமை தொலைந்தாலும்
 தவறவில்லை
 கடமை!

 தள்ளாத வயதிலும்
 தவறவில்லை!
 தாம்பத்யம்!

 உதாரண தம்பதியர்
 உதிக்கிறார்கள்
 சாதாரணர்களாய்!

 கைப்பிடித்தவளை
கைவிட வில்லை!
நம்பிக்கை!

தள்ளாமையும்
முதுமையும் தள்ளவில்லை
தம்பதியின் ஒற்றுமை!

பற்றுவைத்ததால்
ஊற்றெடுத்தது
அந்நியோன்யம்!

கூன் விழுந்தாலும்
நிமிர்ந்தது
தாம்பத்யம்!

நிலைமாறினாலும்
தடுமாறவில்லை
தாம்பத்யம்!

துணைவிக்கு
துணையானது
தோள்கொடுக்கும் வாழ்க்கை!

இணை சேர்ந்ததும்
தொடங்கியது துணையுடனான
பயணம்!

நெடிய பயணம்
மடியவில்லை
அன்பு!

 தடம் மாறும் சமூகம்
தடுமாறவில்லை
தம்பதியர்!

திடம் குறைந்து போயினும்
விடவில்லை
வாழ்க்கைப்பயணம்!

துணையிருப்பின்
துரும்பாகும்
துயரங்கள்!

இணைந்து பிரிபவர்கள் முன்
இமயம் ஆனது
முதுமை தம்பதியர்!

வாழ்க்கை தேடலில்
வழித்துணை வந்தது
இல்லறம்!

இளகும் இளசுகள் காதல்!
விலகாமல் இறுகியது
முதுமையின் காதல்!

 நடை தளர்ந்தாலும்
 தவறவில்லை
 நடைமுறை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. அன்பு ஒன்னுதாங்க எப்பவும் நிலைச்சிருக்கும்..

  ReplyDelete
 2. நடை தளர்ந்தாலும்
  மனந் தளரா
  தம்பதிகளைப்
  போற்றுவோம்

  ReplyDelete
 3. //இளகும் இளசுகள் காதல்!
  விலகாமல் இறுகியது
  முதுமையின் காதல்!//
  சத்தியமான வரிகள். அருமையான ஆக்கம் பகிர்வுக்கு நன்றி சகோதரரே..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2