பிரியாணி சமைக்கும்போது மூக்கை பிடிச்சிக்கிட்டு சமைப்பது ஏன்? ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!


1.நம்ம தலைவருக்கு சிறையில முதல்வகுப்பு கொடுத்திருக்க கூடாது!
  ஏன்?
ரிலீஸ் ஆகறப்ப முதல்வகுப்பு படிச்சதா டிசி கேக்கறார்!
                             ஏ. கீதா.

 2.இந்த ப்ளாஸ்டிக் சர்ஜன் சரியான குறும்பு பேர்வழி!
நிஜமாவா?
பிரபல நடிகைகளின் பழைய தொப்பைகள் விலைக்கு கிடைக்கும்னு போர்டு மாட்டியிருக்காரே!
                        டி. பிரான்ஸிஸ்கோ

 3.எதுக்கு தலைவரு எல்லா எம்.எல்.ஏவையும் நல்லா கறி மீன் முட்டையெல்லாம் சாப்பிட சொல்றாரு?
அடுத்த வாரம் சட்ட சபையில பலத்த நிரூபிக்கணுமாம்!
                         அர்ஜுன் ஸ்ரீதர்.

4.சார் எனக்கு சிங்கக்குட்டியாட்டம் ஒரு பையன், புலிக்குட்டியாட்டம் இன்னொரு பையன்!
 அப்ப மனுச ஜாடையில ஒண்ணைக்கூட பெத்துக்கலையா!
                         சீத்தா தம்பி.

 5.      ஸ்கூல் பசங்களுக்கு முட்டை போடறோம்னு எதிர்கட்சிதலைவர் சொன்னதும் தலைவர் சுதாரிச்சு எதிர் அறிக்கை விட்டுருக்கார்!
         என்னன்னு?
நான் ஆட்சிக்கு வந்தால் நூற்றுக்கு நூறே போடறேன்னு!
                                சுபானு.

 6.      என் தோழியோட மாமியார் இறந்துட்டாங்க!
துக்கம் விசாரிக்க போறியா?
ம்ஹும்.. சந்தோஷம் விசாரிக்க போறேன்!
                         லட்சுமி.

7.பேஷண்டுக்கு சுகர், பிபி, ஜுரம், தலைவலி எதுவும் இல்லை… நார்மல்!
  அது போஸ்ட் மார்ட்டத்துக்கு வந்த பாடி டாக்டர்!
                         அனார்கலி.

 8.      தலைவர் என் சொத்துக்களோட நதி மூலம் பார்க்க ஆரம்பிச்சிட்டார்!
அப்புறம்?
நிதி மூலம் சரிபண்ணிட்டேன்!


 9.      பிரியாணி செய்யும் போது எதுக்கு மூக்கை பிடிச்சுக்கிட்டு நிக்கறே?
  நிமிஷமாவது தம் கட்டணும்னு எப்.எம் ரேடியோவில சொன்னாங்களே!
                          கில்பர்ட்

 10.      உன் பொண்டாட்டி கோபப்பட்டதும் எதுக்கு அவ காலிலே விழுந்து கும்பிடறே?
நான் தான் சொன்னேனே கோபம் வந்தா என் மனைவி பத்ரகாளி ஆயிடுவான்னு!
                        வி. சகிதா முருகன்.

11 .  எனக்கு பிரியாணி ஆசை வந்தா என் மனைவிகிட்டே சொல்லி செய்ய சொல்லிடுவேன்!
ஒரு எட்டு கடைக்கு போய் சாப்பிட்டுக்கலாமே!
 கடையில சாப்பிட்டா திரும்ப திரும்ப பிரியாணி ஆசை வருமே!
                       வீ.விஷ்ணுகுமார்.

 12.  எதுக்காக உன் தம்பியை அடிச்சே?
நான் ஒரு பெண்ணை காதலிப்பது தெரிஞ்சதும் வேணும்னே அவளை அக்கான்னு கூப்பிடுறான்டா!
                           சி.பழனிச்சாமி.

 13.  தலைவரு விவரம் புரியாதவரா இருக்காரு!
எதவச்சு அப்படி சொல்றே?
சினி பீல்ட குத்தகைக்கு எடுத்து சாகுபடி பண்ணலாமான்னு கேக்கறாரு!
                     கே. சந்திரசேகரன்.

 14.நம்ம டாக்டர் சரியான வழிசல் கேசுன்னு எப்படி சொல்றே?
  ஆஸ்பத்திரியிலே வார்டு கேர்ள் தான் போட்டிருக்காருன்னா பாரேன்!
                    வைகை ஆறுமுகம்.

 15. அந்த டாக்டர் அரசியல் ஈடுபாடு உள்ளவரா?
  எப்படி கண்டு பிடிச்சீங்க?
      உடம்பை பரிசோதிக்கணும்னு சொல்றதுக்கு பதிலா உடம்பை ரெய்டு பண்ணணும்னு சொல்றாரே!
                             பொன் சரவணகுரு.

 16  அந்த வக்கில் ஒரு போலி!
     எப்படி சொல்றே!
   வழக்கு தொடுக்க நார் இருக்கான்னு கேட்கிறார்!
                    கே.ஆர் பத்மா.

 17.  மாப்பிள்ளை பொறியாளர்னு சொன்னதை நம்பி பெண்ணை கொடுத்தது தப்பா போச்சு!
ஏன் என்ன ஆச்சு?
 தெரு தெருவா பொரி விக்கிறாரு!
                    பச்சைமணிமைந்தன்.

 18.  ஆபரேசன் பண்ணினதும் இப்படி எல்லாம் எழுந்து நடந்தா தையல் பிரிஞ்சிடும்!
அவ்வளவு மோசமான நூல்ல ஏன் தைச்சீங்க டாக்டர்?
               பி. சீனிவாசன்.

 19.  அந்த டாக்டர் ரொம்ப வெளிப்படையானவர்னு எப்படி சொல்றே?
பிரசவ ரூமை பிறப்பு அறைன்னு ஆபரேசன் ரூமை இறப்பு அறைன்னு எழுதி வைச்சிருக்காரே!
                            ராசி.

 20.  அந்த டாக்டரோட தம்பி சொந்தமா லேப் வச்சிருக்காரு!
அதுக்காக டெம்ப்ரேச்சர் செக் பண்ணக் கூட லேபுக்கு எழுதித் தர்றது நல்லாவா இருக்கு!
                           வி. சாரதி டேச்சு.

நன்றி :தினமலர் வாரமலர் பழைய இதழ்கள்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

   Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2