ஹைக்கூ பூக்கள்!

ஹைக்கூ பூக்கள்!

வாழ்விலும் சாவிலும்
வந்து வாழ்த்தின
பூக்கள்!

மகிழ்வித்து
மகிழ்ந்தன
மலர்கள்!

விருந்துண்டன
கண்கள்
மலர்கள்!

உலகிற்கு
வண்ணங்கள் அறிமுகம்
பூக்கள்

வாசம் வீசியதும்
பாசமான வண்டுகள்

பூக்கள்!

மறைந்தாலும்
மணத்தன
பூக்கள்!


விலை மகளான பூக்கள்
விரக்தியில் வாடின
செடிகள்!

தங்கம் திருடின வண்டுகள்
மஞ்சளாய் ஜொலித்தது
சரக்கொன்றை!


முடி சூடா மலர்கள்
அழகிழந்தன
கூந்தல்கள்!

நகை புரிந்தன சிகை
கூந்தலில்
மல்லிகை!

இறங்கி வராவிட்டால்
ஏறிவிடுகிறது விலைவாசி!
மழை!

சவலையான பூமி
பெய்யவில்லை
மழை!

 
குளிரெடுத்த மேகத்தால்
குளிர்ந்து போன பூமி!
மழை!

 
விதைத்தவன் சும்மா இருக்க
அறுவடை செய்தது பூமி!
மழை!

கடல் நீரைக்
குடி நீராக்கியது
மழை!


மேகப் பூக்கள் பூத்ததும்
மணத்தது மண்!
மழைத்தூறல்!

Comments

 1. irandu sinthanaikalum ...
  silirkka seythathu..

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை...

  ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. சகோதரருக்கு வணக்கம்..
  பூக்களும் மழையும் மனதோடு மகிழ்த்து வாசத்தை தந்து செல்கிறது பூக்களிடமிருந்து தன் வாசம், மழையிடமிருந்து மண்வாசம். கவிதை மிக நன்றாக உள்ளது. எனது வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2