அப்பாவுக்கு ‘லிப்லாக்’ கிஸ் கொடுக்கத்தெரியாதான்னு பையன் கேட்டா என்ன அர்த்தம்? ஜோக்ஸ்1.      எங்க தலைவர் அரசியல்ல ‘பாலித்தீன்’ மாதிரி!
புரியலையே!
அவரை யாராலும் அழிக்க முடியாது!
                  பி.பாலாஜிகணேஷ்

2.      தலைவர் ஜெயில்லேர்ந்து தப்பிச்சிட்டு அதை எப்படி சமாளிக்கிறார் பாருங்க.
என்ன சொல்றாரு?
ஜெயிலர் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம போயிட்டாரு. அதனால அதைக் கண்டிச்சு நான் வெளிநடப்பு பண்ணிட்டேன்னு சொல்றாரு!
                     பி.பாலாஜிகணேஷ்.
3.      செயலாளர் ஒருத்தர் தலைவர் கூட இருக்காரே.. அப்புறம் அது என்ன நினைவூட்டாளர்?
தலைவர் இப்ப எந்த கட்சியிலே இருக்காருன்னு அப்பப்ப அவர்தான் நினைவூட்டுவாராம்!
                         கிரிஜாமணாளன்.

4.என்ன கமலா சோப்புல நுரையே வரமாட்டேங்குது?
 அது சோப்பு இல்லீங்க! தீபாவளிக்கு நான் சுட்ட மைசூர்பாகு!
                    பி.பாலாஜிகணேஷ்.

5.எங்க மேனேஜர் குழந்தை மாதிரி!
  அப்படியா?
ஆமாம், லஞ்ச் டைம்ல கூட நான் ஊட்டிவிட்டாதான் சாப்பிடுவாரு!
                       வானவில் மூர்த்தி.

6.நான் சொல்லலை தலைவர் அல்பம்னு?!!
   ஏன் என்னாச்சு?
அவர் மேல வீசின தக்காளியை எல்லாம் மீட்டிங் முடிஞ்சதும் பொறுக்கி எடுத்துட்டு போக கோணி கொண்டுவந்திருக்காரு பார்!
                      எஸ்.எஸ். பூங்கதிர்.

4.      தலைவரே ஊர் முழுக்க உங்களுக்கு கெட்ட பேரு!
அதனால என்ன? பேரை மாத்திவச்சிகிட்டா போச்சு!
                       ஆர்.விஸ்வநாதன்.

5.      அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
மைனர் ஆபரேசன்னா கத்தியை வச்சும் மேஜர் ஆபரேசன்னா அருவாள வச்சும் பண்ணனும்கிறாரே!
                      டி. செல்வன்.

6.      புலவரே தாங்கள் எப்படி மெட்டுக்குப் பாட்டா? அல்லது பாட்டுக்கு மெட்டா?
இரண்டும் இல்லை மன்னா! தாங்கள் கொடுக்கும் துட்டுக்கு பாட்டு!
                        பர்வீன் யூனுஸ்.

7.      அப்பாவுக்கு லிப்லாக் கிஸ் கொடுக்க தெரியாதாம்மா?
இதையெல்லாம் ஏண்டா கேக்குற?
எதிர்வீட்டு ஆண்ட்டிக்கு எப்பவும் ப்ளையிங் கிஸ் கொடுக்கிறாரே அதான் கேட்டேன்!
                         பர்வீன் யூனுஸ்.

8.      தலைவர் இவ்வளவு விவரம் இல்லாத ஆளா இருப்பாருன்னு நான் நினைக்கவே இல்லை!
ஏன் இப்படி சொல்றே?
ஆப்பிள் புது போன் வந்திருக்குன்னு சொன்னேன். அப்ப எனக்கும் ரெண்டுகிலோ வாங்கிகொடுங்கிறார்!
                         வி.சகிதாமுருகன்.

9.      புலவரோடு மகாராணியார் ஓடிப்போய்விட்டார் மன்னா!
அப்படியா? ஒரே சமயத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி!
                    கோவை நா.கி.பிரசாத்

10.  டைட்டில் கார்டு போடும்போதே இது மன்னரை பற்றிய படம்னு எப்படி கண்டுபிடிச்சே?
இந்த படம் யார் முதுகையும் புண்படுத்தி எடுக்கப்பட்டதில்லைன்னு டைட்டில்ஸ் போடுறாங்களே!
                    ஆர்.பி.ஜெயச்சந்திரன்.

11.  தெரியாத்தனமாக எதிரி மன்னன் நமக்கு கொசுமாதிரின்னு நம் மன்னரிடம் சொல்லித் தொலைத்துவிட்டேன்!
   ஏன் என்னவாயிற்று மந்திரியாரே!
   மன்னர் கொசுபேட்டோடு போருக்கு கிளம்பிட்டாரே!
                        ஆர்.பி.ஜெயச்சந்திரன்.

12.  எதிரிப்படை நெருங்குகிறது என எப்படி கூறுகிறாய்?
நம் மன்னரின் தொடை நடுங்குகிறதே!
                       நா.கி.பிரசாத்.

13.  உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள்!
 தனுஷ் மாதிரி இருக்கிற உங்களை எல்லோரும் கனம் கோர்ட்டார் அவர்களேன்னு ஏன் கூப்பிடறாங்க?
                             பர்வீன் யூனுஸ்.

17.தலைவர் உண்ணாவிரதத்தோட மவுன விரதமும் இருக்க ஆரம்பிச்சுட்டாரே என்ன விசயம்?
பிரதமர் ஆகறதுக்கு ஆசை வந்துடுச்சாம்!
                         தி. அசோகன்.

18.பேஷண்டுக்கு இந்த மருந்துகளை கொடுங்க! நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்!
  டாக்டர் நீங்க பண்ணினது ஆபரேஷன் இல்ல பிரேதப்பரிசோதனை!
                          அ.ரியாஸ்.
19. இந்தாருங்கள் புலவரே! உங்கள் பாட்டுக்கு ஒரு நாணயம்!
  கவரிங் மாதிர் இருக்கிறதே மன்னா!
 நீர் பாடியது மட்டும் ஒரிஜினலா என்ன?
                       லெ.நா.சிவக்குமார்

 20.      தலைவர் நீதிபதியை டென்ஷன் ஆக்கிட்டாராமே எப்படி?
      தீபாவளி சிறப்பு முன் ஜாமீன் கேட்டாராம்!
                            பி.பாலாஜிகணேஷ்.

 21.      இந்த பட்டாசு கடைக்காரர் ரொம்ப கறார் பேர்வழின்னு எப்படி சொல்றே?
டாக்டர் சீட்டு இருந்தாத்தான் பாம்பு மாத்திரை தருவாராம்!
                        சி.பி.செந்தில்குமார்.

 22.      ஆஸ்பத்திரியிலே நலம் விசாரிக்க போன தலைவருக்கு மீடியா கிட்ட மதிப்பு குறைஞ்சு போச்சு!
என்ன செஞ்சார்?
நோயாளிகளை விட நர்ஸ்கள் கிட்ட அதிக நேரம் நலம் விசாரிச்சு இருக்கார்!
                       லெ.நா.சிவக்குமார்.

 23.      சார் என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்க முடியாது. அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சுடும்!
யோவ்! இதையெல்லாம் ஏன் பேங்க்ல வந்து சொல்றே?
நம்ம கஷ்டத்த சொன்னாத்தான் பேங்க்ல லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!
                              சிவகாசி சுரேஷ்.

 24.      கல்யாணத்துக்கு போன தலைவர் ஏன் கோவமா இருக்கார்?
தலைவரும் ஜெயிலும் போல இணைபிரியாம இருங்கன்னு மணமக்களை வாழ்த்திப் பேசினாங்களாம்!
                                 கே. ஆனந்தன்.

நன்றி}  தி.இந்து (தமிழ்)
    தங்கள் வருகைக்கு நன்றி !பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Comments

  1. வணக்கம் சகோதரரே.
    அத்தனை நகைச்சுவைகளும் அருமை. அழகாக தொகுத்து வரிசைப் படுத்திய விதம் நன்று. அருமை நண்பரே தொடர வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  2. அதுல வந்தது இங்க எதுக்கு நண்பா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2