கேதார்நாத் சீர்க்குலைவிற்கு மனிதனே காரணம்:விஞ்ஞானிகள் பகீர் தகவல்

வட இந்தியாவில் குறிப்பாக ஜார்க்கண்டின் இமயலையை ஒட்டிய இந்துக்களின் புனித யாத்திரை இயற்கை ஏற்படுத்தி உள்ள சீர்குலைவுக்கும், த வெள்ள பேரழிவிற்கு காரணம் இயற்கை மட்டுமல்ல மனிதர்களாகிய நாமும் தான் விஞ்ஞானிகள் அதி்ரச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். . 
இயற்கை பேரழிவு
உத்தர்காண்ட் மாநிலத்தில் யாத்திரைக்குப் போன சுமார் 60 ஆயிரம் பேர் கேதர்நாத்துக்கும் ருத்பிரயாக்குக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருப்பதாக செயற்கைக் கோள் படங்கள் தெரிவிக்கின்றன. அதே செயற்கைக் கோள் புகைப்படங்கள் சில ஒப்பீடுகளையும் நமக்கு அம்பலப்படுத்துகின்றன. 1980களில் கேதார்நாத் கோயில் அருகே சில கட்டிட்டங்கள் மட்டும்தான் இருந்தன. இப்போது இமயமலையின் உச்சியான கேதர்நாத்தையே ஒரு நகரமாக உருவாக்கி உள்ளனர். இது தொடர்பாக இஸ்ரோ அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. அவர் கூறியிருப்பதாவது : 
பனி மலைஉருகியது
கேதர்நாத் கோயிலை ஒட்டி ஓடுகிற மந்தாகினி ஆற்றின் போக்கை கடந்த பல ஆண்டுகளாக திசை திருப்பிவிட்டதன் விளைவுதான் இந்தப் பேரழிவு; கோயிலின் பின்புறம் இருக்கும் கேதர் டோம் எனப்படும் பனிச்சிகரம் உடைந்து கோயிலில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்பால் ஏரியில் மூழ்கி உள்ளது; அந்த பனிச்சிகரம் உருகி பனிச்சுனாமியாக உருவெடுத்து சர்பால் ஏரியையும் அதை ஒட்டிய மந்தாகினி ஆற்றிலும் பேரலைகளை உருவாக்கியதாலேயே இந்த கடும் வெள்ளப் பெக்கு ஏற்பட்டுள்ளது; இமயமலையில் ஓடுகிற மந்தாகினி ஆறு, அலக்நந்தா, பகீரதி போன்றவைகள் அனைத்தும் இணைந்துதான் கங்கையாக, யமுனையாக சமவெளிக்கு ஓடி வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மீண்டும் புனித யாத்திரை எப்போது
தற்போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கேதார்நாத் கோயிலைத் தவிர சுற்றி உள்ள அனைத்து பகுதிகளை வாரி எடுத்து சுத்தம் செய்தாள் இயற்கை அன்னை. இந்த பேரழிவு காரணமாக இன்னும் ஓராண்டுக்கு கேதார்நாத்திற்கு யாத்ரீகர்கள் யாரும் வர வேண்டாம் என உத்தர்கண்ட் முதல்வர் விஜய் பகுகுனா உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்துக்களின் புனிதப் பயணம் மீண்டும் எப்போது துவங்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. 
நீர்மின்திட்டத்திற்காக ஆறுகள் ஆக்கிரமிப்பு
கங்கை, யமுனையின் துணையாறுகளின் போக்கை மாற்றி அங்கு 70 நீர் மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 20 கி.மீ., தூரத்திற்கு 2 சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நதிகளின் திசைகள் மாற்றப்பட்டுள்ளதால் அதனை சுற்றி உள்ள நிலப்பகுதிகளும நீரில் மூழ்கி வருகின்றன. அதுமட்டுமின்றி சமீப காலமாக இமயமலைக்கு யாத்திரை செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் இயற்கை சீர்குலைக்கப்பட்டுள்ளது. இயற்கையை அழிக்கும் மனித இனத்தை இயற்கை அழிக்க துவங்க உள்ளது என்றால் அது மிகையாகாது.

நன்றி: தினமலர்

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!