தோஷமும் சந்தோஷமும்! படிச்சதில் பிடிச்சவை!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் வித்வான் வேடத்தில் தோன்றினார். 

வித்வானுடைய மனைவியாக வந்த நடிகை அவரைக் கொஞ்சம் திண்டாட விட வேண்டும் என்று எண்ணி,""ஏன்னா, நீங்களும் பல ராஜாக்கள் கிட்டே சன்மானம், சால்வையெல்லாம் வாங்கிண்டு வந்துட்டேள். பெரிய வித்துவான்னு பேரும் வந்துடுத்து.

ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம்.

"
தோஷம்" என்கிற வார்த்தைக்கும், "சந்தோஷம்" என்கிற வார்த்தைக்கும் என்ன வித்தியாசம்? சொல்லுங்கோ! பார்க்கலாம்!'' என்றாள்.

ஒரு நிமிஷம் யோசித்தார் என்.எஸ்.கே. ""அடியே, நீ கேட்ட இந்தக் கேள்விக்கு வியாக்கியானம் இல்லாமல் வித்தியாசத்தைச் சொல்ல முடியாது. 

கவனமாய்க் கேள்! 

உன்னை நானாகக் கிணற்றிலே பிடிச்சுத் தள்ளினால் அது "தோஷம்"! 

நீயாக விழுந்துவிட்டாலோ எனக்கு "சந்தோஷம்"! சரிதானா?'' என்றார். 

கொட்டகையில் எழுந்த சிரிப்பொலி அடங்க வெகுநேரமாயிற்று.

ஓரிடத்தில் ஒரு இந்தியர், ரஷ்யர், அமெரிக்கர் மூவரும் கூடி, இறைவனை பிரார்த்தித்தனர். கடவுள் தோன்றினார்.

ரஷ்யர், “ரஷ்யா எப்போது முன்னேறும்?’ என்று கேட்டார்.
இன்னும் 50 ஆண்டு ஆகும்என்றார் கடவுள். “அதைப்
பார்க்க நான் இருக்க மாட்டேனேஎன்று கூறி அழுதார்,
ரஷ்யர்.

அடுத்து, அமெரிக்கரும் அவ்வாறே கேட்க, கடவுள்,
இன்னும் 50 ஆண்டு ஆகும்என்றார்.
அமெரிக்கர் அழுதுகொண்டே, “அவ்வளவு காலம் வாழ்ந்து நான்
அதைப் பார்க்க முடியாதே!’ என்றார்.

கடைசியாக இந்தியர், “எங்கள் இந்தியா எப்போது முன்னேறும்?’
என்று கேட்டது தான் தாமதம்,
கடவுள் அழுது கொண்டே,
ம்ம்...ம்ம்ம்....“அதைப் பார்க்க நான் இருக்க மாட்டேனே…’ என்றார்.
                                                  ஒரு காலேஜ்ல பசங்க பொண்ணுங்க ஹாஸ்டலுக்குள்ள அடிக்கடி போறாங்கன்னு நிறைய கம்ப்ளைன்ட்.

அதுக்கு ஸ்ட்ரிக்ட்டா நடவடிக்கை எடுக்க முடிவு பண்ணி அதை சொல்ல பிரின்ஸிபால் ஒரு கிளாஸ்க்குள்ள போனாரு.

மாணவர்கள் எல்லாரும் அமைதியாயிட்டாங்க,"
நீங்க லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள அடிக்கடி போறதா கம்ப்ளைன்ட் வந்திருக்கு இனி யாராவது அப்படி நுழையறது கண்டுபிடிக்கப்பட்டா
500
ரூபா ஃபைன்" அப்டின்னுட்டு நிறுத்தினார்.

பசங்களுக்குள்ள பரபரன்னு சத்தம்,

"
இரண்டாவது தடவ போறது தெரிஞ்சா 1000 ரூபா அபராதம்"
லேசா பசங்களுக்குள்ள முணுமுணுப்பு வந்தது

ரியாக்ஷன்ல திருப்தியான பிரின்ஸிபால் திரும்ப கடுமையான குரல்ல சொன்னார் "அதையும் மீறி திரும்ப மாட்டினா 2000 ரூபா கட்டணும்"

இந்த முறை சத்தமில்லாமல் ஒரே... அமைதி, பின்னால இருந்து ஒரு பையன் மட்டும் கேட்டான்,

"
ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"

நன்றி: ரிலாக்ஸ் ப்ளிஸ் முகநூல் பக்கம்.                                                        தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. என்.எஸ் . கிருஷ்ணன் என்றாலே தனி உற்சாகம் வந்து விடும் மக்களிடையே. சிறப்பு இது போன்ற பதிவுகள் தொடரட்டும்.

    ReplyDelete
  2. NSK - எப்போதும் சிந்திக்க வைக்கும் சந்தோஷமான நகைச்சுவை தான்...

    ReplyDelete
  3. செம ஜோக்ஸ் அண்ணா சிரிப்புடன் மகிழ்ந்தேன் நன்றிகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2