புகைப்பட ஹைக்கூ 33
புகைப்பட ஹைக்கூ 32
கரை போட்டது
கடற்கரைக்கு
மக்கள் வெள்ளம்!
மக்கள் வெள்ளத்தில்
மறைந்து போனது
கடல்!
உப்பென்றாலும்
உவகைதான்!
கடல்!
பேரலைகளை
பெயர்த்தது
மக்கள் பேரலை!
மாசில்லா காற்று
காசில்லா காற்று
தந்தது கடற்கரை!
மக்கள் கூட்டம் கண்டு
மயங்கி வந்தது
கடல்!
கறுத்தாலும்
ஈர்த்தது
கடல்!
அள்ளிச் சென்று
தள்ளிவிட்டது
கடலலை!
ஓயாத அலைகள்!
ஓய்வின்றி ரசித்தனர்
மக்கள்!
கால் தொட்ட அலைகள்
கரைந்தது
மனசு!
பொழுது கரைகையில்
அதிகரித்தது கூட்டம்
மெரினா!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த
கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
சிறப்பான சிந்தனைகளைத் தாங்கி வந்த கைக்கூ அருமை !வாழ்த்துக்கள் சகோ மேலும் தொடரட்டும் .
ReplyDeleteஅனைத்து ஹைக்கூகளும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல கற்பனைகள்
ReplyDeletenalla irukku..
ReplyDeleteஅள்ளிச் சென்று
ReplyDeleteதள்ளிவிட்டது
கடலலை!//
மிகவும் ரசித்த ஹைக்கூ....
அருமையான ஹைக்கூக்கள்....
ReplyDelete