உங்களின் தமிழ் அறிவு எப்படி?! பகுதி 19
உங்களின் தமிழ்
அறிவு எப்படி?! பகுதி 19
தமிழின் சுவையை
கடந்த பதினெட்டு பகுதிகளாக பல்வேறு விதங்களில் அனுபவித்து வருகிறோம். இப்போது
புழக்கத்தில் உள்ள சில ஊர்ப்பெயர்கள் கடவுள் பெயர்கள் தமிழ்மொழி போல இருந்தாலும்
வடமொழிக் கலப்பில் இருக்கும். அப்படி சிலவற்றின் வடமொழிப்பெயரையும் அதற்குண்டான
தூயதமிழ் பெயரையும் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்.
வடமொழி தமிழ் மொழி
1.ஸ்ரீரங்கம் திருவரங்கம்.
2.சிதம்பரம் திருச்சிற்றம்பலம்.
3.வேதாரண்யம்- திருமறைக்காடு.
4.விருத்தாசலம் திருமுதுகுன்றம், பழமலை
5.ஸ்ரீகாளஹஸ்தி காளகூடம்.
6.மீனாட்சி அங்கயற்கண்ணி
7.தர்மசம்வர்த்தினி- அறம்வளர்த்த நாயகி
8.ரௌத்திர
துர்க்கை- எரிசினக்
கொற்றவை.
9.பஞ்சநதீஸ்வரர் ஐயாறப்பர்.
10விருத்தகிரிஸ்வரர் பழமலை நாதர்
11.
அஞ்சனாட்சி-
மைவிழியம்மை
12. நடராஜன் ஆடலரசன்.
13 வேதபுரிஸ்வரர். திருமறை நாதர்.
14 மாத்ருபூதம் தாயுமானவர்
15 வண்மீகநாதர் புற்றிடம்கொண்டான்.
இப்படி தமிழ் சொற்கள் கடவுளருக்கும் ஊரிற்கும் உண்டு. காலப்போக்கில்
அவை மறுவின.
சில மரபு சொற்களை கீழே பார்ப்போம். இவை மரபாக
தொன்று தொட்டி வழங்கி வருதலால் இப்பெயரை அடைந்தன.
பலாப் பிஞ்சு- பலாமூசு
வாழைப்பிஞ்சு- வாழைக்கச்சல்
முருங்கைப்பிஞ்சு- முருங்கைசாடு
அவரைப்பிஞ்சு- அவரைப்பொட்டு
மாம்பிஞ்சு மாவடு
இளம்தேங்காய்- வழுக்கை
முற்றிய தேங்காய்- நெற்று.
இனி இலக்கிய
சுவைக்கு போவோமா?
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
இது என்ன? தா, தி என்று எழுத்துக்களை
கோர்த்து என்ன விளையாடுகிறீர்கள் என்று
தானே நினைக்கிறீர்கள். இது கவி காளமேகத்தின் கவிதை விளையாட்டு. த என்ற எழுத்திலேயே
பாடவேண்டும் என்று சவால் விட்டவருக்கு காளமேகம் பாடிய பாடல் இது. இதன் பொருள் என்ன?
பார்ப்போமா?
பூக்களை மேயும் வண்டினம் குறித்து காளமேகம்
இவ்வாறு பாடுகிறார். ஒவ்வொரு பூவாக தத்தி தாவி சென்று பூக்களில் உள்ள தாதுவான
மகரந்தத்தை உண்ணும் வண்டே! ஒரு பூவிலுள்ள
தாதுவை உண்ட பின் தாவி அடுத்த பூக்களை நாடுகிறாய்! நீ உண்ட தித்திப்பான தாதுக்களில் மிகவும்
தித்தித்த தாது எது? என்று வண்டை கேள்வி கேட்கிறா காளமேகம்.
அருமையாக இருக்கிறது அல்லவா?
படித்து தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிருங்கள்! அடுத்த
பகுதியில் இன்னும் சிறப்பான தகவல்களுடன் சந்திப்போம்! நன்றி!
சில தமிழ்ப் பெயர்கள் அறியாதவை அறிந்துகொண்டேன்.
ReplyDeleteகாளமேகப் புலவரின் பாடல் அருமை
தொடர்க
நன்றி முரளி!
Deleteகவி காளமேகத்தின் கவிதை விளையாட்டு உட்பட அனைத்தும் அருமை...
ReplyDeleteநன்றி DD சார்!
Deleteஆஹா அழகழகான தமிழ் சொற்கள் கண்ணுக்கு மனதுக்கும் குளிர்ச்சி...!
ReplyDeleteஇன்னும் தொடருங்க நண்பா...!
நன்றி மனோ!
Delete//இப்படி தமிழ் சொற்கள் கடவுளருக்கும் ஊரிற்கும் உண்டு. காலப்போக்கில் அவை மறுவின// எனக்கு இதில் பல சந்தேகங்கள் உள்ளன.
ReplyDeleteஎன்ன சந்தேகம் நண்பரே! கூறினால் எனக்குத்தெரிந்த விளக்கமோ பதிலோ அளிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Delete