புகைப்பட ஹைக்கூ 36

புகைப்பட ஹைக்கூ


 ஓடி வந்து
 நனைத்தது
 அருவி!

வீழ்ச்சியை கண்டதும்
எழுந்தது மகிழ்ச்சி!
அருவி!

மலையைப் பிளந்தது
மலைக்கவைத்தது
அருவி!

மழைமகளை தழுவிய
மலைமகள்!
அருவி!

இரைச்சல் போட்டாலும்
இன்பம்தான்
அருவி!

குளிர்வித்து
குதூகலித்தது
அருவி!

பள்ளத்தில் விழுந்தாலும்
உள்ளத்தில் நிறைந்தது
அருவி!

பள்ளம் நோக்கி பயணம்
இல்லைஇதற்கு நிதானம்
அருவி!

மூலிகைகளை நனைத்து
முகட்டில் குதித்தது
அருவி!

நுரைத்து வந்தாலும்
புளிக்கவில்லை
அருவி!

மலையிலே தவழ்ந்து
மண்ணிலே வீழ்ந்து
மனதிலே இடம்பிடித்தது அருவி!

ஆரவாரத்துடன்
ஆடிவந்தது
அருவி!

பெறுக்கெடுத்த மழையால்
உயிர்பெற்றது
அருவி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. மனதை குளிர்வித்தது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அனைத்து ஹைக்கூக்கும் அருமை அண்ணா

  என்ன எண்ணத்தில் தோண்டியது இதோ

  இயற்கைக்கு
  பல் துலக்கியது
  அருவி

  ReplyDelete
 3. அனைத்தும் அழகிய குறுங்கவிகள்!
  வாழ்த்துக்கள்!

  கவிக் கருத்தாகி காண்பவர்க்கு
  களிப்பேற்றும் கானகத்துத் தேவதை!

  ReplyDelete
 4. அருவி அருமைக்கவிதை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அருவியாய் கொட்டுகிறது கவிதை...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!