புகைப்பட ஹைக்கூ 32
புகைப்பட ஹைக்கூ
அழகான பூ
அழுதது!
பள்ளிகள் திறப்பு!
இனிப்பு தந்து
அழுதது குழந்தை!
பள்ளிகள் திறப்பு!
பிள்ளைகள் அழுகையில்
தாயின் தவிப்பு
பிரித்தது பள்ளிகள் திறப்பு!
பிடுங்கி நடுகையில்
வாடியது மலர்
பள்ளிகள் திறப்பு!
கசந்தது பள்ளி
கற்கண்டு
குழந்தைக்கு!
நர்சரி பள்ளியில்
நடப்பட்டது
வீட்டு ரோஜா!
அறிவுக் கண் திறக்கையில்
உடைபட்டது
கண்ணீர்!
உறவுகள் பிரிந்து
உறவுகள் உருவாக்கியது
பள்ளி!
புது மண்ணில்
வாடிப்போனது ரோஜா!
பள்ளிப்பிள்ளைகள்!
கல்வி சுமையானதால்
கலங்கியது
பிஞ்சு!
நடை பயிலும் வயதில்
எடை கூட்டிய கல்வி!
கலங்கியது கன்று!
கலங்கி நின்று
காட்சிப்பொருளானது
பள்ளியில் குழந்தை!
குளிரூட்டம் செய்த பள்ளி
குமைந்து போனது
பிள்ளைக்கு!
விடுமுறை தீர்ந்ததும்
விதிமுறை நியாபகம்!
கலங்கும் குழந்தை!
தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
எல்லாமே அருமை.
ReplyDeleteஉடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே!
Deleteரசித்தேன்... இன்றைக்கேற்றவாறு சிந்தனை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteகாலத்திற்கேற்ற கவிதை.
ReplyDeleteசிறப்பு.
arumai..!
ReplyDelete