அமானுஷ்ய அனுபவங்கள்! பகுதி 3 ஆவியுடன் பேசினேன்!

அமானுஷ்ய அனுபவங்கள்! பகுதி 3

என் வாழ்க்கையில் நடந்த சில அமானுஷ்ய நிகழ்வுகளை கடந்த இரு பகுதிகளில் பகிர்ந்து கொண்டேன். கடவுள், பேய், பிசாசு, ஆவி, பூதம் போன்றவைகளை அனுபவத்தால் உணரமுடியுமே தவிர சொன்னால் விளங்காது. புரட்சி பேசுவோர் பேய் இல்லை! கடவுள் இல்லை என்று வாதிடலாம். அவர்களோடு வாதிட முடியாது. அவர்கள் இல்லை என்று நம்புகிறார்கள். நான் இருக்கிறது என்று நம்புகிறேன். நம்பிக்கையில் தான் இருக்கிறது வாழ்க்கை.
      என் தந்தை ஒரு உபாசகர் என்று கூறி இருந்தேன். அவரிடம் சில தெய்வங்கள் பேசும். சில சக்திகள் இருந்தும் ஏழையை பணக்காரன் ஆக்குதல் போன்று சினிமாவில் வரும் ஜாலங்கள் ஏதும் செய்தது இல்லை. நோய் என்று வருவபருக்கு மந்திரித்து திருநீறு தருவார். சிலசமயம் கயிறு மந்திரித்து தருவார். உடல் நிலை சுமாராகிவிட்டதாக கூறி அவரிடம் நிறைய பேர் இன்றும் திருநீறு கேட்டு வருவர். அதற்காக கட்டணம் ஏதும் வசூலிப்பது இல்லை. இவரிடம் சில சக்திகள் இருப்பதால் எங்கள் குடும்பம் சில இன்னல்களை முன்னரே அறிந்து தவிர்த்துக் கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால் விதி வலியது என்பது உண்மை. இதனால்தான் அவரால் தன்னுடைய முதல் மனைவியை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அதே போல் என் தங்கையின் வாழ்க்கையும் இன்று கேள்விக் குறி ஆகிவிட்டது.
       மந்திரத்தால் மாங்காய் பறிக்க முடியாது என்பார்கள்! பறிக்கலாம்! ஆனால் நம்விதி நமக்கு சாதகமாக அமைந்தால் என்று நான் கூறுவேன். என்னதான் மந்திரம் தந்திரம் எல்லாம் இருப்பினும் நமது ஊழ்வினை, தலைவிதியை அனுபவித்தே தீரவேண்டும் என்பதை சில வருடங்களாகவே வாழ்க்கை எனக்கு உணர்த்தி வருகிறது.
         இந்த அமானுஷ்ய அனுபவங்களில் இன்னொன்று இப்போது பார்ப்போம். ஆவியுடன் பேசலாம் என்பார்கள் ஒரு காலத்தில் ஆவி அமுதா என்றெல்லாம் பேமஸாக உலா வந்தார்கள் இல்லையா? நானும் ஆவியுடன் பேசி இருக்கிறேன். அதை இப்போது பார்ப்போம்.
     ஆவியுடன் பேசுவதற்கு இருவர் தேவை. அதில் ஒருவர் குரு. அதாவது உபாசனை உள்ளவராக இருத்தல் நல்லது. இன்னொருவர் வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். சுத்தமானவராக இருத்தல் வேண்டும். ஒரு சதுரவடிவிலானா  கண்ணாடி பலகையை எடுத்து அதில் நான்கு புறமும் ஆங்கில எழுத்துக்கள் எழுதி வைக்க வேண்டும். காகிதத்தில் எழுதி ஒட்டிக் கொள்ளவும் செய்யலாம். நடு மையத்தில் ஒரு வட்டம் அமைக்க வேண்டும். அந்த வட்டத்தை மூடுமளவுக்கு ப்ளாஸ்டிக் மூடி அல்லது டம்ளர் எதுவாகினும் வைத்துக் கொள்ள வேண்டும்.
       
  இப்போது குருவானவரும் சிஷ்யரும்  அந்த பலகையின் எதிரே அமர்ந்து  மனதை ஒருநிலைப்படுத்தி  அந்த பலகையின் நடுமையத்தில் உள்ள மூடி மீது ஆள்காட்டி விரலை  வைத்து  கொள்ளவேண்டும். நமது குடும்பத்தில் இறந்து போனவரை அழைத்து பேச வேண்டும் என்று முடிவாகிவிட்டால் குடும்பத்தில் மூத்தவரை ஆவி உலகத்தின் தலைவர் என விளித்து அவரை இந்த மூடியில் வருமாறு தொடர்ந்து கூற வேண்டும். இவ்வாறு ஒரு ஐந்து நிமிடம் கூறி அழைத்தோம் என்றால் தன்னிச்சையாக மூடி நகர ஆரம்பிக்கும். வந்திருப்பது யார்? என்று கேட்டால் அந்த மூடி நகர்ந்து ஒவ்வொரு எழுத்தாக சென்று காண்பிக்கும். இதை பக்கத்தில் உள்ளவர்கள் எழுதிக் கொள்ளலாம். அப்புறம் அவரிடம் என்ன கேட்க வேண்டுமோ அதை கேட்கலாம். அப்போது மூடி நகர்ந்து எழுத்துக்களை அடைந்து பதில் அளிக்கும். பெரும்பாலும் ஆம், இல்லை என்ற வகையிலேயே பதில் அளிக்கும். சில சமயம் மூடி இலக்கில்லாமல் அலையும். அப்போது அந்த ஆவி கோபமாக இருப்பதாக அறியலாம். அதனால் மீண்டும் வேறு ஒரு ஆவியை அழைக்கலாம்.
  அந்த போர்டின் முன் அமர்பவர்களை மீடியம் என்பார்கள். சில மீடியத்தில் ஆவி பேசாது. ஆவி உலகில் இருண்ட உலகம் என்றும் உள்ளது. அதாவது நமக்கு இரவு என்பது போல அந்த ஆவிகளுக்கு இரவு நேரமாகும். அந்த நேரத்தில் ஆவி நம்மிடம் பேசாது.
     இந்த போர்டுக்கு ஓஜா போர்டு என்று பெயர். ஆவி அமுதா ஆவியையே நேரடியாக உடலில் செலுத்தி பதில் சொன்னார். அது வேறு வகை. நான் சொன்னது வேறு வகை. இந்த வகை முறையில் நானும் என் தந்தையும் இணைந்து இறந்து போன என் பெரியம்மாவிடம் பேசினோம்.அப்போது நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த சமயம். என் அக்கா (பெரியம்மா மகள்) திருமணம் நடந்தது. எங்களுக்கு திருமணத்திற்கு போகலாமா வேண்டாமா? என்று குடும்ப சண்டை காரணமாக ஒரு தயக்கம் இருந்தது. அதனால் பெரியம்மாவை அழைத்து பேசினோம். போகச்சொன்னார். சென்றோம்.
      இப்படி ஓரிரு முறை ஆவியுடன் பேசி உள்ளேன். கண்ணாடிப் பலகையில் நம்முடைய ஆட்காட்டி விரல் அழுந்தி இருக்க தானாக மூடி நகர்ந்து  செல்லும்போது ஒருவித பிரமிப்பு இருக்கும்.
    அதற்கடுத்த பிரமிப்பு என்னவென்றால் இறந்து போன எங்கள் தாத்தா என் தந்தை உடலில் வந்து பேசுவதுதான். அவர் என் தந்தை உடலில் வந்ததுமே அவரது குரல் நடை உடை பாவனை எல்லாம் தாத்தா போல் மாறிவிடும். இதை நான் மட்டும் அல்ல என் குடும்பத்தில் உள்ள அனைவருமே வியந்து பார்த்து உள்ளார்கள். குடும்ப பிரச்சனைகள் பலவற்றை தாத்தா தீர்த்து வைத்து உள்ளார்.
        இப்படி அமானுஷ்யங்கள் நிறைந்தது இந்த உலகம்! இதில் நான் முன்னரே சொன்னது போல நம்பிக்கை என்ற ஒன்றுதான் நமது வாழ்க்கை சக்கரத்தை சுழற்றி விடுகிறது.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. சுவாரசியமாகவும் இருக்கிறது

  ReplyDelete
 4. நீங்கள் சொவதை பார்த்தால் ஆவியுடன் எளிதாக பேசலாம் போல... ஆச்சர்யம் தான்.

  ReplyDelete
 5. இவ்வளவெல்லாம் வேணாம் பாஸ்.. உங்க போன எடுங்க.. பத்து நம்பர் டயல் பண்ணுங்க. உடனே ஆவிகிட்ட (அதாவது என்கிட்டே) பேசலாம். ;-)

  ReplyDelete
 6. ம்.அதிசயம். வியப்பு. ஒருமித்து மிரட்டுகிரது உங்கள் பதிவு.
  கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்படி இவ்வளவு விபரமாக உங்கள் மூலம்தான் இப்போது...

  பகிர்தலுக்கு நன்றி! தொடருங்கள்...

  ReplyDelete
 7. வியப்பாக இருக்கின்றது. தொடருங்கள்

  ReplyDelete
 8. ஊர்ஜா பலகை அல்லது ஓஜா பலகை குறித்து நிறையக் கேள்விப் பட்டிருக்கேன். :)))) ப்ளாஞ்செட் என்றும் சொல்வார்கள்.

  ReplyDelete
 9. அறிந்த உண்மை

  ReplyDelete
 10. அறிந்த உண்மை

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2