புகைப்பட ஹைக்கூ 34

புகைப்பட ஹைக்கூ


கல் மெத்தையில்
களைத்தவர்கள்
உறக்கம்!
 

உழைக்கும் இந்தியரின்
உறுதிமிக்க
படுக்கை!

ஓடிக் களைத்த ரயிலடியில்
உழைத்து களைத்தவர்கள்
படுக்கை!

கூடாரமானது
தொடர்வண்டி
கூலித்தொழிலாளர்கள்!
இருண்ட இந்தியா
உறங்குகிறது
தொடர்வண்டியடியில்!

தலையணையான
தண்டவாளம்!
தலையெழுத்தை தொலைத்த
தொழிலாளர்கள்!

ரயிலடியில் இடம்பிடித்தது
வறுமையின்
பிடி!

நிகழ்காலத்தை
தொலைத்து எதிர்காலத்தை தேடுகிறார்கள்
கூலித்தொழிலாளர்கள்!

வறட்சி தந்த
வீழ்ச்சி!
ரயிலடியில் தொழிலாளர்கள்!

 கல்லும் முள்ளும்
 கனவுக்கு எல்லை!
 கூலித்தொழிலாளர்கள்!

   புலம் பெயர்ந்தவர்களுக்கு
புகலிடமானது
ரயிலடி!

பொழுதெல்லாம் உழைத்தவர்கள்
பழுதான
ரயிலடியில்!

கற்குவியலில்
களைத்து உறங்குகிறார்கள்
உழைத்தவர்கள்!

கல்லாய் குத்தும் வாழ்க்கை
களைத்து போட்டது
படுக்கை!

 களைத்துப் படுத்தாலும்
 கவலையில் வரவில்லை!
 உறக்கம்!

 தண்டவாளமே தலையணை
 கல்லே மெத்தை!
 களைத்தவர்களை கலைக்கவில்லை உறக்கம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ரயிலடியில் இடம்பிடித்தது
    வறுமையின்
    பிடி!

    வெகுவாக கவர்ந்தது. அனைத்தும் சிறப்புங்க.

    ReplyDelete
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரர் சுரேஷ்!...

    எத்தனையோ வலைப்பூக்களில் உங்களைக் கண்டிருந்தபோதும் இன்றைய வலைச்சர அறிமுகத்துடன் உங்கள் வலைப்பூப் பக்கம் வந்தேன்.
    மிக அழகான சிறந்த சிந்தனைக் குவியல்களாய் இருக்கிறதே உங்கள் தளம்.
    அத்தனையும் அருமை!

    இங்கும்...

    மனதைத் தொடும் கவிதை படைத்துள்ளீர்கள்.
    அத்தனை வரிகளும் உள்ளத்தை ஊடறுத்துச் செல்கின்றன.

    //கல்லாய் குத்தும் வாழ்க்கை
    களைத்து போட்டது
    படுக்கை!//

    முள்ளாய்க்குத்தியது மனத்தில்...

    வாழ்த்துக்கள் சகோதரரே!...

    ReplyDelete
    Replies
    1. நன்றி இளமதி! முதல் முறை என் தளம் வருகை புரிந்தமைக்கும் கருத்துரை இட்டு உற்சாகப்படுத்தியதற்கும் மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்! நட்புடன் சுரேஷ்!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2