ப்ளீஸ்! இதெல்லாம் செய்யாதீங்க!

இதெல்லாம் செய்யக் கூடாதாம்!அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! எது நல்லது எது தீயது என்று ஆராயாமல் நம் சித்தம் போனபடி ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்து தர்ம சாஸ்திரம் என்னும் நூல்  சிலவற்றை செய்யக் கூடாது சிலவற்றை செய்யலாம் என அறிவுரைகள் வழங்குகிறது. இதை ஒரு பழைய புத்தகத்தில் படித்தேன். அதிலிருந்து சில குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
  இதெல்லாம் செய்ய வேண்டும்:
  ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சன்னியாசி முதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும்.

சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.

அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

சாப்பிடும் போது முதலில் இனிப்பு, உவர்ப்பு,புளிப்பு,, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின் நீர் அருந்த வேண்டும்.

வீட்டுக்குள் நுழையும் போது தலைவாசல் வழியாகத்தான் நுழைய வேண்டும்.

பசு மாட்டை கோமாதாவாக எண்ணி அம்மாட்டிற்கு புல் தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக் கீரை கொடுத்து வழிபட வேண்டும்.
எதிர்பாரா விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ பெண்கள் கற்பை இழந்துவிட்டால் புண்ணிய நதியில் 18 முறை மூழ்கி குளித்தால் தோஷம் நீங்கும்.

பசு, தேர், நெய்க்குடம், அரசமரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால் வலதுபுறம் சுற்றிச் செல்ல வேண்டும்.
இதெல்லாம் செய்யக் கூடாது!

கன்றுக் குட்டியின் கயிறைத் தாண்டக் கூடாது.

மழை பெய்யும் போது ஓடக்கூடாது.

தண்ணீரில் தன் உருவத்தை பார்க்க கூடாது.

நெருப்பை வாயால் ஊதக்கூடாது.

கிழக்கு மேற்கு முகமாக உட்கார்ந்து  மலஜலம் கழிக்கக் கூடாது.

சாப்பிடும் போது தவிர மற்ற நேரத்தில் இடக்கையால் தண்ணீர் அருந்த கூடாது.

இருட்டில் சாப்பிடக் கூடாது.

குரு ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கெல்லாம் செல்லும் போது வெறும் கையுடன் செல்லக் கூடாது.

இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ தரையிலோ படுக்க கூடாது.

வான வில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

மயிர், சாம்பல் எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி,ஓட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்க கூடாது.

பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக்கூடாது.

ஈரக்காலுடன் படுக்க கூடாது.

வடக்கிலும் கோணத்திசைகளிலும் தலைவைத்துப் படுக்கக் கூடாது.

நடக்கும் போது முடியை உலர்த்தக் கூடாது.

ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்த்துக் கழுவக் கூடாது.

தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது.

அங்க ஹீனர்கள், ஆறுவிரல் உள்ளவர்கள் கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையில் உள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக்கூடாது.

பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்க கூடாது.

பிணப் புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக்கூடாது.

பசுமாட்டை காலால் எட்டி உதைக்கக் கூடாது.

தூங்குபவரை உற்றுப் பார்ப்பதும் திடீரென எழுப்புவதும் கூடாது.

பகலில் உறங்குவது உடலுறவு கொள்வது கூடாது.

அண்ணன் –தம்பி, அக்காள்-தங்கை, ஆசிரியர்-மாணவர்,கணவர்-மனைவி, குழந்தை-தாய், பசு-கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

கோவணமின்றி வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

நம்மை ஒருவர் கேட்காத வரையிலும் நாம் அவருக்கு ஆலோசனை சொல்லக் கூடாது.


இப்படி செல்கின்றன அறிவுரைகள்! இதெல்லாம் இந்த காலத்தில் பின்பற்ற முடியுமா? என்பதை தவிர்த்து நல்ல ஆலோசனைகளை பின்பற்ற முயற்சிக்கலாம் இல்லையா?


நன்றி: வாரமலர் அந்துமணி


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. பண்டைகால சாஸ்திரங்கள் எல்லாம் நம் நன்மைக்கே அறிவியல் ரீதியாகவும் உணர்ந்து சொல்லப்பட்டவை. பின்பற்றுவதால் நன்மையே பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 2. யார் சொல்லியதையும், எதையுமே அதற்கான விளக்கங்கள் இல்லாமல் பின்பற்றக் கூடாது.. நம் அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து தேவையானதைப் பின்பற்றலாம்....

  ReplyDelete
 3. இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்லும்போது ... ஏன் செய்யக்கூடாது என்பதற்கான காரணங்களையும் விளக்கிச்சொல்லுதல் வேண்டும்... யாரோ சொன்னார்கள் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு நம்புபவன் முட்டாள்.
  இல்லை .. இல்லை ... நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் சிந்திப்பதற்கான மூளை தனித்தனியாக தேவை இல்லை ... வெறும் மண்டையோடு மட்டுமே போதுமானது....!!!
  https://www.scientificjudgment.com/

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2