புகைப்பட ஹைக்கூ 31

புகைப்பட ஹைக்கூ 31


பாலோடு
நிழலும் தந்தது
தாய்ப்பசு!

பால் வளர்ச்சிக்கு
நிழல் குளிர்ச்சிக்கும்
ஈந்தது தாய்ப்பசு!

தாயின் நிழலில்
களைப்பாறியது
கன்று!

ஊட்டி மட்டுமல்ல
போர்த்தியும் வளர்த்தது
பசு!

பெற்றவள் நிழலில்
வளர்ந்தது
கன்று!

 வறண்ட பூமியில்
 மிரண்ட கன்று
அரவணைத்தது தாய்ப்பசு!

 நீரும் இல்லை!
 நிழலும் இல்லை!
 பாசம் உண்டு  பசு மடியில் கன்று!

  நிழல்குடையானது
  பசு!
  மடியில் கன்று!

  தாயின் மடியில்
  தவழும்
  கன்று!

  ஊற்றெடுத்தது
  பால் அல்ல பாசம்!
  தாய் மடியில் கன்று!

   அச்சத்தில் கன்று
   அரணானது
   பசு!
டிஸ்கி:  கரூர் திருமுக்கூடலூர் (மாமனார் இல்லம்)சென்று இருந்தமையால் ஒரு வாரமாக பதிவுகள் இடவில்லை! பதிவுகள் படிக்கவில்லை! இனி தொடர்ந்து  பதிவுகள் வெளிவரும்! நன்றி!
  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  

Comments

  1. ஊற்றெடுத்தது பால் அல்ல பாசம் உட்பட அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தாய்மையின் பெருமையினை அழகுற கவிதை வரிகளில் , வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. படம் + வரிகள் = சூப்பர்

    ReplyDelete


  4. அம்மாவின் பாசத்தை சொல்லி நெகிழ வச்சிட்டீங்க நண்பா...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2