உள்ளேவும் வெளியேவும்! தமிழக அமைச்சரவை திடீர் மாற்றம்!
தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெ., நீக்கினார். புதிதாக 2 பேரை நியமித்துள்ளார். ஏற்கனவே இது வரை ஆட்சி பொறுப்பேற்றது முதல் 8 முறை முதல்வர் ஜெ., தனது அமைச்சரவை சகாக்களை மாற்றி வந்துள்ளார். தற்போது 9 வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல்வர் ஜெ., தனது அரசில் அமைச்சர்களாக இருந்த செல்லப்பாண்டியன், முகம்மது ஜான் ஆகியோரை நீக்கி உள்ளார். இவர்களுக்கு பதில் எஸ்.பி., சண்முகநாதன், அப்துல்ரகீம் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் முறையே சுற்றுலா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் செந்தூர்பாண்டியன், பச்சைமால், ஆனந்தன் ஆகியோர்களின் துறை மாற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு முறையே இந்து சமய அறநிலைய துறை, வனத்துறை ,தொழிலாளர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.
வாரிய தலைவர்கள் நியமனம்: இன்று பல்வேறு துறைக்கான வாரிய தலைவர்களையும் முதல்வர் ஜெ., நியமித்துள்ளார். இதன்படி முனியசாமி ( சேமிப்பு கிடங்கு கழகம் ), வி.என்.ரவி (ஜவுளி கழகம் ), பிரபாகர் ( சிறுதொழில் மேம்பாடு ), அருண்மொழித்தேவன் ( சுற்றுலா மேம்பாடு), செந்தில்நாதன் ( பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாடு ) , ரவிச்சந்திரன் ( வேளாண்கழகம்), வெங்கடேஸ்வரன் ( தொழில் துறை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிஸ்கி: அதிரடிக்கு பெயர் போன ஜெ இப்படி அடிக்கடி அமைச்சர்களை மாற்றிக் கொண்டிருந்தால் ஆட்சிக்கால இறுதியில் அனைவரும் முன்னால் மந்திரிகளாகத்தான் இருப்பார்கள் போல! என்ன ஒருவராய் சம்பாதிக்காமல் அனைவரும் சம்பாதிக்க வழி செய்கிறார். தகவல் உதவி: தினமலர்
அடுத்த அமாவாசைக்கு இன்னும் ஒரு மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ReplyDeletekodumai...
ReplyDelete