புகைப்பட ஹைக்கூ 35

புகைப்பட ஹைக்கூ


  ஏழ்மை பீடித்தாலும்
  வீழவில்லை!
  தாம்பத்யம்!

 சுமையான துணை!
 சுளிக்கவில்லை முகம்!
படிக்கவேண்டும் படிப்பினை!

வலிநிறைந்த வாழ்க்கை!
சலிக்கவில்லை!
வாழ்க்கைத்துணை!

ஜடங்களுக்கு நடுவே
நடமாடும்
மனிதன்!

முடமானது கால்கள்மட்டுமே
திடமானது
வாழ்க்கை!

கைப்பிடித்த மனைவிக்கு
நம்பிக்கை ஊட்டும்
கணவன்!

குடும்பத்தினை சுமந்தவளை
கொஞ்ச நேரம் சுமக்கிறான்
கணவன்!

 கலியுகத்திலும் ஒரு
 கல் ஆகாத
 கணவன்!

  தளர்ச்சி வந்தாலும்
  வளர்ச்சி ஆனது
  தாம்பத்யம்!

  அன்பும் அறனும்
  உடைத்தது
  இல்வாழ்க்கை!

  ஊன்று கோலாய் கணவன்
  வென்று காட்டியது
  தாம்பத்யம்!  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. ஊனம் என்பது உடலுக்குத்தான் மனதிற்கில்லை...

  நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் அருமையான வரிகள் சகோ!
  அத்தனையும் பெறுமதியானவை. மிகச்சிறப்பு.
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. வரிகள் ஒவ்வொன்றும் பிரமாதம்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. மனைவிக்காக சுமக்கும் சுமை வலியில்லை ஆனால் சுகமானதுதான்.நல்லப் பகிர்வு

  ReplyDelete
 4. அருமை அய்யா. விவாகரத்து கேட்டு, கோர்ட்டு வாசலில் நிற்கும் மெத்தப் படித்தவர்கள், படிக்க வேண்டிய பதிவு அய்யா. நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெற்றி உன் பக்கம்! கவிதை!

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!