பாலியல் பலாத்காரம்! பலியாடாகும் அப்பாவி சிறுமிகள்!
சமீப காலமாக எந்த ஊடகத்தை பார்த்தாலும் அடிபடும்
செய்தி பாலியல் பலாத்காரம்! அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கொடுமை அதிகரித்து
வருவது அதிர்ச்சி அளிக்கிறது. அறிவை புகட்ட வேண்டிய ஆசிரியர்கள் கூட தங்கள் மாணவிகளிடம்
சில்மிஷத்தில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டு சிறையில் இருக்கிறார்கள்.
காந்தியடிகள்
அப்போது சொன்னார். நள்ளிரவில் எந்த பயமும் இன்றி ஒரு பெண் தனியாக நடமாட முடியும் என்றால்
அப்போது இந்தியா பூரண சுதந்திரம் அடைந்து விட்டது என்று. ஆனால் இன்று பகலிலேயே கூட
பெண்கள் நடமாட முடியவில்லை! தீடிரென இந்த காம நோய் வெறியாக மாறி இந்தியாவையே அழித்துக்
கொண்டு இருக்கிறது.
ஊடகங்கள்,
சினிமாக்கள், இணையங்கள் என்று இதற்கு எத்தனையோ சப்பைக்கட்டுக்கள் காரணங்களாக கூறப்பட்டாலும்
உண்மை அதுவன்று. மக்களின் மனோபாவம் மாறிப் போனதே காரணமாகும். சிலர் கூறுகிறார்கள் பெண்கள்
கண்ணியமாக உடையணிந்தால் ஆண்கள் ஏன் பார்க்கப் போகிறார்கள் கிண்டல் செய்ய போகிறார்கள்?
என்று கேட்கிறார்கள். ஆனால் பெண்களை விட்டுவிடுங்கள் சின்னஞ்சிறிய சிறுமிகளிடம் கூட
அல்லவா இந்த வெறிநாய்கள் விளையாடி விடுகின்றன. ஆண்களே உங்கள் கண்ணியம் எங்கே போனது.
நீங்களும் ஒரு பெண்ணுக்கு பிள்ளை ஒரு பெண்ணுக்கு கணவன், ஒரு பெண்ணுக்கு தகப்பன் என்பதை
ஏன் நினைவில் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்!
சின்னஞ்சிறு
குழந்தைகள் என்ன செய்தார்கள்! உங்களின் காமவெறிக்கு அந்த குழந்தைகள்தான் பலிகடாக்களா?
உங்களுக்கு கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லையா? இணையமும் சினிமாவும்தான் இத்தகைய சீர்கேடுகளுக்கு
காரணம் என்று கூறுபவர்களே! படித்தவர்கள் வேண்டுமானால் இணையத்தில் பார்த்து கெட்டுப்
போய் இருக்கலாம். ஆனால் இந்த செயல்களில் ஈடுபடும் நிறைய பேர் படிக்காத பாமரர்கள். கூலி
வேலை செய்பவர்கள் வேற்று மாநில மக்கள், இப்படி
பலர் இவர்களை கெடுத்தது எது?
சின்ன
குழந்தைகளை இவர்களிடம் பழக விடுவது சரியா? இதை பெற்றோர்கள் யோசிக்கவேண்டும். வீட்டு
வேலை அலுவலகம் என்று குழந்தைகள் பராமரிப்பில் கோட்டை விடக்கூடாது. குழந்தைகளுக்காகவும்
கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும். அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது. பேட் டச், குட்
டச் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் குழந்தைகளை
பழகவிடக்கூடாது. குறிப்பாக ஸ்கூல் வேன் டிரைவர், வாட்ச் மேன், அக்கம் பக்கம் உள்ளவர்கள்
பற்றி நன்கு அறிந்து பழக விட வேண்டும். அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
இணையங்களோ
ஊடகங்களோ விஷத்தை பரப்பி வருகின்றன என்பது உண்மைதான்! ஆனால் இது மட்டும் இன்றி மக்களின்
உணவுப் பழக்க வழக்கங்களும் கலாசார சீரழிவுகளும் மதமாற்றங்களும் கூட இந்த மாதிரி சம்பவங்களுக்கு
காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. தேவையற்ற அன்னிய ஆக்ரமிப்புக்களால் நமது கலாச்சாரம்
சீரழிவு பட்டுள்ளது.
நமது
பாரம்பரியம்! நமது கலாச்சாரத்தை பின்பற்றினாலே பாதி நன்மை கிடைக்கும். நம்முடைய உணவு
நம்முடைய ஆடை! நம்முடைய பழக்கவழக்கங்கள்! நம்மை காக்கும். இதை விடுத்து அன்னிய பழக்கங்களை
ஏன் பின்பற்ற வேண்டும்.
நமது
வழக்கம் விருந்தினரை கைகூப்பி வரவேற்பது! அன்னிய பழக்கம் கட்டிப்பிடித்து அணைப்பது.
முத்தமிடுவது. இதை நமது கலாசாரத்தில் கலப்பது தகுமா? இது போன்ற தேவையற்ற செயல்களும்
இந்த பலாத்கார சம்பவங்களுக்கு காரணமாகிவிடும்.
நமது
குழந்தைகளை நாம் கண்காணித்து வளர்க்க வேண்டும். அதே சமயம் இது போன்ற சம்பவங்கள் இனி
நடைபெறாமல் இருக்க அரசு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். நமது முதல்வர் துணிச்சலுக்கு
பெயர் போனவர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இந்த வன்முறைக்கு தீர்வு
காண அவர் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். குறிப்பாக இது மாதிரி நடப்பவர்களின் “பீஸை”
பிடுங்க வேண்டும். அது ஒன்றே இந்த குற்றங்கள் குறைய வழியாகும்.
கலாசார
சீரழிவு உண்டாக்கும் டிஸ்கொதே கிளப்புகள், விளம்பர பேனர்கள், வெளிநாட்டு சேனல்கள்,
நமது சேனல் நிகழ்ச்சிகள் இணைய தளங்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். அப்போது ஓரளவு
தீர்வு கிடைக்கும். குறிப்பாக பல்வேறு சேனல்களில் வரும் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில்
வரும் நடன நிகழ்ச்சிகள் முகம் சுளிக்க வைக்கின்றன. இவை ஆபாசத்தை அள்ளித்தெளிக்கின்றன.
நம் நடுவீட்டிலேயே இந்த அலங்கோலம் அரங்கேறுவது நமது பிள்ளைகளை பாதிக்கச் செய்யும்.
ஆனால் நாம் இதை ரசித்து பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இதை பார்க்கும் அறைகுறைகள்
இன்னும் வேகமாக சீரழிகின்றனர்.
பொதுவாக
தனிமையில் இருக்கும் அல்லது வேலையற்ற அல்லது மணம் புரியாத வயது முதிர்ந்தவர்கள் துணை
இழந்தவர்கள்தான் இந்த மாதிரி வன்கொடுமையில் இறங்குகிறார்கள். இப்போது இந்த வரிசையில்
பாடம் புகட்டும் ஆசிரியர்களும் இறங்குவது நமது சமூகம் மிகவும் சீரழியத்தொடங்குவதைத்தான்
உணர்த்துகிறது. கலாசார சீரழிவுகள்தான் இதற்கு முக்கிய காரணம் என்றால் மிகையில்லை! இந்த
கொடுமையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் அளித்தால் ஓரளவு வன்கொடுமைகள் குறைய
வாய்ப்புள்ளது. அத்துடன் அவர்களுக்கு மன ரீதியான பயிற்சிகளும் வழங்கலாம்.
சிறுமிகள்
மீது வன்புணரும் இந்த வெறிநாய்களை உறுப்பு துண்டித்தால் கூட பரவாயில்லை! அந்த அளவுக்கு
கடுமையான தண்டனைகள் வழங்கப் படவேண்டும்.
இதை அரசு கவனத்தில் கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
இன்றைய சூழலில் நீங்கள்
ReplyDeleteஇறுதியாகச் சொல்லிச்செல்லும்
தீர்வு கூடச் சரியாகத்தான்படுகிறது
விரிவான அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
பாலியல் பலாத்காரங்கள், பெரும்பாண்மையாக, அச்சிறுமிகளுக்கு நெருங்கிய உறவினர்களாலும், நன்குத் தெரிந்தவர்களாளுமே மேற்கொள்ளப்படுவதாக ஓர் ஆய்வு கூறுகிறது அய்யா. குழந்தைகளை விட நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
ReplyDeleteஇவர்கள் வாழ்வது எல்லாம் ஒரு வாழ்வா...?
ReplyDeleteஅருமையான பகிர்வு,வாழ்த்துக்கள்
ReplyDeletekevalam...
ReplyDeleteஉண்மை தான் சகோ,தண்டனைகளை அதிகரிப்பதன் மூலம் பாலியல் குற்றங்களை குறைக்க முடியும் என்பது தான் என் கருத்தும் கூட
ReplyDeleteநமது குழந்தைகளை நாம் கண்காணித்து வளர்க்க வேண்டும். //உண்மைதான்
ReplyDelete