விக்கிரமாதித்தன் கொண்டுவந்த நாகரத்தினம்!
விக்கிரமாதித்தன் கொண்டுவந்த நாகரத்தினம்! முதல் பகுதியை படிக்க: விக்கிரமாதித்தனை பிடித்த சனி! இரண்டாம் பகுதியை படிக்க: முத்து நகையின் சிரிப்பில் உதிர்ந்த முத்துக்கள்! மதுராபுரி மன்னன் மதுரேந்திரன் தான் வைத்த சோதனையில் விக்கிரமாதித்தன் வென்றுவிட்டதை நினைத்து வருத்தம் கொண்டான். விக்கிரமாதித்தனை கொல்ல வேறு உபாயம் கூறுமாறு மந்திரியிடம் கேட்டான். மதுரேந்திரனின் மதியூக மந்திரி சிறிது நேரம் யோசித்தான். பிறகு, இன்னும் ஒரு உபாயம் உள்ளது. ஏழுகடல்களுக்கு அப்பால் நாகலோகம் எனும் தீவு உள்ளது. அந்தத் தீவில் நாகபுரம் என்ற பட்டினத்தை அரசாளும் நாகேந்திரனின் குமாரியான நாக கன்னிகை சிரித்தால் நாகரத்தினம் உதிரும். அந்த ரத்தின மணியை கொண்டுவருமாறு ஆதித்தனை அனுப்புவோம். ஏழுகடல்களை அவனால் தாண்ட முடியாது. அப்படியே தாண்டிச்சென்றாலும் நாகபுரத்தில் உள்ள விஷம் அவனை கொன்றுவிடும் என்றான். மந்திரியின் யோசனையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த மதுரேந்திரன் அரசவைக்கு ஆதித்தனை அழைத்து, ஆதித்தா! முத்தைக்காட்டிலும் சத்துள்ள பொருள் ஒன்று வேண்டும். மகரகண்டிகை செய்ய வேண்டியிருப்பதால் அதன் நடுவில் வைக்க நாகபுரத