Posts

Showing posts from November, 2013

விக்கிரமாதித்தன் கொண்டுவந்த நாகரத்தினம்!

Image
விக்கிரமாதித்தன் கொண்டுவந்த நாகரத்தினம்! முதல் பகுதியை படிக்க: விக்கிரமாதித்தனை பிடித்த சனி! இரண்டாம் பகுதியை படிக்க: முத்து நகையின் சிரிப்பில் உதிர்ந்த முத்துக்கள்! மதுராபுரி மன்னன் மதுரேந்திரன் தான் வைத்த சோதனையில் விக்கிரமாதித்தன் வென்றுவிட்டதை நினைத்து வருத்தம் கொண்டான். விக்கிரமாதித்தனை கொல்ல வேறு உபாயம் கூறுமாறு மந்திரியிடம் கேட்டான்.    மதுரேந்திரனின் மதியூக மந்திரி சிறிது நேரம் யோசித்தான். பிறகு, இன்னும் ஒரு உபாயம் உள்ளது. ஏழுகடல்களுக்கு அப்பால் நாகலோகம் எனும் தீவு உள்ளது. அந்தத் தீவில் நாகபுரம் என்ற பட்டினத்தை அரசாளும் நாகேந்திரனின் குமாரியான நாக கன்னிகை சிரித்தால் நாகரத்தினம் உதிரும். அந்த ரத்தின மணியை கொண்டுவருமாறு ஆதித்தனை அனுப்புவோம். ஏழுகடல்களை அவனால் தாண்ட முடியாது. அப்படியே தாண்டிச்சென்றாலும் நாகபுரத்தில் உள்ள விஷம் அவனை கொன்றுவிடும் என்றான்.    மந்திரியின் யோசனையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த மதுரேந்திரன் அரசவைக்கு ஆதித்தனை அழைத்து, ஆதித்தா! முத்தைக்காட்டிலும் சத்துள்ள பொருள் ஒன்று வேண்டும். மகரகண்டிகை செய்ய வேண்டியிருப்பதால் அதன் நட...

இரண்டுலட்சம் பக்க பார்வைகள் கடந்தது தளிர்!

Image
இரண்டுலட்சம் பக்க பார்வைகள் கடந்தது தளிர்! கடந்த 4-1-11 அன்று பொங்கல் வாழ்த்தோடு ஆரம்பித்தது தளிர் வலைப்பூ. வலைப்பூ என்றால் என்னவென்றே தெரியாமல் உருவானதுதான் தளிர். முதலில் யாருமே வரவில்லை! அப்படியே வளர்ந்து திரட்டிகளில் ப்ளாக்கர் நண்பன் பதிவுகளை படித்து இணைத்தேன். அப்புறம் சிலர் வருகை தர பார்வைகள் எண்ணிக்கை கூடியது. ஒரு கட்டத்தில் தமிழ் மணம் திரட்டியில் இணைந்தபோது நிறைய பார்வையாளர்கள் கூடினர். இந்த சமயத்தில்தான் வலைச்சரத்தில் என் ராஜபாட்டை ராஜா அவர்கள் என்னை அறிமுகப்படுத்த இன்னும் சிலர் பாலோவர் ஆனார்கள். அப்படியே வளரும்போதுதான் தளிரில் களைகள் ஆரம்பம் ஆயின.      வலைப்பூவில் சிலர் கதைகளை மட்டுமே எழுத சிலர் கவிதைகளை எழுத, சிலர் நகைச்சுவைகளை எழுத, சிலர் சினிமாவிமர்சனம் மட்டும் எழுத என தனித்தனியாக எதோ ஒன்றை மட்டும் எழுதி வந்தனர். எனக்கு அப்படி எழுத தோன்றவில்லை! ஒரு பல்சுவை வார இதழாய் இருக்க வேண்டும் நமது வலைப்பூ என்ற எண்ணத்தில் கதை, கவிதை, ஜோக்ஸ் என கலந்து கட்டி எழுதினேன். பிற தளங்களில் இருந்து பகிர்ந்தேன். அப்படி செய்யும்போது நிறைய பேர் வருகிறார்கள் என்று சின...

புன்னைநல்லூர் புற்றுமாரியம்மன்!

Image
புன்னைநல்லூர் புற்றுமாரியம்மன்! அகிலம் எங்கும் அருளாட்சி செய்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அன்னை எத்தனையோ வடிவங்களில் காட்சி தருவாள். கருணைவடிவாகவும், காளி சொருபமாகவும், இரண்டே கரங்களுடனும் பதினாறு கரங்களுடனும் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் பலவிதங்களில் காட்சிதரும் அம்மன்களை தரிசித்து இருக்கலாம்.     தஞ்சாவூர் மாவட்டம் புன்னை நல்லூரில் புற்றுவடிவில் எழுந்தருளி வித்தியாசமாக அருள்பாலிக்கிறாள் அன்னை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இவளை திரையில் வரைந்து வழிபடுவது பக்தர்களின் வழக்கம்.    சோழ மன்னர்கள் போரில் வெற்றிபெற காளி வழிபாடு செய்து வந்தனர். தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல்தெய்வங்களாக அமைத்தனர். கிழக்குப்பக்கம் அமைக்கப்பட்ட சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன். ‘சோழசம்பு’ என்ற நூல் இதை தெரிவிக்கிறது.     1680ல் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகராஜா திருத்தல யாத்திரை செய்யும்போது சமயபுரத்தில் தங்கினார். அன்றிரவு அம்பிகை அரசரின் கனவில் தோன்றி ஒரு புன்னைக் காட்டில் புற்றுவடிவில் தான் இருப்பதாகவும் தன்னை வழிபடும்படியும்...

ஆஃப்டே பர்மிசன் கேட்டா என்ன அர்த்தம்? ஜோக்ஸ்

Image
ஜோக்ஸ் மன்னா எதிரி அரண்மனையை நெருங்கிவிட்டான்! அப்புறம்? மகாராணியின் முகத்தை பார்த்ததும் நொறுங்கிவிட்டான்!                         பர்வீன்யூனுஸ் 2.எதற்காக நமது மன்னர் அரசவை புலவரை விளாசித்தள்ளுகிறார்? பதுங்கு குழிக்குள் பாயும் புலியேன்னு வஞ்சப்புகழ்ச்சியா வர்ணிச்சிட்டாராம்!                     அருண்பிரகாஷ் 3.நில அபகரிப்பு கேஸ்ல உள்ள போய் வந்தும் தலைவர் திருந்தலய்யா!    ஏன் என்ன சொல்றாரு? ஜெயிலுக்கு பக்கத்துல  ஏகப்பட்ட  காலி இடம் இருப்பது தெரியாம போச்சேங்கிறாரு!                       அ.அரவப்பா 4. வாழ்த்த வயதில்லைன்னு தலைவர்கிட்டே சொன்னா…    ஏன் என்ன சொன்னார்?   ரெண்டு ரெண்டுபேரா சேர்ந்து வாழ்த்துங்களேன்...

ஆருஷி வழக்கும் தமிழ்திரையில் சன்னிலியோனும்! கதம்பசோறு! பகுதி15

Image
கதம்ப சோறு பகுதி 15 ஆருஷி வழக்கும்! அறிவாளன் வழக்கும்! நொய்டாவில் பல்மருத்துவரான ராஜேஷ் தல்வார், மற்றும் அவரது மனைவி நுபுர் தல்வார், தாங்களே தங்கள் மகளை கொன்றதாக  நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. வேலைக்காரனுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததால் குடும்ப கவுரவம் காக்க மகளையும் வேலைக்காரனையும் திட்டமிட்டு கொன்றுள்ளனர் அந்த தம்பதியினர். இருப்பினும் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் தரப்பும் அதிகபட்சமாக தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பும் வாதிட்டது. இறுதியில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளனர் அந்த தம்பதியினர். சொந்த மகளை கொன்றவருக்கே ஆயுள் தண்டணைதான். ஆனால் ராஜீவ் கொலையில் நேரடி சம்பந்தம் இல்லாத பேறறிவாளனுக்கு தூக்குத்தண்டனை என்பது என்ன விதமான நீதி என்பது விளங்கவில்லை! பேட்டரி வாங்கிக்கொடுத்ததற்காக ஒருவனுக்கு தூக்கு என்பது வேடிக்கையாக இருக்கிறது. தண்டணைகள் என்பது திருந்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையவேண்டும். கொலைக்குக் கொலை பழிக்குப் பழி என்று போனால் அது மிர...

பிச்சைக்காரனுக்கு வைத்துவை!

Image
பிச்சைக்காரனுக்கு வைத்துவை! இரவு நேரம். வேலைகளை முடித்துக்கொண்டு களைப்பாக திரும்பிய தன்னுடைய மகன்களுக்கு சாதம் பறிமாறிக்கொண்டிருந்தாள் அம்மா. அன்று அவள் செய்த உணவு புளியோதரை! மிகவும் ருசியாக இருந்தது. வேர்க்கடலைகளை வேறு தூவி வைத்து இருந்ததால் சுவைக்கு பஞ்சம் இல்லை!. உணவின் சுவையில் மயங்கிய மகன்கள் அம்மா! புளியோதரை கெட்டுப்போகாது அல்லவா? நாளைக்கும் வைத்துவை! நான் சாப்பிடுகிறேன்! என்றான்.     அதைக்கேட்ட தாய் சிரித்தாள். நான் என்னம்மா தவறாக சொல்லிவிட்டேன்! ஏன் சிரிக்கிறாய் அம்மா! என்றான் மகன். மகனே நீ சொன்னது போல சொல்லக்கூடாது. பிச்சைக்காரனுக்கு வைத்து வை என்றுதான் சொல்ல வேண்டும். என்றாள் அம்மா.   பிச்சைக்காரனுக்கு வைத்துவிட்டால் அப்புறம் நான் எப்படி சாப்பிடுவதாம்? எனக்கு மிஞ்சியதுதான் பிச்சைக்காரனுக்கு! இதைத்தானே பெரியவர்களும் தனக்கு மிஞ்சியது தானம் என்று சொல்கிறார்கள். இப்போது தாய் மேலும் சிரித்தாள்.    என்னம்மா! எதற்கெடுத்தாலும் சிரித்துக் கொள்கிறாய்? என்று சலித்துக் கொண்டான் மகன்.    மகனே! உன் புளியோதரை ஆசையை நினைத்து முதலில் சி...

ஹைக்கூ பூக்கள்!

Image
ஹைக்கூ பூக்கள்! வாழ்விலும் சாவிலும் வந்து வாழ்த்தின பூக்கள் ! மகிழ்வித்து மகிழ்ந்தன மலர்கள் ! விருந்துண்டன கண்கள் மலர்கள் ! உலகிற்கு வண்ணங்கள் அறிமுகம் பூக்கள் வாசம் வீசியதும் பாசமான வண்டுகள் பூக்கள் ! மறைந்தாலும் மணத்தன பூக்கள் ! விலை மகளான பூக்கள் விரக்தியில் வாடின செடிகள் ! தங்கம் திருடின வண்டுகள் மஞ்சளாய் ஜொலித்தது சரக்கொன்றை ! முடி சூடா மலர்கள் அழகிழந்தன கூந்தல்கள் ! நகை புரிந்தன சிகை கூந்தலில் மல்லிகை ! இறங்கி வராவிட்டால் ஏறிவிடுகிறது விலைவாசி ! மழை ! சவலையான பூமி பெய்யவில்லை மழை !   குளிரெடுத்த மேகத்தால் குளிர்ந்து போன பூமி ! மழை !   விதைத்தவன் சும்மா இருக்க அறுவடை செய்தது பூமி ! மழை ! கடல் நீரைக் குடி நீராக்கியது மழை ! மேகப் பூக்கள் பூத்ததும் மணத்தது மண் ! மழைத்தூறல் !