இந்திய தலைமை நீதிபதியாக தமிழகத்தின் சதாசிவம் நியமனம்
சென்னை : இந்திய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். அவருக்கு, ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, தற்போது, அல்டமாஸ் கபீர் உள்ளார். தலைமை நீதிபதி கபாடியா, ஓய்வு பெற்ற பின், கடந்த ஆண்டு, செப்டம்பர், 29ம் தேதி, தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார். இவர், ஜூலை, 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். கபீருக்கு அடுத்த நிலையில் உள்ள, நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக, 19ம் தேதி, பதவியேற்கிறார்.ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நீதிபதி சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்., 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில், முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில், முதலாவதாக, சட்டப் படிப்பு முடித்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். சென்னை ஐகோர்ட்டில், அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடராக, பதவி வகித்தார். சிவில், கிரிமினல், ...