மிச்சம் வைகக் கூடாத மூன்று! ஆன்மீகத் துளிகள்!
ஆன்மிகத்துளிகள்
மைசூருக்கு அருகில் உள்ள சோமநாத புரத்தில் உள்ள கேசவன் கோயிலில் உள்ள வேணுகோபால
சுவாமி சிலை எழுநூறு வருடங்களுக்கு முற்பட்டது. அவர் கையில் உள்ள புல்லாங்குழலை எங்கு
தட்டினாலும் மணி ஓசை கேட்கிறது. இத்தனைக்கும் சிலை வடிக்க கையாண்ட அதே வகை கனமான கருங்கல்லே
புல்லாங்குழல் வடிக்கவும் பயன் பட்டிருக்கிறது.
முதன் முதலில் அக்னியை கண்டுபிடித்து உலகிற்கு அளித்த பெருமை பிருகு முனிவரை
சாரும். ஜலத்திலிருந்து நெருப்பைக் கொண்டு வந்து உலகுக்கு அளித்த சாதனை இவருடையது.
விஞ்ஞான உலகம் இன்று சோதனை மூலம் நிறுவியதை வேதகாலத்தில் காட்டியவர் பிருகு முனிவர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டி என்ற ஊரில் உள்ள சிவாலயத்தில் உள்ள நந்தி
எம்பெருமான் நெய்யிலே நீராடும் இயல்பை உடையவர். நெய்யால் அபிஷேகம் செய்தும் கூட நந்தி
பகவானை ஒரு ஈ எறும்பு கூட மொய்க்காத அதிசயத்தை கண்டு களிக்கலாம். நினைத்தது நடக்கவும்
நிம்மதி பெறவும் அன்பர்கள் நந்தி பகவானைஅபிஷேகம் செய்யும் நெய், கோயில் நந்தவனத்தில்
உள்ள நெய்க்கிணறு என்ற இடத்தில் சேமிக்கப் படுகிறது. இங்கும் ஈ எறும்பு மொய்ப்பதில்லை!
மிச்சம் வைக்க கூடாத மூன்று:
அக்னிசேஷம்: வீட்டில் இரவில் நெஉப்பை மிச்சமின்றி அணைக்கவேண்டும். இல்லையேல்
தீப்பற்ற நேரிடும்.
குணசேஷம்: கடன் முழுவதும் தீர்த்துவிட வேண்டும். ஒரு சிறிது மிச்சமாக விட்டு
வைத்தாலும் வட்டி குட்டி போட்டு பெருகிவிடும்.
சத்ரு சேஷம்: பகைவனை அடியோடு அழிக்கவேண்டும். இல்லையேல் அவன் பலரை உடன் கூட்டிக்
கொண்டு பெருகிவிடுவான்.
காவிரி துங்கபத்திரை,கிருஷ்ணா, கோதாவரி, கங்கை என்ற ஐந்துமே பஞ்ச புண்ணிய கங்கைகள்.
இவற்றில் உயர்வு தாழ்வு இல்லை என்று ஸ்மிருதி முக்தாபலம் என்ற நூல் கூறுகிறது.
முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடு பழநி. இதற்கு சிவமலை என்ற பெயரும் உண்டு.
சித்தர்கள் வாழ்ந்த பூமி. போகர் என்பவர் இத்தலத்தில் இருக்கும் முருகனை வடிவமைத்தார்.
ஞானம் என்ற தண்டை ஊன்றி பாலவடிவத்துடன் காட்சி தருகிறார். திருப்புகழில் இத்தலம் அதிசயம்
அநேகமுற்ற பழநி என்று போற்றப்படுகிறது
முருகனை நடுவில் வைத்து சிவனும் பார்வதியும் கொஞ்சி மகிழும் கோலத்தை சோமாஸ்கந்த
வடிவம் என்பர். பாலமுருகன் உலகை சுற்றிவந்தும் அவருக்கும் ஞானப்பழம் கிடைக்கவில்லை.
இன்னொரு ஞானக்கனியை பெற வேண்டும் என்ற ஆவலில் இருந்த முருகன் ஒரு சமயம் தந்தையின் கழுத்தில்
உருண்டையாக தங்கியிருக்கும் விஷத்தை கேட்டு அடம் பிடித்தார். சிவன் விஷம் என்று கூறியும்
குழந்தை முருகன் கேட்காமல் தந்தையின் கழுத்தை பிடித்து இழுத்து விஷ உருண்டையை பிடுங்க
முயற்சித்தார். சிவன் குழந்தையின் பிடி தாளாமல் மூச்சு திணறினார். அந்த சூழ்நிலையில்
முருகனை தன் மடியில் இருத்திஞானப்பால் ஊட்டி சமாதானம் செய்வித்தார்
பார்வதி. இந்த கோலமே சோமாஸ்கந்த வடிவம் ஆனது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இந்த வடிவத்தை காணலாம்.
ததியாராதனம்: என்ற சொல்லை கேள்விபட்டிருக்கிறீர்களா?
இது மிகவும் அர்த்தமான சொல். ததீயா
என்றால் கடவுளுடன் சம்பந்தப்பட்டவர் என்று பொருள். கடவுளுடன் சம்பந்த பட்டவர்களுக்கு
உணவளிப்பதையே ததீயாராதனம் என்பார்கள். அதாவது ஏழைகளும் பூஜை செய்பவர்களும் இறைவனை சார்ந்தவர்கள்
என எடுத்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவை அளிக்க வேண்டும். பசி என்ற சொல்லையே
அகராதியில் இருந்து அகற்றவேண்டும் என்று பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமன் தன் அரண்மணைக்கு
வருபவர்களுக்கு உணவளிக்கும் போது சமையலறையை கவனிக்க போய்விடுவானாம். ஒருசமயம் அவர்
அரண்மணையில் நடந்த அன்ன தானத்தில் 82000 பேர் பங்கேற்றனராம்.
பல்வேறு ஆன்மீக நூல்களில் இருந்து தொகுப்பு;
தகவல்களுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteநல்ல ஆன்மீகத் தகவலகளை அளித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteமிக நல்ல தகவல்கள்.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
பல நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteநல்ல தொகுப்பு
ReplyDeleteஅறிய தகவலுக்கு அன்பு நன்றிகள் அண்ணா
ReplyDelete