கார்த்திகை தீபம் ஏற்றுங்கள்! கந்தன் அருளை பெற்றிடுங்கள்!


கார்த்திகை தீபம் ஏற்றுங்கள்! கந்தன் அருளை பெற்றிடுங்கள்!


அழகு முருகனாம் ஆறுமுகப் பெருமானுக்குரிய முக்கிய விரதம் கார்த்திகை விரதம். இந்த விரதம் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கவல்லது. இவ்விரதம் நட்சத்திரத்தின் அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். அருகில் உள்ள முருகன் ஆலயங்களுக்கு சென்று முருகனை தரிசித்து வருவார்கள்.
   ஒவ்வொரு கார்த்திகையுமே விசேஷம் எனும் போது. கார்த்திகை மாத கார்த்திகைக்கு பெருமை அதிகம் அல்லவா? முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை அன்று தீபம் ஏற்றி வழிபட கந்தன் அருள் கைகூடும் என்பது நம்பிக்கை!
 இந்த கார்த்திகை விரதத்தை ஏற்பவர்கள் மேலான பதவிகளை அடைவர் என்பது கண்கூடு. நாரத மகரிஷி இந்த விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் கடைபிடித்து. ரிஷிகளுக்கு எல்லாம் மேலாக உயர்ந்து மூன்று உலகமும் சுற்றிவரும் பாக்கியத்தை பெற்றார். இந்த விரத நாளில் முருகனுக்குரிய சஷ்டி கவசம் முதலியவைகளை பாராயணம் செய்து வழிபடவேண்டும்.
  சிவபெருமான் தன் ஐந்து முகங்களோடு ஆறாவது முகமான அதோ முகத்தையும் சேர்த்து ஆறு கண்களில் இருந்து நெருப்பு பொறியை தோற்றுவித்தார். அப்பொறிகளை வாயுவும் அக்னியும் கங்கையில் சேர்த்தனர். அங்கு ஆறு குழந்தைகள் உருவாயின. அந்த குழந்தைகளை வளர்த்தனர் கார்த்திகைப் பெண்கள்.பின்னர் பார்வதி அனைவரையும் கட்டி அணைக்க ஒரு குழந்தையானார் முருகர்.அப்பிள்ளைக்கு கந்தன் என்று பெயர் ஏற்பட்டது. கந்தன் என்றால் ஒன்று சேர்ந்தவன் என்று பொருள். சிவபெருமான் அந்த கார்த்திகை பெண்களை வானில் நட்சத்திரமாக நிலைத்து வாழ ஆசிவழங்கி உங்கள் பெயரால் கார்த்திகேயன் என்று முருகன் அழைக்கப்படுவான்.கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடுவோர் எல்லா சவுபாக்கியங்களையும் பெறுவார்கள் என்று வரம் அருளினார்.
       இத்தகைய பெருமை மிக்க திருநாள் கார்த்திகை தீபத் திருநாள். இந்த நாளில் நாமும் விரதம் இருந்து கந்தனை வழிபட்டு அவனருள் பெறுவோம்.
விளக்கேற்றும் முறை!
     வீட்டின் முன் கதவை திறந்து பின்புறக் கதவை மூடிய பிறகே விளக்கேற்றவேண்டும். அதிகாலை நாலரை மணிமுதல் ஆறுமணி வரை தீபம் ஏற்றுவதாலும் மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும் பலனும் நிச்சயம்.
   விளக்கை கையால் அணைக்க கூடாது. ஊதி அணைக்க கூடாது. திரி எரிந்து போக விடக்கூடாது.
பூவாலோ தூண்டும் குச்சியாலோ அழுத்தி குளிர்விக்கலாம்.
ஒருமுகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும்.
இருமுகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும்.
மூன்றுமுகம் ஏற்றினால் புத்திர தோஷம் விலகும்.
நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் சகல நன்மையும் உண்டாகும்.
கிழக்கு திசையில் விளக்கேற்றினால் துன்பம் நீங்கும் குடும்பம் அபிவிருத்தியாகும்
மேற்குதிசையில் விளக்கேற்றினால் கடன்கள் தோஷங்கள் நீங்கும்
வடக்கு திசையில் விளக்கேற்றினால் திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்ற கூடாது.

நெய், நல்லெண்ணை, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை விளக்கேற்ற உகந்தவை கடலை எண்ணெயில் விளக்கேற்ற கூடாது.
இப்போது கடைகளில் கிடைக்கும் விளக்கேற்றும் நெய் பூஜைக்கு உகந்தது அல்ல! சுத்தமான நெய்யில் ஏற்றினால்தான் பலன் கிடைக்கும்.

கார்த்திகை தீபம் ஏற்றுவோம்! கந்தன் அருளினை பெறுவோம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. கார்த்திகையில் இவ்வளவு இருக்கா ?
  தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 2. விளக்கங்களுக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 3. கண்டிப்பாக கார்த்திகை தீபம் ஏற்றுவோம்.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 4. கார்த்திகை விளக்கீடு மட்டுமே தெரியும் இதுவரைக்கும்.இத்தனை விளக்கங்கள் இருக்கா?

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2