ஓல்டு ஜோக்ஸ் பகுதி 2


ஓல்டு ஜோக்ஸ்
    பகுதி 2

நீங்க வாங்கின புது கடிகாரம் தண்டம்!
ஏன்.. என்ன ஆச்சு?
பகல் பத்து மணிக்கு கொஞ்சம் கண் அசந்து விழித்து பார்த்தால் மாலை மூன்று மணியை காட்டுகிறது.
                                   சுதர்ஸன்.

அந்த வீட்டிலிருந்த பூட்டை ஏன் உடைத்தாய்?
 வேறு வழியில்லீங்க! நான் கொண்டு போன சாவி எதுவுமே அதுக்கு சரியா இல்லீங்களே!
                                             எஸ்.என். ஆர்

உனக்கு முன் அனுபவம் ஏதாவது இருக்கா?
இருக்கே! இதுவரை 27 இண்டர்வியுவிலே 346 கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கேன்!
                                          தி. மோகன்

எங்க வீட்டுக்காரர் ஒருநாள் பீச்சுல காத்து வாங்க வந்தார். அங்கே என்னை பார்த்து காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டார்!
   கவனிச்சேன்! அடிக்கடி “காத்து வாங்கப்போனேன்! ஒரு கழுதை வாங்கி வந்தேன்”ன்னு பாடறாரே!
                                          கி.சீனிவாசன்.

அப்பா, எனக்கு கப் ஐஸ் வாங்கி தாப்பா!
அதெல்லாம் விலை அதிகம்! சம்பளம் வரட்டும் வாங்கித்தரேன்!
அப்ப இடைக்கால நிவாரணமா ஒரு குச்சி ஐஸாவது வாங்கித்தாப்பா!
                                           எல் ஸ்ரீனிவாசன்.

நடுக்கடல்ல ஒரு சின்ன தீவு.. அங்கே ஒரு ஆம்பளை, ரெண்டு லேடீஸ் மட்டும் இருக்காங்க.. இருந்தாலும் அவன் மனசுல ஒரு மகிழ்ச்சியே இல்லே! ஏன்?
அந்த ரெண்டு லேடீஸ்ல ஒருத்தி மனைவி, இன்னொருத்தி அம்மாவாயிருக்கும்!
                                            மதன்.

வீட்டுக்கு இவ்வளவு லேட்டா போறியே.. மனைவி ஒண்ணும் சொல்ல மாட்டாளா?
எனக்கு மனைவியே கிடையாது! இன்னும் கல்யாணமே ஆகலை!
பின் ஏன் வீட்டுக்கு லேட்டா போறே?
                                            மதன்.


நான் பிறந்த ஊர் “ரை” என் மனைவி ஊர் “ராந்தகம்”
கேள்விப்படாத ஊருங்களா இருக்கே?
டாக்டர் என்னை “மது” உபயோகப்படுத்த கூடாதுன்னு சொல்லியிருக்காரே!
                                         சுதர்ஸன்.


அப்பா அடிக்கடி அம்மாகிட்டே மன்னிப்பு கேட்பதாலேதான் “அப்பாலஜி”ங்கிற வார்த்தை வந்திருக்குமோ?  - ஒரு பையனின் சந்தேகம்.
                                    டாக்டர் சீதாராமன்.

எந்த வண்டிக்கும்மா சைலன்ஸர் வேணும்?
வண்டிக்கில்லே! இதோ இவருக்குத்தான் ராத்திரியிலே ரொம்ப குறட்டை விடறாரு!


போன வருஷ தீபாவளிக்கு உங்க கடையில வாங்கின ஸ்வீட் எல்லாம் நல்லா இருந்துச்சுங்க!
அது அப்படியேத்தான் இருக்குதுங்க! ஒரு ரெண்டு கிலோ கொடுக்கட்டுமா?
                                         காயல் முகமது.

வேளாவேளைக்கு சாப்பிடுங்க! வாரம் ஒரு தடவை எண்ணெய் தேய்ச்சு குளிங்க! வீட்டை பத்திரமா பாத்துக்குங்கன்னு சொல்லிட்டு உங்க மனைவி எங்க போறாங்க! ஊருக்கா?
  இல்லே! ஜவுளி கடைக்கு!
                                       அவ்வை கே.சஞ்சீவ பாரதி.

கண் முன்னால சின்ன சின்னதா பூச்சி பறந்தது.. கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போட்டுகிட்டேன்!
 இப்ப எப்படி இருக்குது!
பூச்சி பெருசு பெருசா இருக்குது!
                                  கார்த்திக்.
ஆஸ்பத்திரி வாசல்ல குடை ராட்டினம் நிறுத்தி வைச்சிருக்கீங்களே! எதுக்கு டாக்டர்?
திடீர்னு மயக்க மருந்து தீர்ந்துட்டா பேஷண்டை அதுல உட்கார வைச்சு சுத்திவிடத்தான்!
                                            ஜெயா பிரியன்.

என்ன மாடல் ஜாக்கெட் தைக்கனும்? ஜன்னல் வெச்சா? கதவு வெச்சா?
 என்னம்மோ “புல்லட் புருப்” ஜாக்கெட்னு சொல்றாங்களே அந்த மாடல்ல தைச்சுக்கொடுங்க!
                                          நிலா.

நன்றி: ஆனந்தவிகடன்

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாக படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சிரிப்பு கொஞ்சமாத்தான் வந்தது. கொஞ்சம் நகைக்சுவை.கொஞ்சம் வறட்சி

    ReplyDelete
  2. ஹா ஹா... நல்லதொரு நகைசுவை தொகுப்பு...

    ReplyDelete
  3. நல்ல கெலக்சன்......
    ரசித்தேன்

    ReplyDelete
  4. தீபாவளி ஸ்வீட் ஜோக்கில் "3 வருஷமா இதையேதான் சொல்றாங்க... ஆனால் தீர மாட்டேங்குது. தீர்ந்தால்தானே வேற புதுசாச் செய்யலாம்?" என்றும் சேர்த்துக் கொண்டால்?!!

    ReplyDelete
  5. //அப்பா, எனக்கு கப் ஐஸ் வாங்கி தாப்பா!
    அதெல்லாம் விலை அதிகம்! சம்பளம் வரட்டும் வாங்கித்தரேன்!
    அப்ப இடைக்கால நிவாரணமா ஒரு குச்சி ஐஸாவது வாங்கித்தாப்பா!//
    சிரிக்க வைத்தது

    ReplyDelete
  6. நல்ல முயற்சி பாராட்டுகள் !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2