தலைவர் ஜோக்ஸ்!



தலைவர் ஜோக்ஸ்!

1.இந்த ஊழலில் உங்கள் பங்கு என்ன?
இன்னும் பிரிக்கவில்லை யுவர் ஆனர்!
                               கிணத்துகடவு ரவி

2.கல்லிலே கலைவண்ணம் கண்டேன்!
தலைவரே நிலைமை புரியாம கல்லை பற்றி எல்லாம் பாடி மாட்டிக்காதீங்க!
                               சாந்தி பாஸ்கர்.

3. தலைவருக்கு ஏன் தான் டாக்டர் பட்டம் கொடுத்தாங்களோ?
  ஏன்?
எந்த வேலையை சொன்னாலும் இந்த ஆபரேஷணை சீக்கிரம் முடிங்கன்னு சொல்றார்!
                                   சற்குணம்.

4. திறந்து வைக்க கூட்டிட்டு போனவங்களை தலைவர் கண்டபடியா திட்டிட்டு வர்றாரே ஏன்?
 பீர் பாட்டிலை கொடுத்து திறக்கச் சொல்லிட்டாங்களாம்!
                                கி. சாமிநாதன்.

5.நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தால் ஓவ்வொருவருக்கும்
ஆண்ட்ரியா போன் இலவசமாக வழங்கப்படும்!
 தலைவரே அது ஆண்ட்ராய்டு போன்!
                                  ஜி.ஆர் விஜய்.

6. நம்ம தலைவரை பார்க்க டாக்டரும் வக்கீலும் வர்றாங்க?
 எதுக்காம்?
டாக்டர், தலைவரோட சிறுநீரகக் கல் பிரச்சனைக்காகவும் வக்கீல் கிரானைட் கல் பிரச்சனைக்காகவும் வர்றாங்க!
                             மதுரை முருகேசன்.

7. இனிமேல்  தேர்தல்ல டெபாசிட் போனா தலைவர் சும்மா விடமாட்டாராம்?
என்ன செய்வாராம்?
எங்க கட்சி ஓட்டுக்களை அபகரிச்சுட்டுதா எதிர்கட்சி மேல வழக்கு போடுவேங்கிறார்!

                                அம்பை தேவா.

8.ஊழல் பற்றி உங்க கருத்து?
 செய் அல்லது செத்து மடி!
                                      அ.ரியாஸ்

9 மடசாம்பிராணிய்யா நம்ம தலைவரு!
   ஏன்?
கால்நடை மருத்துவ மனையை திறந்து வெச்சவரு இங்கயாவது நாய், பூனை எல்லாம் நுழையாம பார்த்துக்கங்கன்னாராம்!
                                   செல்வா.

10 இதெல்லாம் தெரிஞ்சேத்தான் செய்யறாரா நம்ம தலைவரு?
எதைச் சொல்றே?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் 2016ல் ஆட்சி அமைக்கப்போவது யாருன்னு கேட்டிருக்காரே?
                                    பர்வீன் யூனூஸ்.

11. திடீர்னு கட்டாந்தரை எனக்கு பஞ்சு மெத்தைன்னு எதுக்கு தலைவர் அறிக்கை கொடுத்திருக்கார்?
  எதிர்கட்சிக்காரங்க தலைவரை உள்ளே தள்ள ஏற்பாடு பண்ணதை புரிஞ்சிகிட்டாரோ என்னவோ?
                                       கி. ரவிக்குமார்.

12. தலைவர் எதையும் மேலோட்டமா புரிஞ்சிக்கிறாறோ?
ஏன்?
 அவரோட கடையில இங்கு வெளிநாட்டுக்காரர்களுக்கு சில்லறை தரப்படமாட்டாதுன்னு போர்டு வைச்சிருக்காரே!
                                           கி. ரவிக்குமார்

13 கேரளாவில் கதகளி பிரபலம்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு!
   ஏன்?
நம்மூர் ஜெயில்லயும் அந்த களியை போடச் சொல்லி போராட்டம் நடத்துவோம்கிறாரே!
                                        ஸ்ருதிகா.

14. தமிழ்லதான் கையெழுத்து போடணும்னு சொன்னதும் தலைவர் குழம்பி போயிட்டாரு!
  எதுக்கு?
கைரேகையை எப்படி தமிழ்ல வைக்கிறதுன்னுதான்!
                                            கி.சாமிநாதன்.

15.தேர்தல்ல போட்டியிட்டு ஒரு தடவை கூட நம்ம தலைவர் ஜெயிக்கலை!
  அதுக்காக கட்சி விளம்பரங்கள்ல தன் பெயருக்கு பின்னாடி முன்னாள் சட்டமன்ற வேட்பாளர்னு போடச் சொல்றது நல்லா இல்லை!
                                        கிருத்திகா.

16.அணு உலை போராட்டத்துக்கு போயிட்டு வந்த தலைவர் இங்கிதமா பேசுறாரா? எப்படி?
  உ. பா அருந்த போறத கூட எரிபொருள் நிரப்ப போறேன்னு சொல்றாரே!
                                         ரா. பாஸ்கரன்.

17.தலைவர் தன்னோட வீட்டுக்கெல்லாம் மணல் அகம். நிலக்கரி இல்லம்., கிரானைட் ஹவுஸ்,னு பேர் வச்சிருக்காரே ஏன்?
   எந்த துறையில சம்பாதிச்ச சொத்து அதுன்னு அவருக்கு டக்குன்னு தெரிய வேண்டாமா?
                                     லெ.நா சிவகுமார்.

18.தங்கத்தை எங்கிருந்து வெட்டி எடுப்பாங்கன்னு கேட்டதுக்கு தலைவர் மானத்தை வாங்கிட்டாரு!
     என்ன சொன்னாரு!
கழுத்திலிருந்து சொல்றாரு!
                                           கி. சாமிநாதன்.

19.எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியா பேசினாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கணும் தலைவரே!
 இப்ப நான் அப்படி என்னய்யா தப்பா சொல்லிட்டேன்!
எதிர்கட்சி தலைவருக்கு வள்ளிக் கிழங்கு பிடிக்கும்னு சொன்னதுக்கு நீங்க உங்களுக்கு தெய்வானைக் கிழங்கு பிடிக்கும்னு சொல்றது சரியில்லை!
                                      ஜி. எஸ் பாண்டியன்.

20. வங்கி திறப்பு விழாவுக்கு கூப்பிட்டா தலைவர் என்ன சொல்றார்?
என்ன சொல்றாரு?
 சின்னதா பிக் பாக்கெட்னா ஓக்கே! ஆனா வங்கியெல்லாம் என்னால திறக்க முடியாதுங்கிறார்!
                                           கி. சாமிநாதன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு  குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

நன்றி!  ஆனந்த விகடன், வாரமலர்.

டிஸ்கி} தொடர்ந்து இரண்டாவது நாளாக பகல் முழுவதும் மின்சார தடை! இன்னும் மின்சாரம் வராத நிலையில் இன்வெர்டர் மூலம் இப்பதிவு! மற்றவர்களின் பக்கங்களை படிக்க முடியாத நிலை! வருத்தமாக இருக்கிறது! மின்சார பகவான் கண் திறக்கட்டும்!

Comments

  1. ஹா ஹா... நல்லதொரு தொகுப்பு...

    நன்றி...

    ReplyDelete
  2. மிக அருமையான நகைசுவை தொகுப்புகள் .....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2