பட்டாசு வெடிக்காத கிராமம்! வித்தியாச சேவை! பிடித்த விலங்கு! கலக்கல் கதம்பம்!
இப்படியும் செய்யலாம் சேவை!
அவிநாசி:ஒருவருக்கு எப்படி வேண்டுமானாலும் சேவை செய்யலாம் என்பதை,
இலவசமாக முடி திருத்தி, அதன் மூலமாக சேவையில் ஈடுபட்டு வருகிறார் சவர
தொழிலாளி தெய்வராஜ். மன நலம் பாதித்தோர், ஆதரவற்றோருக்கு இலவசமாக முடி
திருத்தம் செய்து, தீபாவளியை முன்னிட்டு புத்தாடையையும் அவர்
வழங்கினார்.திருப்பூர் - அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வராஜ். அங்கு
சலூன் வைத்துள்ளார்.
"நியூ தெய்வா சிட்டி ஹேர் ஆர்ட்ஸ் டிரஸ்ட்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, கடந்த 10 ஆண்டுகளாக ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என தேடித்தேடி சென்று முடி திருத்தம் செய்து, ஆடை, உணவு வழங்கி வருகிறார். ஆண்டுதோறும் தீபாவளிக்கு, திருப்பூர், அவிநாசி வட்டாரத்தில் சுற்றித்திரியும் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோரை தேடிப்பிடித்து முடித்திருத்தம் செய்கிறார்.
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தனது சேவையை தெய்வராஜ் மற்றும் அவரது குழுவினர் துவக்கினர். அங்கு தங்கிருந்த ஆதரவற்ற முதியவருக்கு முடித்திருத்தம் செய்து, நகங்களை வெட்டி, புது உடை அளித்தனர். மேலும், அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு முடி திருத்தம் செய்யப்பட்டது. அதன்பின், திருப்பூர் பகுதியில் முடி திருத்தம் செய்தனர்.
தெய்வராஜ் கூறியதாவது:நாங்கள் 10 ஆண்டாக இலவச முடி திருத்த சேவை செய்து வருகிறோம். தீபாவளி சமயத்தில், மனநலம் பாதித்தோர், ஆதரவற்றோர் எங்கிருந்தாலும் அங்கேயே போய் முடி திருத்தி, புது துணி கொடுத்து, ஒருவேளை உணவும் அளிக்கிறோம். டிரஸ்ட் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். சிலர்எங்களை கண்டதும் ஓடுவர்; அவர்களை பிடித்து பக்குவமாக விஷயத்தை சொல்லி முடி திருத்துவோம்.பல ஆண்டாக முடி வெட்டாமல் உள்ளதால், திருத்தும்போது சிரமமாக இருக்கும். வேலை முடிந்தவுடன், அவர்களுக்கு பெரிய பாரம் குறைந்ததுபோல் இருக்கும்.
அவிநாசி, திருப்பூர் பகுதியில் 57 பேருக்கு முடி திருத்தம் செய்து, நகங்களை வெட்டி, துணி, உணவு அளித்தோம். சிலர் நன்றி சொன்னார்கள்; சிலர் அழுதார்கள். இச்சேவையை செய்யும்போது மன திருப்தி ஏற்படுகிறது.மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை, திருப்பூர், அவிநாசி பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று இலவசமாக முடி திருத்தி வருகிறோம்.
நண்பர்கள் பலரும் ஒத்துழைப்பு கொடுப்பதால், 10 ஆண்டாக தடையில்லாமல் சேவையை தொடர்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.தெய்வராஜூடன் இணைந்து சண்முகராஜ், செல்வராஜ், பிரபாகரன், பிரேம்குமார், ரமேஷ்பட்டேல், ஆனந்தன், லோகநாதன் ஆகியோரும் முடி திருத்தும் சேவையில் ஈடுபட்டனர். 40 ரூபாய்க்கு டியூப் லைட் வாங்கி, மொத்த குடும்ப உறுப்பினர்களின் பெயரை எழுதி, கோவிலுக்கு அளிப்பவர்கள் மத்தியில், சேவை மனப்பான்மையோடு பணியாற்றி வரும் தெய்வராஜ் மற்றும் குழுவினர் செயல் பாராட்டுக்குரியதே!

உலகின் மிகவும் பிடித்த விலங்கு புலி
உலகின் மிகவும் பிடித்த விலங்காக, 73 நாட்டு மக்கள் இணைந்து, புலியை தேர்ந்தெடுத்தனர். உலகம் முழுவதும் இந்திய இனம், இந்தோசீன இனம், சுபத்திரன் இனம், சைபீரியஸ் இனம், பாலி இனம், ஹாஸ்பின் இனம், ஜவான் இனம் என்ற, எட்டு வகையான புலி இனங்கள் இருந்தன.
ஆனால், 1940ல் பாலி இனமும், ஹாஸ்பின் இனமும், 1970ல், ஜவான் இனமும் முற்றிலும் அழிந்தது. உலகில் உள்ள நான்கு வகையான புலி இனங்களில், ராயல் பெங்கால் வகை புலிகள் மட்டும் இந்தியாவில் உள்ளது.
கடந்த, 2006ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் புலிகளின் எண்ணிக்கை, 1,411 ஆக குறைந்ததால், "புராஜெக்ட் டைகர்' திட்டத்தை மத்திய அரசு முடுக்கிவிட்டது.தற்போது, இந்தியா முழுவதும் உள்ள, 1,706 புலிகளில், தமிழகத்தில் மட்டும், 292 புலிகள் உள்ளன. உலக அளவில், 60 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளதால், புலி எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து, முதலிடத்தில் உள்ளது.
உலகில் வேகமாக அழிந்து வரும் விலங்கில், முதல் இடத்தை நோக்கி, புலி இனங்கள் வேகமாக முன்னேறி வருகிறது. புலிகளை காக்க, உலகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.லகம் முழுவதும் உள்ள சமூக அமைப்புகளும், வன ஆர்வலர்களும், புலிகளை காக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும்,பல்வேறு நாட்டு மக்களிடம் வாக்குகள் சேகரித்து, உலகின் பிடித்தவிலங்கினை, விலங்குகள் நடத்தை ஆய்வாளர்கள் தேர்வு செய்வர். இந்த ஆண்டு, உலகின் பிடித்த விலங்காக புலி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புலி இனங்கள் அழிந்து வரும் வேளையில், பிடித்த விலங்காக புலி தேர்வு செய்யப்பட்டுள்ளது, வனத்துறையினர் மத்தியில் சற்று ஆறுதலை தந்துள்ளது.
உலகின் பிடித்த விலங்கினை தேர்வு செய்ய, விலங்கியல் நடத்தை ஆய்வாளர் கேண்டி டிசா என்பவர் வாக்கு சேகரித்தார். இதில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பன், சீனா உள்பட, 73 நாடுகளை சேர்ந்த, 50 ஆயிரம் பேர் வாக்களித்தனர்.
வாக்கு சேகரிப்பில், 21 சதவீதம் பேரின் ஆதரவோடு, உலகின் மிக பிடித்த விலங்காக புலிகள் தேர்வு செய்யப்பட்டது. 20 சதவீத ஆதரவோடு, நாய் இரண்டாம் இடத்தையும், 13 சதவீத ஆதரவோடு டால்பின்கள், மூன்றாம் இடத்தையும் பிடித்தன.பத்து சதவீதம் பேர் குதிரைக்கும், ஒன்பது சதவீதம் பேர், சிங்கத்துக்கும், எட்டு சதவீதம் பேர், பாம்புக்கும் வாக்களித்தனர். யானை, சிம்பென்ஸி, திமிங்கலத்துக்கு குறைவான வாக்குகளே பெற்றது.
பட்டாசு வெடிக்காத கிராமம்
கிட்டாம்பாளையம்
கோவை மாவட்டம் சூலூர் தாலூகவில் கருமத்தம்பட்டி-அன்னூர் ரோட்டில் ஒதுங்கிக்கிடக்கும் அருமையான சிறியகிராமம்.
இந்த கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் உள்ளன,அனைவரும் இன்று எடுத்த ஒரு அருமையான முடிவுதான் இந்த கட்டுரையை எழுத தூண்டியது.
அது என்ன முடிவு என்கிறீர்களா?
கிராமத்தில் விருந்தினர் போல வந்து தங்கியிருக்கும் வவ்வால் மற்றும் நைட் ஹெராயின், புல்புல், இக்ரெட், மைனா உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களுக்கு தொந்திரவாக இருக்கும் என்பதால் வரவிருக்கும் தீபாவளிக்கு யார் வீட்டிலும் பட்டாசு வெடிப்பது இல்லை என்பதுதான் அந்த முடிவு,
இதற்கு முக்கியமான காரணமாக இருப்பவர் இங்குள்ள நொய்யல் பசுமை கழக தலைவர் பழனியாண்டிதான். அவர் தமது கிராமத்தில் உள்ள ஆலமரத்தில் ஆயிரக்கணக்கன வவ்வால்கள் இருப்பதையும், அருகாமையில் உள்ள மரங்களில் மற்ற பறவைகள் தங்கிச் செல்வதையும் பார்த்திருக்கிறார்,
எப்போதும் வித,விதமான சத்தத்துடன் இருக்கும் இந்த பறவைகளின் சுறு,சுறுப்பு காரணமாக இந்த மரங்கள் மட்டுமல்ல, தமது கிராமமே உயிர்ப்புடன் இருப்பதை உணர்ந்தார்.
தனது உறுப்பினர்களுடன் இதே போல பக்கத்து ஊரிலும் பறவைகள் இருப்பதாக அறிந்து பார்க்க போனபோது,அங்குள்ளவர்கள், " இருந்ததுங்க, ஆனால் தீபாவளியன்னிக்கு பட்டாசு போட்ட போது பயந்து போய் எல்லாம் பறந்து போனதுதான் அப்புறம் திரும்ப வரவேயில்லீங்க'' என்றதும் அப்போதே தனது கிட்டாம்பாளையம் கிராமத்து பறவைகளை பாதுகாக்க ஊரில் பட்டாசு வெடிப்பதில்லை என்பதை முடிவு செய்தார்.
ஆனால் தான் தனிப்பட்டு இப்படி ஒரு முடிவு எடுத்து ஒன்றும் ஆகப்போவதில்லை, ஊரார் ஒத்துழைப்போடு நடத்த வேண்டிய விஷயமாயிற்றே என்று தனது நண்பர்களுடன் சிலருடன் சேர்ந்து பறவைகள் கிராமத்தில் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஒரு துண்டுபிரசுரம் அடித்து அதனை வீடு,வீடாக போய் விநியோகித்ததுடன், போதுமான விளக்கமும் கொடுத்துவிட்டு கடைசியாக பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
பட்டாசு வெடிக்கக்கூடாது அவ்வளவுதானே,நம்ம பறவைகளுக்காக செஞ்சுட்டாப் போச்சு என்று அனைவரும் சொன்னதுமே தீபாவளியின் ஆனந்தம் அப்போதே வந்துவிட்டதை உணர்ந்தார்.
இந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவி ஜோதிமணி பேசும்பொழுது.,ஆயிரக்கணக்கான வவ்வால்கள், ஊர் மத்தியில இருக்கிற ஆலமரத்துல இருக்கு,இதுனால ஒரு தொந்திரவும் கிடையாது,மாலை ஐந்து மணிக்கு மேல் பறந்து சென்று இரை தேடிவிட்டு அதிகாலை 4 மணி போல திரும்பவரும். இந்த பறவைகள் எவ்வளவு பிரியமும்,நம்பிக்கையும் இருந்தால் எங்கள் கிராமத்தை தேர்வு செய்து தங்கியிருக்கும்.,ஆகவே அதன் நம்பிக்கையை மட்டுமல்ல சந்தோஷத்தையும் கெடுக்கவிரும்பவில்லை,ஆகவே இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில்லை என்று முடிவு செய்தோம் என்கிறார்.
வழக்கம் போல புத்தாடை உடுத்தி,இனிப்பு சசாப்பிட்டு உறவுகளையும்,நட்புகளையும் பார்த்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளப்போகிறோம்,பட்டாசு வெடிக்காதது ஒன்றும் பிரச்னை இல்லை என்று சொன்ன கிராமத்து பெரியவர்கள் பறவைகள் மீது வைத்துள்ள நேசத்தை பார்த்து நெகிழ்ந்தும்,மகிழ்ந்தும் போய் வாழ்த்து சொன்ன போது.,"உண்மையில் வாழ்த்து சொல்லவேண்டியது நம் கிராமத்து பையன்களுக்குதான் ,ஏன்னா...நம்மூர்ல பட்டாசு விடக்கூடாது,பறவை எல்லாம் பறந்து போய்விடும்,அதுனாலே பட்டாசு விடணும்னு விரும்புற பயலுக பக்கத்து ஊர்ல இருக்க சொந்த,பந்தம் வீட்டுக்கு போகலாமான்னு கேட்டபோது ,அதெல்லாம் வேண்டாம்,நம்ம ஊர் பறவைகளைவிட பட்டாசு பெரிசுல்ல நாங்க தீபாவளிக்கு இங்கேயே இருக்கோம்..நம்ம பறவைகளோடயே இருக்கோம்'' என்று சொல்லிவைத்தாற் போல சொன்ன இந்த ஊர் சிறுசுகள்தான் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றனர்.
அதுனால என்ன அவர்களையும் ஒகோன்னு வாழ்த்திடுவோம்
டிஸ்கி} எல்லாமே காப்பி பேஸ்ட்தான்! படித்ததும் பகிரணும்னு தோன்றியதால் பகிர்ந்துள்ளேன்!
நன்றி} தினமலர்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!.
தேவராஜின் சேவை பாராட்டத் தக்கது.பட்டாசு வெடிக்காத கிராமம் கேள்விப் பட்டிருக்கிறேன்.
ReplyDeleteகலக்கல் கதம்பம்...
ReplyDeleteசேவை செய்பவர்களை வெளிச்சம் போட்டுக்
ReplyDeleteகாட்டி இருப்பது அருமை . அதிசய தகவல்கள் .
பாராட்டுக்கள் அனைவருக்கும் உங்களுக்கும் .
nalla thakavalkal sonthame...
ReplyDelete