காதல் அவஸ்தை!


காதல் அவஸ்தை!

தேங்கி கிடந்த குளத்தில்
கல்லெறிந்தாற்  சிதறும் நீர்த்துளி போல
உன் பார்வை பட்டு
சிதறிக் கிடக்கிறது மனசு!

எல்லோரும் போடும் பவுடர்தான் நீ வரும்போது மட்டும்அதிகமாய் மணக்கிறது அது 
விழியாலே பேசியது
புரியாமல் நான் தவிக்கையில்
உன் புன்னகை  என்னை
மயக்கிவிடுகிறது!


நடந்து செல்லும் போது உன்
கொலுசு எழுப்பும் சத்தம்
சதா என்னை துரத்துகிறது!

விட்டு விட நினைத்தாலும்
விடாமல் துரத்தி வருகிறது
உன் நினைவுகள்!
உன் ஒவ்வொரு அசைவும் என்னை அசையவிடாமல் செய்கின்றது! 
விடை கொடுக்க நினைக்கையில்
தடை போடு என்று தவிக்கிறது
என் மனசு!
விரைவில் கை பிடிப்போம்
என்ற நம்பிக்கையில்
விடை கொடுத்து காத்திருக்கிறேன்!
நீர்த்து போகுமுன் நிற்கும்
நெருப்பாய் என் நெஞ்சை சுடாமல்
வாடிய பயிருக்கு ஊற்றும் நீராய்
விரைந்துவா!

டிஸ்கி} காதல் கவிதைகள் படிக்கிற வயதில் எழுதியது! இப்போது நண்பர் சீனி தூள் கிளப்பி வருகையில் எனக்கும் அந்த ஆசை தொத்திக் கொண்டது! நீண்ட நாளுக்குப் பின் ஒரு காதல் கவிதை! எப்படி இருக்கிறது பின்னுட்டத்தில் தெரிவியுங்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

  1. //எல்லோரும் போடும் பவுடர்தான் நீ வரும்போது மட்டும்அதிகமாய் மணக்கிறது//

    இது ஆராய்சி பண்ண வேண்டிய விடயம்

    ReplyDelete
  2. //நண்பர் சீனி தூள் கிளப்பி வருகையில்//

    ஆமா ஆமா இப்பல்லாம் அவரு அப்படி ஆகிட்டாரு...

    ReplyDelete
  3. விடை கொடுக்க நினைக்கையில்
    தடை போடு என்று தவிக்கிறது
    - வரிகள் அருமை!

    ReplyDelete
  4. நல்ல வரிகள் நண்பரே... அசத்துங்க...

    ReplyDelete
  5. அருமையாக உள்ளது .. கலக்குங்க தொடர்ந்து ...

    ReplyDelete
  6. aaakaaaa.....


    nalla irukku sako.....

    neenga sonna seeni naanthaanaa....!!?

    ReplyDelete
    Replies
    1. நீங்களேதான் நண்பரே! அதில் என்ன சந்தேகம்?

      Delete
  7. அருமை நானே கேட்கணும்னு நினைச்சேன் இது என்ன காதல் கவிதை காலமா எல்லோரும் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டீங்களேன்னு நீங்களே விளக்கமும் கொடுத்துட்டீங்க. தொடருங்கள் உங்கள் கனவுகளை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2