சாலை நடுவே வீடு! ஐந்து நாள் வாரம்! அம்சமான ஹன்சிகா! கலக்கல் கதம்பம்!


 சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை சாலைப் பணிக்குத் தர மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் பிரமாண்ட ரோட்டைப் போட்டுள்ளனர் அதிகாரிகள். இதனால் பிரமாண்ட சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது.
லூ பகோன் மற்றும் அவரது மனைவி மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீடு உள்ள பகுதியில் பிரமாண்டமான சாலை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்தன. ஆனால் லூ, அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாக கூறி வீட்டைத் தர மறுத்து விட்டார்.
சீன நாட்டுச் சட்டப்படி எந்த ஒரு தனி மனிதரையும் அவரது வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது என்பதால் லூவின் வீட்டை அரசால் கையகப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த வீட்டை மட்டும் விட்டு விட்டு கையகப்படுத்தப்பட்ட பிற பகுதிகளில் சாலை அமைக்க முடிவானது.
அதன்படி சாலையும் பிரமாண்டமாக போடப்பட்டது. இப்போது லூவின் வீட்டைச் சுற்றிலும் பிரமாண்டமான சாலை போகிறது. ஆனால் லூவின் வீடு மட்டும் துண்டாக காட்சி தருகிறது. அதாவது சுற்றிலும் நீர் சூழ்ந்த தீவு போல லூவின் வீடு வித்தியாசமாக இருக்கிறது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக லூவின் வீட்டின் சில பகுதிகள் இடிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் இந்த ஐந்து மாடிக் கட்டடத்தில் லூவும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர்.
லூ மாதிரி சீனாவில் நிறையப் பேர் உள்ளனராம். அரசு கொடுக்கும் விலை போதவில்லை என்று கூறி தங்களது வீடுகளைக் காலி செய்ய மறுத்து அதே இடத்தில் தங்கியுள்ளனர். ஆனால் அவர்களைச் சுற்றிலும் பிரமாண்டமான வர்த்தக கட்டடங்கள் குவிந்து கிடக்க இவர்களோ குட்டியூண்டு வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்தாண்டின் டிசம்பர் 2012-ல் உள்ள, ஐந்து வாரங்களும், சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகள் தொடர்ந்து வருவது, அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது.நடப்பு, 2012ம் ஆண்டை நிறைவு செய்ய வருகை தரும், டிசம்பர் மாதத்தில், சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய கிழமைகள், மாதம் முழுவதும், ஐந்து வாரங்களும் தொடர்ந்து வருகிறது. 843 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்று வரும் மாதம் மிகவும் அதிர்ஷ்டமானது என, உலக மக்கள் கொண்டாட தயாராக இருக்கின்றனர்.


ஒஸ்தி படத்தில் வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி என்று ரிச்சாவைப்பார்த்து பாடினார் சிம்பு. அவரிடத்தில் உங்களுடன் நடித்த நடிகைகளின் எந்த நடிகை ரொம்ப க்யூட் என்று கேட்டால், ஹன்சிகாதான் என்கிறார். எதை வைத்து சொல்கிறீர்கள்? என்று கேட்டபோது, ஒரு பெண்ணைப்பார்த்ததும் நமக்குள்ளே ஏதோ கலவரம் நடக்க வேண்டும். கண்கள் அவரையே தேடிக்கொண்டிருக்க வேண்டும். எத்தனை முறை பார்த்தாலும் திரும்பத்திரும்ப பார்க்க வேண்டும் என்று மனசு துடிக்க வேண்டும். அப்படி எல்லா அம்சமும் கொண்ட ஒரு நடிகைதான் ஹன்சிகா.
ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் அவரை ரசிகர்கள் உன்னிப்பாக கவனிக்கவில்லை. ஆனால் இப்போது கவனத்துக்கு வந்து விட்டார். அதனால்தான் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பெருகி விட்டார்கள். என்னைப்பொறுத்தவரை எனது படங்களின் நாயகிகள் விசயத்தில் அதிக கவனம் செலுத்துவேன். வேட்டை மன்னன், வாலு படங்களுக்கு ஹன்சிகாவை புக் பண்ணியதுகூட ஒரு விதத்தில் அவரது அழகை முன் வைத்துதான். அவரை ரசிக்கும் ரசிகர்கள் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தோடும் ஒன்றிப்போவார்கள். இது படத்துக்கும் ப்ளஸ்சாக இருக்கும் என்கிறார் சிம்பு.    நன்றி: தட்ஸ் தமிழ். தினமலர்

Comments

  1. சீனா நியூஸ் ஆச்சர்யமாக இருக்கிறது. இதுவே நம் ஊராக இருந்தால்?!!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2