தீபாவளி நினைவுகள்!


தீபாவளி நினைவுகள்!

அறியாத வயதில்
அம்மா எழுப்பி எண்ணெய் தேய்த்து
புத்தாடை அணிவிக்க
அப்பாவின் கைப்பிடித்து கொளுத்திய
மத்தாப்பூ தீபாவளி!

கொஞ்சம் வளர்கையில் தானே குளித்து
தன் விருப்பமாய் டிரெஸ் போட்டு
தங்கைக்கு தராமால் தானே வெடியெல்லாம்
வெடித்து வேகமாய் ஓடிய
தித்திப்பு தீபாவளி!

ரெண்டும் கெட்டான் வயதில்
ரெட்டை ஜடை பெண்களின்
ஒற்றைப்பார்வை பெற பட்டாசை
கையிலே பிடித்து  வெடித்த
வெட்க தீபாவளி!

கொட்டுகின்ற மழையிலே
முக்காடு போட்டுகிட்டு
முடிந்த வரை வெடித்து தீர்த்த
மழை தீபாவளி!

கல்யாணம் ஆகி பட்டாடை சரசரக்க
மனைவியை அருகில் நிறுத்தி
மாமனார் போட்ட மோதிரத்துடன்
மனைவி மெச்ச வெடித்த
தலை தீபாவளி!

இத்தனையும் கடந்த பின்
எத்தனை வரும் என்னென்ன வாங்கமுடியும்
பட்ஜெட் தாங்குமா என்ற
எண்ணத்தில் கரையும்
இந்த தீபாவளி!

இதுவும் கடந்து
பிள்ளைகள் வெடித்து மகிழ
பின்னே அரணாய் நின்று
அக்கால நினைவுகளை
அசைபோடும் ஆனந்த தீபாவளி!

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
  டிஸ்கி} நேற்றைய ஐக்யூ  கேள்விகளுக்கான விடைகள்!
1.சகோதர சகோதரி
2.2000
3. 13
4. 9
5. எல்லா நாய்களும் பாடாது
6. 3
7. கிழக்கு
8. தற்கொலை
9. ரூ 1.மற்றும் 25 காசு
10. உழவன்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. உங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 2. நான் மட்டும்தான் எல்லா விடையும் சரியாகச் சொல்லி இருக்கிறேன் ஹையா!

  ReplyDelete
 3. மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

  ReplyDelete
 4. உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்நாள்
  நல்லதோர் பொன்னாளாக அமைய என் இனிய தீபாவளி
  வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!...........

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2