த்ரி ரோஸஸ்! செருப்பால் அடித்த நடிகையும்! 20ஆயிரம் கோடி மோசடியும்!
த்ரி ரோஸஸ்! செருப்பால் அடித்த
நடிகையும்! 20ஆயிரம் கோடி மோசடியும்!
வணக்கம் வாசகர்களே! மிக நீண்ட
நாட்கள் ஆகிவிட்டது இந்த த்ரி ரோஸஸ் பதிவு எழுதி இப்போது நடக்கும் இணைய சண்டையில் எதை
எழுதவும் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. இது அரசியல் விசயம் அல்ல! பொதுமக்களிடம்
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய விசயமாக இது உள்ளது. தினமலரில் இன்றைய தலைப்பு
செய்தியே இதுதான். என்ன ஒரே பில்டப் பண்ணிகிட்டு போறே விசயத்துக்கு வாய்யா? என்று நீங்கள்
பொறுமுவது காதில் விழுகிறது. சரி சரி விசயத்துக்கு வருகிறேன்!
20,000 கோடி மோசடி!
தமிழகத்தில் பல்வேறு மோசடிகளில் கடந்த 20 ஆண்டுகளில்
மக்களிடம் இருந்து சுருட்டப்பட்ட தொகைதான் இது. நிதி மோசடி குற்றங்கள் நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதற்கு காரணம் மக்களிடம் உள்ள அறியாமையும் பேராசையும்தான்
என்று ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். இந்த நிதி மோசடிகள் தமிழகத்தில்
1990 களில் துவங்கியதாக கூறும் அவர் அது மெல்ல மெல்ல வளர்ந்து இப்போது ஈமு கோழி வளர்ப்பில்
வந்துள்ளதாக கூறினார். இப்போது மோசடிகள் மிகவும் நூதனமாக செய்யப்படுவதாக கூறிய அவர்
இதில் மக்களின் அறியாமையும் பேராசையும் அதிக பங்கு வகிப்பதாக கூறினார். சாதாரணமாக வங்கிகளில்
ஒருலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ஒன்றுக்கு ரூ 900 மட்டுமே அதிகபட்சமாக கிடைக்கும்.
ஆனால் இம்மோசடி நிறுவனங்கள் பத்தாயிரம் ரூபாய் தருவதாக காட்டும் ஆசையில் மக்கள் வீழ்ந்து
விடுகிறார்கள். இதில் கைப்பணத்தை இழந்து அவதிப்படுகிறார்கள்
என்றும் அவர் தெரிவித்தார்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. நம்மக்கள் தொடர்ந்து
ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் சீக்கிரம் பணக்காரனாகி விட வேண்டும். கார்,
பங்களா வாங்கி விட வேண்டும் என்ற பேராசையே! உழைக்காமல் வரும் காசு செரிக்காது நிலைக்காது
என்பதை உணர வேண்டும் மக்கள்! அத்துடன் அவர்களின் அறியாமையை போக்க அரசும் விழிப்புணர்வு
பிரசாரம் செய்வதுடன். அரசு சேமிப்பு திட்டங்களை
பரவலாக மக்களை வந்தடையும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும். சிறந்த சேமிப்பாளருக்கு
ஊக்கத்தொகை போன்றவை வழங்கி சேமிப்பதை ஊக்குவிக்க வேண்டும். வட்டி விகிதத்தையும் மாற்றி
அமைக்கலாம். அத்துடன் இந்த சேமிப்பு பத்திரங்களை நிரப்புதல் போன்றவற்றை எளிமைப் படுத்த
வேண்டும்.
இப்படியெல்லாம் செய்தால் மக்களுக்கும் நன்மை! நாட்டுக்கும்
நன்மை கிடைத்திருக்கும்! இந்த இருபதாயிரம் கோடியெல்லாம் இருந்தால் எவ்வளவோ முன்னேற்றம்
வந்திருக்கும் அல்லவா? நம்ம அரசியல் வாதிகள் அடித்த கொள்ளையை விட குறைவாத்தான் இருக்கு
இதனால ஒண்ணும் பாதிப்பு இல்லை என்று விதண்டா வாதம் பேசாமல் கொஞ்சம் யோசிக்க வேண்டிய
காலம் இது! மாற்றங்கள் நம்மிடம் வருமானால் மற்றவை தானே வரும்!
செருப்பால் அடித்த நடிகை!
யாரு அந்த நடிகை! யாரு அந்த நடிகை என்ன மேட்டரு
என்று நீங்க தவிப்பது நல்லாவே தெரியுது! ஆனா அந்த நடிகைக்கு இருந்த வீரம் நம்ம ஊரு
நடிகைகங்களுக்கு வருமான்னு தெரியலை! இந்த நடிகை கன்னட நடிகை! தனக்கு தர வேண்டிய எட்டு லட்ச ரூபாவை டைரக்டர் தரவில்லை என்பதற்காக
பத்திரிக்கையாளர் கூட்டத்திலேயே டைரக்டரை பொத்தி எடுத்து இருக்காங்க இந்த அம்மணி.
என்ன மேட்டருன்னு கேக்குறீங்களா? கன்னட சினிமா
டைரக்டர் ரிஷி. இவர் “கொட்டலாலோ பூ காய்” அப்படின்னு ஒரு படத்தை எடுத்து வந்திருக்கார்.
இந்த படத்தின் கதாநாயகி நயானா கிருஷ்ணா. இந்த படத்தின் செலவிற்காக எட்டு லட்ச ரூபாயை
நடிகையிடம் வாங்கியிருக்கிறார் டைரக்டர். அதற்கு பதிலாக திரைப்பட வினியோக உரிமை தருவதாக
கூறியுள்ளார். ஆனால் ரூபாயும் தரவில்லை! வினியோக உரிமையும் தரவில்லை! நேற்று படம் சம்பந்தமாக
ஒரு ஓட்டலில் பிரஸ் மீட் நடந்தது. அப்போது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இந்த புகாரை
கூறிய நடிகை திடீரென ஆவேசமடைந்து தனது செருப்பை கழற்றி டைரக்டரின் முகத்தில் அறைந்தார்.
அதிர்ச்சி அடைந்த டைரக்டர் தப்பி ஓடி ஒரு ஆட்டொவில் ஏறினார். அங்கும் சென்ற நடிகையும்
அவரது ஆதரவாளர்களும் டைரக்டரை புடைத்தனர். இதற்குள் போலீஸ் வந்து டைரக்டரை மீட்டுள்ளது.
டைரக்டர் குடி போதையில் படம் இயக்கும் போது நடிகையிடம் தாறுமாறாக நடந்து கொண்டதாகவும்
அதற்கும் சேர்த்து நடிகை பழிவாங்கி விட்டதாகவும் பேசப்படுகிறது. எப்படியோ வீரத்திருமகள்
தான் போங்க!
ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்
என்ற நூலில் இருந்து ஒரு சிறு கதை அல்ல நிஜம்!
என்ன வேலை செஞ்சு என்ன பிரயோசனம்! வாய்க்கும்
வயித்துக்குமே சரியா இருக்கு! ஒண்ணுத்துக்கும் பிரயோசனமுல்லாம போயிடுது வருமானம் என்று
பேசுவது நமது வழக்கம்! இப்படிப்பட்ட நமக்கு
ஒரு படிப்பினை தருகிறார் ரிப்ளி.
நான்கு பேர் ஆளுக்கொரு இரும்புத் துண்டை வாங்கினர்
250 ரூபாய் அதன் விலை!. ஒருவர் அதை ஏதோ சொந்த உபயோகத்திற்காக பயன் படுத்தினார். இன்னொருவர்
அதை உருக்கி குதிரைக்கு லாடம் செய்தான் அதை 2500 ரூபாய்க்கு விற்றார். இன்னொருவர் தையல்
இயந்திரத்திற்கு தரமான ஊசிகள் செய்து அதை இரண்டரை லட்சத்திற்கு விற்றார். கடைசி நாலாவது
நபர் அதையே சக்தி வாய்ந்த இயந்திரம் ஒன்றுக்கு ஸ்பிரிங்குகளாக செய்து இரண்டரை கோடிக்கு
விற்று லாபம் சம்பாதித்து விட்டார்.
இதில் விசயம் என்ன வென்றால் அனைவரிடம் இருந்ததும்
250 ரூபாய் மதிப்பிலான இரும்புத்துண்டு ஒன்று தான். ஆனால் அதை பலவிதமாக வடிவமைக்கும்
போது மதிப்பு பலமடங்கு அதிகமாகிறது.இரும்பை வாங்கிய ஒருவன் அதை பற்றிய சிந்தனையே செய்யவில்லை!
அதே இரும்புத் துண்டை மற்ற மூவரும் தன் சிந்தனையால் மாற்றி அமைத்து அதற்கேற்ற பலனை
அடைந்தனர். நம் எல்லோரிடமும் திறமைகள் ஒளிந்து கிடக்கிறது. அதை நாம் வெளிப்படுத்துவதற்கு
ஏற்பவே பலன் கிடைக்கும்.
ஆகவே திறமையை வெளிப்படுத்த சிந்திப்போம்! செயல்படுவோம்!
வெற்றி பெறுவோம்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தலாமே! நன்றி!
இரும்புக் கதை மிக அருமை.
ReplyDeleteஉண்மையில் நடிகையின் வீரம்
பிரமிக்கத் தக்கதே.
பேராசை படக் கூடாது.பெரு நஷ்டம் தான்
விளையும்.
மொத்தத்தில் உபயோகமான பதிவு .
பாராட்டுக்கள்.!
இரண்டு செய்திகளும் செய்தித் தாளில் படித்தேன், இல்லை இல்லை, பார்த்தேன். மூன்றாவது விஷயம் 'உண்மைதானே' என்று சொல்ல வைக்கிறது.
ReplyDeleteஅருமையான சுவை, மணம், திடம்! 3 ரோசஸ் அருமை! 3வது ரோஸ் சூப்பரோ சூப்பர்!
ReplyDeleteம்
ReplyDelete3 ம் அருமை.
ReplyDelete