உங்களின் தமிழ் அறிவு எப்படி?
உங்களின் தமிழ் அறிவு எப்படி?
தமிழ் நாட்டில் பிறந்திருக்கிறோம்!
தமிழை வாசிக்கிறோம், பேசுகிறோம். ஆனால் தமிழினைப் பற்றி நமக்கு எந்த அளவுக்கு விசயம்
தெரியும். ? இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் எல்லாம் நாம் முதல் வகுப்பில் இருந்து
படித்து வந்ததுதான்? இதற்கு விடை தெரிகிறதா என்று பாருங்கள்? குறைந்த பட்சம் பாதிக்காவது
தெரிந்தால் மீதியை அறிந்து கொள்ளுங்கள். மொத்த
விடையும் தெரிந்தால் நீங்கள் தமிழன் என்று பெருமை பட்டுக் கொள்ளுங்கள்!
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை |
கனியன் பூங்குன்றனார் |
1. தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் யார்?
2. தாயுமானவர் பிறந்த ஊர் எது?
3. யாதும் ஊரே யாவரும் கேளீர் யார் கூற்று?
4. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
5. தமிழ்த்தாய் வாழ்த்து எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
6. கம்பர் பிறந்த ஊர் எது?
7. குறிஞ்சி பாட்டு எழுதியது யார்?
8. தமிழ் நாடகத்தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
9. சைவத் திருமறைகள் எத்தனை?
10. குறிஞ்சிமலர் எழுதியவர் யார்?
11. சீத்தலை சாத்தனார் எழுதிய காப்பியம் எது?
கம்பர் |
12. கல்வியில் பெரியவன் யார்?
13. நுணல் என்று அழைக்கப்படும் விலங்கினம் எது?
14. செந்நாப் போதார் என்று அழைக்கப்படுபவர் யார்?
15. நாடகக் காப்பியம் என்று அழைக்கப்படுவது எது?
16. மூன்று நாடுகளின் பெருமை கூறும் நூல் எது?
17. உத்தம சோழ பல்லவராயன் என்று அழைக்கப்பட்ட புலவர்
யார்?
18. பாரதி என்பதன் பொருள் என்ன?
19. திருவிளையாடல் புராணத்தில் உள்ள படலங்கள் எத்தனை?
20. கவிமணி என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடைகள்:
1.மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
2.திருமறைக்காடு
3.கனியன் பூங்குன்றனார்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை |
4. ஐந்துவகைப்படும். எழுத்து, சொல், பொருள், யாப்பு,
அணி
5.மனோன்மணியம்
6 சோழ நாட்டில் உள்ள திருவழுந்தூர்
7. கபிலர்
8 சங்கரதாஸ் சுவாமிகள்
9 பன்னிரண்டு
சேக்கிழார் |
10 நா. பார்த்த சாரதி
11 மணிமேகலை
12. கம்பர்
13 தவளை
14 திருவள்ளுவர்
15 சிலப்பதிகாரம்
16. சிலப்பதிகாரம்
17 சேக்கிழார்
18 கலைமகள்
19. 64
20. தேசிகவிநாயகம் பிள்ளை.
சங்கரதாஸ் சுவாமிகள் |
தெரிந்தவர்கள் மீண்டும்
ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்! தெரியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்! அவ்வப்போது
இது மாதிரியான பதிவுகளை எழுதலாம் என்று உள்ளேன். உங்களது கருத்துக்களை பின்னூட்டம்
வாயிலாக அறிவியுங்கள்! நன்றி!
படங்கள் உதவி} கூகுள் இமேஜஸ்
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அப்படிக் கேளுங்க... சிறப்பான தொடக்கம்... பலரும் அறிந்து கொள்ளட்டும்... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
சிறப்பான கேள்விகள்..பல கேள்விகளுக்கு எனக்கும் பதில் தெரியவில்லை..நல்ல ஆரம்பம்..தமிழ் அறிவும் வளரும்..நன்றி
ReplyDeletenalla muyarchi.....
ReplyDeletethodarungal....
en nilai......
rompa mosam.....