உங்கள் ஐக்யூ எப்படி? மூளைக்கு வேலை!
உங்கள் ஐக்யூ எப்படி?
இப்போதெல்லாம் பல போட்டித் தேர்வுகளில் நமது மூளையை சோதிக்கும் ஐக்யூ எனப்படும்
சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. அந்த வகை
கேள்விகளில் சில உங்களுக்கு இப்போது !
விடை தெரிகிறதா என்று பாருங்கள் இல்லையென்றாலும் கவலைப்படாதீர்கள் அடுத்த பதிவில்
விடைகளை தருகிறேன்!
ஹிஹி! என்ன போஸ்டு போடறது குழம்பி ஒரு புத்தகத்தை
புரட்டினேன்! அதன் விளைவுதான் இந்த பதிவு!
1)‘அ’ என்பவர் ‘ஆ’வின் சகோதரி. ஆனால் ‘ஆ’‘ அ’ வின் சகோதரி அன்று. ‘அ’விற்கும்
‘ஆ’விற்கும் உள்ள உறவு முறை என்ன?
அ) சகோதர சகோதரி ஆ) சகோதரர்கள் இ) சகோதரிகள் ஈ) எதுவுமில்லை!
2)இருபத்தியோராம் நூற்றாண்டு ஆரம்பிக்கும் வருடம்
அ) 2000 ஆ)2001 இ) 2101 ஈ) 2100
3) ஒரு கியுவில் இரு முனைகளில் இருந்தும் 6வது இடம் x என்றால் அந்த க்யுவில்
உள்ள நபர்களின் எண்ணிக்கை?
அ) 12 ஆ)13 இ)11 ஈ)9
4) ஒருவரிடம் 17 மாடுகள் இறந்து விட்டன. அவற்றுள் ஒன்பது நீங்கலாக மற்றவை இறந்து
விட்டன. மீதியிருப்பது எத்தனை?
அ) 9 ஆ)8 இ) 12 ஈ)
7
5) எந்த நாயும் பாடாது. ஆனால் சில நாய்கள் பேசும். அப்படியானால்-
அ) சிலநாய்கள் பாடும்.
ஆ) எல்லா நாய்களும் பாடாது
இ) எல்லா நாய்களும் பேசும்.
ஈ) சில நாய்கள் பாடாது.
6)இராமனின் பிறந்த தேதி 1964ம் வருடம் பிப்ரவரி 29ந்தேதி. 1976ம் வருடம் வரை
அவன் கொண்டாடிய பிறந்த நாள்களின் எண்ணிக்கை?
அ) 3 ஆ) 5 இ) 12 ஈ) 8
7) நான் வடக்கு நோக்கி சென்று வலப்புறமாக திரும்பி மீண்டும் வலப்புறமாக திரும்பி
பின்னர் இடப்புறமாக திரும்பி சென்றால் நான் செல்லும் திசை எது?
அ) கிழக்கு ஆ) மேற்கு
இ) வடக்கு ஈ) தெற்கு
8) இந்தியன் பீனல் கோர்ட் சட்டத்தின் படி ஒரு குற்றத்தை வெற்றிகரமாக செய்து
முடித்தால் தண்டனை கிடையாது. ஆனால் முடிக்க தவறினால் தண்டனை அது எது?
9) ஒருவனிடம் ஒண்ணே கால் ரூபாய்க்கு இரண்டே நாணயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று
ஒருரூபாய் நாணயம் இல்லை. அப்படியானால் அவனிடம் இருந்த நாணயங்கள் எது?
10)ஒரு உழவன் ஒரு சாக்கு நிறைய நெல்லை தூக்கி வந்தான். அவனது வேலைக்காரனோ இரண்டு
சாக்கு தூக்கி வந்தான். யார் அதிக எடை தூக்கி வந்தனர்.
காதுல புகை வருதா! கொஞ்சம் மூளைக்கு
வேலை கொடுங்க! உங்கபதில்களை பின்னூட்டத்தில் சொல்லி அசத்துங்க! என்னது பரிசா! எல்லா
விடையும் கண்டுபிடிப்பவருக்கு ஐக்யூ மன்னன் பட்டத்தை நம்ம வலைப்பூ வாசகர்கள் சார்பா
தாரளமா கொடுத்திடலாம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
1. அ
ReplyDelete2. ஆ
3. இ
4. கேள்வி புரியலியே
5. ஆ
6. அ
7. அ
8. -
9. மற்றையது ஒரு ரூபாயாய் இருந்து இருக்கலாமோ
10. உழவன்
நல்ல கேள்விகள் விடைகள் இதோ
ReplyDeleteசரியா இருந்தா பரிசு குடுக்கணும்,ஒ.கே யா!
1. அ)சகோதர சகோதரி
2. அ) 2000
3. ஆ)13
4. அ) 9
5.ஆ) எல்லா நாய்களும் பாடாது.
6. அ) 3
7. அ) கிழக்கு
8. தற்கொலை
9. ஒன்று ஒரு ருப்பாய் நாணயம் இல்லை மற்றொன்று ஓர் ரொப்பி நானயம்தான். எனவே 1 ரூ மற்றும் 25 காசு
10. உழவந்தான். வேலைக்காரன் தூக்கி வந்தது வெறும் காலி சாக்குகள் தானே!
சரியா?
tnmdharan@yahoo.com
வாழ்த்துக்கள் அண்ணே
Delete//ஒருவரிடம் 17 மாடுகள் இறந்து விட்டன
ReplyDelete///
இருந்தன என வந்திருக்க வேண்டும்
ஹி ஹி ஹி ஐக்யூ அப்படின்னா??.....
ReplyDelete//என்ன போஸ்டு போடறது குழம்பி ஒரு புத்தகத்தை புரட்டினேன்! அதன் விளைவுதான//
ReplyDeleteநடத்துங்க ராசா நடத்துங்க
உங்க பக்கம் வர பயமா இருக்கு. நீங்க கேள்வியெல்லாம் கேக்குறீங்க. எங்களுக்கெல்லாம் கேக்கத்தான் தெரியும். ஆசிரியர் இனம். ஹா ஹா
ReplyDeleteபோட்டித்தேர்வுகளுக்குப் பயன் படும் வினாக்கள் சுரேஷ். தொடருங்கள். பயனுள்ள பதிவு. நாங்களும் தொடர்கிறோம்.
ReplyDeleteவந்து விடையளித்தவர்களுக்கு மிக்க நன்றி! சரியான விடைகளை சொல்லி ஐக்யூ மன்னன் என்ற பட்டத்தை பெறுகிறார் நண்பர் முரளிதரன்! தமிழக வலைப்பதிவர்கள் சார்பாகவும் வலைப்பதிவு வாசகர்கள் சார்பாகவும் அந்த பட்டத்தினை நண்பருக்கு சூட்டி மகிழ்கின்றேன்! வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteans:
ReplyDelete1.a
2.d
3.c
4.a
5.b
6.b
7.b
8.-
9.1rubee coin at anathor
10.uzhavan