சூரிய அடுப்பும் சிறுநீர் மின்சாரமும்! கலக்கல் கதம்பம்,
சூரிய அடுப்பு
சிறுநீரில் மின்சாரம்
நைஜீரியா பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடு. ஆனால் இங்கு மின்சாரம் என்பது பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. பல பகுதிகள் இன்னும் மின்சாரத்தைக் காணாமலேயே இருக்கின்றன. பலருக்கு மின்சாரத்தைப் பார்த்தே பல காலமாகி விட்டதாம்.
இந்த நிலையில்தான் 14 வயதான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகள் சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மக்கள் மனதில் பால் வார்த்துள்ளனர்.
லாகோஸில் நடந்த ஆப்பிரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தங்களது கண்டுபிடிப்பை அவர்கள் காட்சிக்கு வைத்தனர்.
சிறுநீரை முதலில் இவர்கள் நைட்ரஜன், தண்ணீர் மற்றும் ஹைட்ரஜனாக பிரிக்கின்றனர். பின்னர் ஹைட்ரஜனை ஒரு நீர் வடிகட்டிக்குள் அனுப்பி சுத்திகரிக்கின்றனர். அது பின்னர் ஒரு கேஸ் சிலிண்டருக்குப் போகிறது.
அங்கு ஹைட்ரஜன் போராக்ஸ் திரவமாக மாறுகிறது. பின்னர் அதிலிருந்து ஹைட்ரஜன் வாயு தனியாக பிரிக்கப்படுகிறது. அந்த சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ஜன் வாயு, ஜெனரேட்டருக்குப் போய் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
ஒரு லிட்டர் சிறுநீரைப் பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்குத் தேவையான மின்சாரம் கிடைக்கிறதாம்.
நைஜீரிய இளம் மாணவிகளின் இந்த கண்டுபிடிப்பு நைஜீரியாவில் இப்போது பெரும் பேச்சாக மாறியுள்ளதாம்.
தமிழ்நாட்டில் முதலி்ல் இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி நிறைய மின்சாரம் தயாரிக்கலாம். பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் சுவர் பக்கம் ஒதுங்குவோரிடமிருந்து லிட்டர் கணக்கில் சிறுநீரைப் பிடித்தாலே போதும் நிறைய மின்சாரத்தை அள்ளி விடலாமே...
நூறு வயது வாழும் குழந்தைகள்!
லண்டன்: 2012ம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் 100 வயது வரை வாழ்வார்கள் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 2012ல் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் 100 வயது வரை வாழ்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் 70 வயது வரை வேலை செய்வார்கள் என்றும் தங்கள் தாத்தா, பாட்டியை விட 8 ஆண்டுகள் தாமதமாகவே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் வாழ்வை விட வித்தியாசமாக இருக்குமாம். நடப்பாண்டில் பிறந்த, பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் 1983ல் பிறந்திருப்பார்கள் என்றும் அவர்களின் பெற்றோர் 1957ல் பிறந்திருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிறந்த குழந்தைகள் 31 வயதில் தான் முதல் குழந்தையை பெற்றுக்கொள்வார்களாம். மேலும் பலர் குழந்தையே பெற்றுக்கொள்ள மாட்டார்களாம். அப்படியே பெற்றுக் கொண்டாலும் ஒன்றோடு நிறுத்திக் கொள்வார்களாம். 20துகளில் அவர்களுக்கு நிதி தொடர்பான அழுத்தங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 70 வயதில் தான் ரிட்டையர் ஆவார்களாம்.
2012 பிறந்த பிறக்கும் குழந்தைகளில் 39 சதவீத பெண்கள் குழந்தைகளும், 32 சதவீத ஆண் குழந்தைகளும் 100வது பிறந்தநாளைக் கொண்டாடுவார்கள். அதாவது ஆண்களை விட அதிகமான பெண்கள் 100 வயதைத் தொடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இணையத்தில் ஆங்கிலத்தில் அந்த சிறுநீர் மின்சாரம் வாசித்து இருந்தேன். நல்ல பகிர்வு
ReplyDeleteமனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...
ReplyDeleteசிறந்த பகிர்வு. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்றைய நிலைமைக்கு மிகவும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு... நன்றி...
ReplyDeleteகுடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
மின்சார பிரச்சினை தீர்ந்தால் சரி!
ReplyDeleteஅருமையான பகிர்வு...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
ReplyDelete