தளிர் ஹைக்கூ கவிதைகள்! 14
வலி!
சுக பிரசவம்
சுமையை இறக்குகையில்
சொல்லொனா வேதனை!
பிரசவம்!
பதற்ற நொடிகள்!
மணியாகின பொழுதுகள்!
பிரசவம்!
அழுகை சத்தம்!
மகிழ்ந்தார்கள்!
பிரசவம்!
வலிக்க வைத்தாலும்
மகிழ்ச்சிதான்!
குழந்தை!
வேதனை விலகியது
குழந்தை!
முட்டி மோதியதும்
முனகல் கூடியது
பிரசவம்!
வெளிச்சம் பார்க்க
இத்தனை வேதனை!
பிரசவம்!
டிஸ்கி} நேற்று காலை 9.20 மணிக்கு என்
மனைவிக்கு பெண்குழந்தை சுகப்பிரசவமாக பிறந்துள்ளது. இருவரும் நலம்! அதனால் இணையம் பக்கம்
வர முடியவில்லை! அதன் காரணமாக இன்றைய ஹைக்கூக்கள் பிரசவம் பற்றியது.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
சூப்பர் தல.. ஜூனியர் சுரேஷினிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பா!
Deleteவாழ்த்துக்கள் சுரேஷ்.சந்தோஷத்துல கவிதை முழுதும் அதை பத்தியே இருக்கு,. இருக்கட்டும் இருக்கட்டும்.
ReplyDeleteவாழ்த்துகள் கவிதைக்கும் , வாழ்வின் கவிதையாய் வந்திருக்கும் மகளுக்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள்... மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேஷ் ஐயா.
ReplyDeleteகவிதைகளும் உங்கள் மகளைப் போல் அழகு. அழகு.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ReplyDelete