பிள்ளை வரம் அருளும் ஸ்கந்த சஷ்டி விரதம்


பிள்ளை வரம் அருளும் ஸ்கந்த சஷ்டி விரதம்


ஐப்பசி மாதம் அமாவாசை கழித்து வரும் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறுதினங்களில் விரதம் இருந்து முருகனை வழிபடுதல் ஸ்கந்த சஷ்டி விரதம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த விரதம் முருகனை குறித்து இருந்து பக்தியுடன் பூஜித்து வழிபட்டு வர முருகனைப் போல அழகான பிள்ளை பிறக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்கந்த சஷ்டி சிறப்பாக கொண்டாடப்படும் தலம் திருச்செந்தூர். அங்கு முதல் நாள் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி ஆறு நாட்கள் உற்சவத்தில் இறுதி நாள் சூர சம்ஹாரம் நடைபெறும்.
   காஷ்யப முனிவரின் புத்திரர்களான சிங்கமுகன், சூரபத்மன், தாரகா சூரன்  மூவரும் சிவனிடம் சாகவரம் பெற்று அகந்தையால் பல அட்டூழியங்களை செய்து வந்தனர். அவர்களை அழிக்கவே ஸ்கந்தன் அவதரித்தார். சிவனின் அம்சமான சிவகுமாரன் முருகன் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர்.
   சூரபத்மன் கடலின் நடுவில் வீர மகேந்திரபுரி என்ற பட்டினத்தில் வசித்தான். முருகன் அங்கு வந்து சூரனை போருக்கு அழைத்தபோது சிறு குழந்தையிடம் போர் செய்வதா என்று சூரன் தயங்கினான்.பின்னர் முருகர் தனது விஸ்வ ரூபம் காட்டவே சூரன் பணிந்து போனான். ஸ்கந்த பெருமானும் அவனை மன்னித்து மாமரமாக மாறி நின்ற அவனை பிளந்து சேவலாகவும் மயிலாகவும் மாற்றி தன் வாகனமாகவும் கொடிச்சின்னமாகவும் ஏற்றார்.
   சூரன் போரின் போது கடலாக மாறி நின்ற இடமே திருசெந்தூர். அவனின் வேண்டுகோள்படி அந்த நீரில் நீராடி முருகரை துதிக்கும் பக்தர்களுக்கு துன்பங்கள் பறந்தோடுகிறது
  வேல் என்றால் கொல்லும் ஆயுதம் அல்ல அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டு பொருள். அதனால்தான் வேல் வேல் வெற்றிவேல் என்று முழக்கமிட்டு வழிபடுகிறோம். பக்தர்களின் பிறவித்துன்பத்தை களையவரும் வேல் முருகன் திருவடிகளில் சேர்க்கும் என்பதே சூரபத்ம வரலாற்றின் மூலம் அறியலாம்.


ஸ்கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை
 ஸ்கந்த சஷ்டி  ஆரம்பம் முதல் இறுதி வரை விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் 4.30 மணியில் இருந்து 6.00 மணிக்குள் நீராட வேண்டும்.
பகலில் பழம் பால் மட்டுமே உண்ணவேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவாக காலையில் சிற்றுண்டி அருந்தலாம்.
முருகருக்குரிய மந்திரங்களை பாடல்களை நாள் முழுவதும் பாராயணம் செய்து வருதல் நலம். ஓம் சரவணபவாய நம என்று ஜபித்து வரலாம்.
திருப்புகழ்,ஸ்கந்த சஷ்டி கவசம், போன்ற கவசங்களை பாராயணம் செய்யலாம்.
அருகில் உள்ள முருகர் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை வழிபாடு செய்து வருதல் வேண்டும்.
மாலையில் மீண்டும் குளித்து விட்டு வீட்டில் பூஜையறையில் முருகரை வழிபட வேண்டும். முடிந்தால் கோயிலில் வழிபாடு செய்யலாம்.
இதன் பின்னர் 8 மணிக்கு மேல் பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.
இவ்வாறு ஆறுநாட்கள்செய்து ஆறாவது நாளில் சூரசம்ஹாரம் எனும் நிகழ்ச்சி முருகர் கோயிலில் தரிசனம் செய்து விரதம் முடிக்க வேண்டும்.
இந்த விரதத்தை தொடர்ந்து அனுஷ்டித்து வர புத்திர தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும் குழந்தை முருகர் அருளால் பிறக்கும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சஷ்டி விரதம். இதையும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுஷ்டிக்க குழந்தை பிறக்கும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி அருகில் உள்ள சிறுவாபுரி, ஆண்டார்குப்பம் முருகன் ஆலயங்களில் ஸ்கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறுவாபுரியில் ஸ்கந்த சஷ்டியன்று சூரசம்ஹாரம் சிறப்பாக செய்யப்படுகிறது. பொன்னேரி அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு ஸ்கந்த சஷ்டி லட்சார்ச்சணை சிறப்பாக செய்யப்படுகிறது.
சென்னை கந்த கோட்டத்தில் உள்ள முருகருக்கும் லட்சார்ச்சணை சிறப்பாக செய்யப்படுகிறது.

சஷ்டி விரதம் இருப்போம்! ஸ்கந்தன் அருள் பெறுவோம்!


தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. தெரியாத பல தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  2. விரிவான விளக்கங்களுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  3. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்ற பழமொழி இந்த விரதத்தை அடிப்படையாக கொண்டுதான் சொல்லப்பட்டது.

    ReplyDelete
  4. சுவாமிக்கதைகள் கேட்கும்போது நல்லாவே இருக்கு.ரசித்தேன் !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2