Posts

Showing posts from November, 2012

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 16

Image
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 16 உங்கள் ப்ரிய “பிசாசு” முன்கதை:  ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்வியின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கையில் அவளை ப்ரவீணா என்னும் பெண்ணின் ஆவி பிடித்துள்ளதாக கூறுகின்றனர். அதை விரட்ட மூவரும் பாயிடம் செல்கின்றனர். அந்த மசூதியின் மவுல்வி செல்வி உள்ளே நுழையும் போதே வாம்மா பிரவீணா என்று அழைக்க மூவரும் அதிர்கின்றனர். இனி முந்தைய பகுதிகளுக்கான லிங்க்:       http://thalirssb.blogspot.in/2012/06/blog-post_3637.html  பகுதி  1 http://thalirssb.blogspot.in/2012/07/2.html  பகுதி  2 http://thalirssb.blogspot.in/2012/08/3.html  பகுதி  3 http://thalirssb.blogspot.in/2012/08/4.html   பகுதி  4   http://thalirssb.blogspot.in/2012/08/5.html   பகுதி  5 http://thalirssb.blogspot.in/2012/08/6.html     பகுதி  6 http://thalirssb.blogspot.in/2012/09/7.html     பகுதி  7 http://thalirssb.blogspot.in/2012/09/8.html    ...

காதல் அவஸ்தை!

Image
காதல் அவஸ்தை! தேங்கி கிடந்த குளத்தில் கல்லெறிந்தாற்  சிதறும் நீர்த்துளி போல உன் பார்வை பட்டு சிதறிக் கிடக்கிறது மனசு! எல்லோரும் போடும் பவுடர்தான்  நீ வரும்போது மட்டும்அதிகமாய் மணக்கிறது அது  விழியாலே பேசியது புரியாமல் நான் தவிக்கையில் உன் புன்னகை  என்னை மயக்கிவிடுகிறது! நடந்து செல்லும் போது உன் கொலுசு எழுப்பும் சத்தம் சதா என்னை துரத்துகிறது! விட்டு விட நினைத்தாலும் விடாமல் துரத்தி வருகிறது உன் நினைவுகள்! உன் ஒவ்வொரு அசைவும் என்னை அசையவிடாமல் செய்கின்றது!  விடை கொடுக்க நினைக்கையில் தடை போடு என்று தவிக்கிறது என் மனசு! விரைவில் கை பிடிப்போம் என்ற நம்பிக்கையில் விடை கொடுத்து காத்திருக்கிறேன்! நீர்த்து போகுமுன் நிற்கும் நெருப்பாய் என் நெஞ்சை சுடாமல் வாடிய பயிருக்கு ஊற்றும் நீராய் விரைந்துவா! டிஸ்கி} காதல் கவிதைகள் படிக்கிற வயதில் எழுதியது! இப்போது நண்பர் சீனி தூள் கிளப்பி வருகையில் எனக்கும் அந்த ஆசை தொத்திக் கொண்டது! நீண்ட நாளுக்குப் பின் ஒரு காதல் கவிதை! எப்படி இருக்கிறது பின்னுட்டத்தில் தெரிவியுங்க...

உங்களின் தமிழ் அறிவு எப்படி?

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? தமிழ் நாட்டில் பிறந்திருக்கிறோம்! தமிழை வாசிக்கிறோம், பேசுகிறோம். ஆனால் தமிழினைப் பற்றி நமக்கு எந்த அளவுக்கு விசயம் தெரியும். ? இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் எல்லாம் நாம் முதல் வகுப்பில் இருந்து படித்து வந்ததுதான்? இதற்கு விடை தெரிகிறதா என்று பாருங்கள்? குறைந்த பட்சம் பாதிக்காவது தெரிந்தால்  மீதியை அறிந்து கொள்ளுங்கள். மொத்த விடையும் தெரிந்தால் நீங்கள் தமிழன் என்று பெருமை பட்டுக் கொள்ளுங்கள்!  மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை  கனியன் பூங்குன்றனார் 1.    தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் யார்? 2.    தாயுமானவர் பிறந்த ஊர் எது? 3.    யாதும் ஊரே யாவரும் கேளீர் யார் கூற்று? 4.    தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? 5.    தமிழ்த்தாய் வாழ்த்து எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? 6.    கம்பர் பிறந்த ஊர் எது? 7.    குறிஞ்சி பாட்டு எழுதியது யார்? 8.    தமிழ் நாடகத்தந்தை  என்று அழைக்கப்பட்டவர் யார்? 9.    சைவத் திருமறைகள் எத்தனை? 10...

தகுதிக்கு மீறினால்! பாப்பா மலர்!

Image
தகுதிக்கு மீறினால்!  பாப்பா மலர்! ஓர் மலை சூழ் அடர்ந்த கானகத்தில் ஒரு காட்டு பூனை தன் வழியே நடந்து சென்று கொண்டிருந்தது. மிகவும் பருத்து புலி போன்ற வரிகளுடன் உரோமங்கள் அடர்ந்து காணப்பட்ட அது தான் புலியின் இனம் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டது. தனது மீசையை முன்னங்கால்களால் நீவி விட்டுக் கொண்டு சுற்றும் முற்றும் பெருமையுடன் பார்த்தது. அதைக்கண்டு சிறிய பறவையினங்கள் “கீச்கீச்” என்று கத்திக் கொண்டு ஓடியதும் அதன் கர்வம் அதிகமானது.    ஆகா! நம்மைக் கண்டு இத்தனை பேர் பயப்படுகின்றனரே! நாமும் புலிதான்! என்று மேலும் ஆனந்தம் அடைந்து கொண்டது. அங்கேயே அமர்ந்து தனது உடலை நாவால் நக்கிக் கொண்டே சுற்றும் முற்றும் இரை ஏதும் சிக்காதா என்று பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கே நிலவிய நிசப்தத்தை கலைத்தவாறே மான் ஒன்று சரசரவென ஓடிவந்து கொண்டிருந்தது.   மான் ஓடிவருவதை கண்ட  காட்டுப் பூனை, என்ன மானாரே! ஏன் இவ்வாறு தலை தெறிக்க ஓடிவருகிறீர்கள்!அப்படி என்ன தலை போகிற விசயம்? என்று கேட்டது.   உயிர் போகிற விசயம் பூனையாரே! புலி ஒன்று இந்த பக்கமாக வருகிறது! ஓடி தப்பித்துக் கொ...

சாலை நடுவே வீடு! ஐந்து நாள் வாரம்! அம்சமான ஹன்சிகா! கலக்கல் கதம்பம்!

Image
  சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை சாலைப் பணிக்குத் தர மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் பிரமாண்ட ரோட்டைப் போட்டுள்ளனர் அதிகாரிகள். இதனால் பிரமாண்ட சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது. லூ பகோன் மற்றும் அவரது மனைவி மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீடு உள்ள பகுதியில் பிரமாண்டமான சாலை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்தன. ஆனால் லூ, அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாக கூறி வீட்டைத் தர மறுத்து விட்டார். சீன நாட்டுச் சட்டப்படி எந்த ஒரு தனி மனிதரையும் அவரது வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது என்பதால் லூவின் வீட்டை அரசால் கையகப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த வீட்டை மட்டும் விட்டு விட்டு கையகப்படுத்தப்பட்ட பிற பகுதிகளில் சாலை அமைக்க முடிவானது. அதன்படி சாலையும் பிரமாண்டமாக போடப்பட்டது. இப்போது ...

கார்த்திகை தீபம் ஏற்றுங்கள்! கந்தன் அருளை பெற்றிடுங்கள்!

Image
கார்த்திகை தீபம் ஏற்றுங்கள்! கந்தன் அருளை பெற்றிடுங்கள்! அழகு முருகனாம் ஆறுமுகப் பெருமானுக்குரிய முக்கிய விரதம் கார்த்திகை விரதம். இந்த விரதம் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கவல்லது. இவ்விரதம் நட்சத்திரத்தின் அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். அருகில் உள்ள முருகன் ஆலயங்களுக்கு சென்று முருகனை தரிசித்து வருவார்கள்.    ஒவ்வொரு கார்த்திகையுமே விசேஷம் எனும் போது. கார்த்திகை மாத கார்த்திகைக்கு பெருமை அதிகம் அல்லவா? முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை அன்று தீபம் ஏற்றி வழிபட கந்தன் அருள் கைகூடும் என்பது நம்பிக்கை!  இந்த கார்த்திகை விரதத்தை ஏற்பவர்கள் மேலான பதவிகளை அடைவர் என்பது கண்கூடு. நாரத மகரிஷி இந்த விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் கடைபிடித்து. ரிஷிகளுக்கு எல்லாம் மேலாக உயர்ந்து மூன்று உலகமும் சுற்றிவரும் பாக்கியத்தை பெற்றார். இந்த விரத நாளில் முருகனுக்குரிய சஷ்டி கவசம் முதலியவைகளை பாராயணம் செய்து வழிபடவேண்டும்.   சிவபெருமா...

ஓல்டு ஜோக்ஸ் பகுதி 2

Image
ஓல்டு ஜோக்ஸ்     பகுதி 2 நீங்க வாங்கின புது கடிகாரம் தண்டம்! ஏன்.. என்ன ஆச்சு? பகல் பத்து மணிக்கு கொஞ்சம் கண் அசந்து விழித்து பார்த்தால் மாலை மூன்று மணியை காட்டுகிறது.                                    சுதர்ஸன். அந்த வீட்டிலிருந்த பூட்டை ஏன் உடைத்தாய்?  வேறு வழியில்லீங்க! நான் கொண்டு போன சாவி எதுவுமே அதுக்கு சரியா இல்லீங்களே!                                              எஸ்.என். ஆர் உனக்கு முன் அனுபவம் ஏதாவது இருக்கா? இருக்கே! இதுவரை 27 இண்டர்வியுவிலே 346 கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கேன்!          ...

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 15

Image
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 15 உங்கள் ப்ரிய “பிசாசு” முன்கதைசுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண்ணிற்கு பேய் பிடித்துவிட்டதாக சொல்லி பாயிடம் மந்திரிக்க அழைத்துச் செல்கின்றனர். முகேஷின் நண்பன் ரவி திருப்பதி செல்லும் வழியில் காணாமல் போகிறான். முகேஷை அவனது சித்தப்பா அழைத்து வரச்சொல்லி ஒரு ஆட்டோ டிரைவரை அனுப்புகிறார். அவருடன் சென்ற முகேஷ் அங்கு சித்தப்பா பேய் ஓட்டுவதை கண்ணாற பார்க்கிறான். இனி முந்தைய பகுதிகளுக்கான லிங்க்:     http://thalirssb.blogspot.in/2012/06/blog-post_3637.html பகுதி 1 http://thalirssb.blogspot.in/2012/07/2.html பகுதி 2 http://thalirssb.blogspot.in/2012/08/3.html பகுதி 3 http://thalirssb.blogspot.in/2012/08/4.html  பகுதி 4   http://thalirssb.blogspot.in/2012/08/5.html   பகுதி 5 http://thalirssb.blogspot.in/2012/08/6.html    பகுதி 6 http://thalirssb.blogspot.in/2012/09/7.html    பகுதி 7 http://thalirssb.blogspot.in/2012/09/8.html   பகுதி 8 http://thalirssb.blogspot.in/201...