Sunday, August 5, 2012

த்ரி ரோஸஸ்!புதிய வரலாறு! எண்ணமே சுமை! செல்போன் தகவல்!
புதிய வரலாறு படைத்த சவூதி ஜூடோ வீராங்கனை

லண்டன்: ஒலிம்பிக் வரலாற்றில் புதிய வரலாறு படைத்து விட்டார் ஒஜ்தன் அலி செராஜ் அப்துல்ரஹீம் ஷெகர்கானி. சவூதி அரேபியாவின் முதல் ஒலிம்பிக் ஜூடோ வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற ஷெகர்கானி தான் கலந்து கொண்ட முதல் போட்டியில் 82 விநாடிகளில் தோல்வியைச் சந்தித்தார். ஆனாலும், சவூதி பெண்களுக்கு பெரும் உத்வேகத்தையும், முன்மாதிரியையும் ஏற்படுத்தி விட்டார் ஷெகர்கானி.
ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக இரண்டே இரண்டு வீராங்கனைகளை இந்த முறை அனுப்பியிருந்தது சவூதி அரசு. அதுவும் கூட ஏகப்பட்ட இழுபறிகள், கண்டனங்கள், எதிர்ப்புகள், ஆவேசங்களுக்குப் பின்னர் இந்த வீராங்கனைகள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் ஷெகர்கானி. ஜூடோ போட்டியில் பங்கேற்றார் ஷெகர்கானி.
எப்படி ஆண்களுக்கு முன்பு ஒரு பெண் விளையாடலாம் என்ற பெரும் எதிர்ப்புக் குரல்களை ஷெகர்கானி ஆரம்பத்தில் சந்திக்க வேண்டியிருந்தது. இதையடுத்து அவரை அனுப்புவதில் பெரும் சிக்கல்கள் எழுந்தன. இதையடுத்து நெற்றியை முழுமையாக மூடும் வகையிலான தலைக் கவசத் துணியை அணிந்து கொள்ள வேண்டும், உடல் பாகங்கள் எதுவும் வெளியே தெரியக் கூடாது என்பது உள்ளிட்ட ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டார் ஷெகர்கானி.
அதன்படி நேற்று ஷெகர்கானி தனது முதல் போட்டியைச் சந்தித்தார். பியூர்டோரிகாவின் மெலிசா மோஜிகாவை அவர் சந்தித்தார். இந்தப் போட்டியைக் காண பெரும் திரளானோர் கூடியிருந்தனர். ஷெகர்கானியின் தந்தையும்,சர்வதேச ஜூடோ நடுவருமான அலியும் அங்கு வந்திருந்தார்.
தலையில் கருப்புத் துணியால் மூடியபடியும், முழுக்க உடலை மூடியிருந்த ஜூடோ டிரஸ்ஸுடனும், வித்தியாசமான தோற்றத்தில் மோதினார் ஷெகர்கானி. போட்டி தொடங்கியது முதலே மெலிசாவுடன் பெரிய அளவிலான மோதலில் ஈடுபடவே முயலவில்லை ஷெகர்கானி. கிட்டத்தட்ட சில விநாடிகள் இப்படியே ஓடிக் கொண்டிருந்தனர். இறுதியில் பியூர்டோரிகா வீராங்கனை, ஷெகர்கானியை கீழே வீழ்த்தி போட்டியை முடித்து வைத்தார்.
தோல்வியுற்று எழுந்த ஷெகர்கானி முதலில் தனது தலையை மூடியிருந்த துணி அவிழாமல் அப்படியே இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு மேடையிலிருந்து வேகமாக இறங்கி வந்தார். அவருடன் தந்தையும் உடன் வந்தார். தன்னை நோக்கி வந்த செய்தியாளர்களிடம் அதிகம் பேசவில்லை ஷெகர்கானி.
எனது மகளுடன் மோதியவர்கள் சாம்பியன்கள். எனது மகளுக்கு இதுதான் முதல் போட்டி. இந்த முறை தோற்றிருந்தாலும், எதிர்காலத்தில் எனது மகள் சாம்பியன் ஆவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் தந்தை அலி.
ஷெகர்கானி, ஜூடோவில் ப்ளூ பெல்ட் மட்டுமே பெற்றவர். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் மோதிய அத்தனை பேரும் பிளாக் பெல்ட் பெற்றவர்கள் ஆவர். இதனால் போட்டிக்காக பிளாக் பெல்ட் போட்டு கலந்து கொண்டார் ஷெகர்கானி.
82 விநாடிகளில் இந்த வித்தியாசமான போட்டி முடிவடைந்து விட்டாலும் சவூதி வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக சவூதி பெண்களிடையே இந்தப் போட்டி பெரும் உத்வேகத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிளாக்குகளில் ஷெகர்கானியைப் பாராட்டியும், புகழ்ந்தும் செய்திகள் குவிந்தவண்ணம் உள்ளன.
ஷெகர்கானிக்காகப் பெருமைப்படுகிறோம், வரலாறு படைத்து விட்டார் அவர் என்று அகமது அல் ஒம்ரான் என்ற சவூதி பத்திரிக்கையாளர் பிளாக்கில் எழுதியுள்ளார்.
சவூதியைச் சேர்ந்த அலா அல் மைசென் என்ற பெண் கூறுகையில், சவூதி பெண்களுக்கு மிகப் பெரிய முன்னுதாரணமாக திகழ்கிறார் ஷெகர்கானி. அவருக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார்.
இருந்தாலும் ஷெகர்கானிக்கு இனிமேல்தான் சோதனைகள் ஆரம்பிக்கப் போவதாக கூறப்படுகிறது. காரணம், ஒலிம்பிக்கில் பங்கேற்றதால் கிடைத்துள்ள புகழை வைத்து ஆட்டம் போடக் கூடாது, மேலும் மேலும் சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது என்று ஷெகர்கானிக்கு இப்போதே சவூதி மதவாதிகள் அறிவுரை கூற ஆரம்பித்து விட்டனர். ஒரு வேளை மதத் தலைவர்களை மீறும் வகையில் ஷெகர்கானியும் அவரது குடும்பத்தினரும் ஈடுபட்டால் அவர்கள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே புதிய வரலாறு படைத்தும் கூட ஷெகர்கானிக்கு சவூதி திரும்பும்போது மிகப் பெரிய சவால்கள் காத்துள்ளன என்பது மட்டும் நிச்சயம்.

தமிழகத்தில் நான்கில் மூன்று பேரிடம் செல்போன்!

ஜிஎஸ்எம் செல்போன் இணைப்புகளை வைத்திருப்போரில் தென் மாநிலங்களில் தமிழகத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் ஆந்திராவும், 2வது இடத்தில் கர்நாடகாவும் உள்ளன. மேலும தமிழகத்தி்ல நான்கில் 3 பேரிடம் ஜிஎஸ்எம் இணைப்பு உள்ளதாம்.
கடந்த ஜூன் மாதத்தில் தென் மாநிலங்களிலேயே ஆந்திராவில் தான் அதிக அளவாக 6 லட்சத்து 8 ஆயிரத்து 233 புதிய ஜிஎஸ்எம் இணைப்புகளைப் பெற்றனர். அடுத்த இடத்தில் கர்நாடகா உள்ளது. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஜூன் மாதத்தி்ல புதிதாக 2 லட்சத்து 67 ஆயிரத்து 285 இணைப்புகளைப் பெற்றனர்.
கடந்த ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் புதிதாக 46 லட்சத்து 36 ஆயிரத்து 371 ஜிஎஸ்எம் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் மொத்தம் 67 கோடியே 73 லட்சத்து 53 ஆயிரத்து 977 ஜிஎஸ்எம் இணைப்புகள் உள்ளன.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை அதிக அளவில் ஜிஎஸ்எம் செல்போன் சேவையைப் பயன்படுத்துவோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இங்கு நான்கில் 3 பேரிடம் ஜிஎஸ்எம் இணைப்புகள் உள்ளனவாம். ஆந்திராவில் 5 பேரில் 3 பேரிடம் இந்த இணைப்பு உள்ளது.


எண்ணமே சுமை!!!


காட்டின் வழியே இரு துறவிகள் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியில் ஆறு ஒன்று இருந்தது. அவர்கள் அந்த ஆற்றைக் கடந்து கரைக்குச் செல்ல நீரில் இறங்கினர்.
அந்த நேரம் ஒரு இளம் பெண் ஆற்றை கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் துறவியிடம் "என்னை மறுகரைக்கு கொண்டு சேர்க்க முடியுமா?" என்று கேட்டாள். ஆனால் அவர்களில் ஒரு துறவி மிகவும் தயங்கினார். மற்றவர் தயங்காமல், அந்த பெண்ணை தன் தோள் மீது தூக்கிச் சென்று, மறுகரையில் இறக்கினார். மறுகரை சேர்ந்ததும் அந்த பெண் துறவிக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
அவர்களும் தங்கள் பயணத்தை தொடங்கினர். சற்று நேரம் கழித்து, உதவி செய்ய தயங்கிய துறவி மற்றொருவரிடம் "நம் புத்த மதக் கொள்கையின் படி, துறவியான பின் எந்த பெண்ணையும் தொடக்கூடாது தானே? ஆனால் நீங்கள் ஏன் அந்த பெண்ணை தொட்டு தூக்கி மறுகரையில் இறக்கினீர்? அது தவறல்லவா?" என்று கேட்டார்.
அதற்கு உதவி செய்த துறவி சொன்னார், "நான் அந்த பெண்ணை தூக்கி கரையிலேயே இறக்கிவிட்டேன். நீங்கள் தான் இன்னும் அதனை சுமக்கிறீர்கள்" என்று புன்னகையுடன் சொன்னார்.

நன்றி!: தட்ஸ் தமிழ்

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவுகுறித்தகருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்!


18 comments:

 1. சவுதி வீராங்கனை பற்றிய பதிவு மிகவும் அருமை.கட்டுப்பாடுகள் தளரத் தொடங்குவதின் அறிகிரியாகக் கொள்ளலாம்.சென் கதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஐயா!

   Delete
 2. "அறிகுறி" என்ற தவறாக வந்துவிட்டது.மன்னிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. ஓக்கே சார்! தட்டச்சு செய்யும் போது தவறு ஏற்படுவது சகஜம்தான்! இதற்கு மன்னிப்பு எதற்கு? நன்றி!

   Delete
 3. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி!

   Delete
 4. நல்ல விஷயங்கள் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஐயா!

   Delete
 5. எண்ணமே சுமை அழகிய பாடம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே!

   Delete
 6. அட சென் கதை அருமையாக இருக்கிறதே...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மனோ சார்!

   Delete
 7. எண்ணமே சுமையயானால்,,, அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி!

   Delete
 8. Replies
  1. நன்றி தனபாலன் சார்! உங்கள் இடுகையை அவசியம் படிக்கிறேன்! நன்றி!

   Delete
 9. அருமையான பகிர்வு நண்பரே... ஒலிம்பிக் தகவல்கள் எதையுமே தற்போது படிபதில்லை ... அனால் வலைப்பூவில் உங்களைப் போன்றோர் எழுதுவதைப் படிக்கும் பொழுது பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது... நன்றி தொடருங்கள்

  ஜென கதை இன்னும் சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே!

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...