தளிர் ஹைக்கூ கவிதைகள்! 23

மறைந்து போனது
கடமைக் குவியலில்
கற்பனை!

கொஞ்சி கொஞ்சி
அழைத்தன பறவைகள்!
தாமதமான நிலவு

சுட்டாலும் இனித்தது
மண்ணில் விழுந்த
கனி!

வளர வளர
கேள்விகள் கூடுகிறது
குழந்தை!
 
கரிபடிந்த பூமிக்கு
முகவரி
நிலா!

தொலைதூர இசை
தொட்டுச் செல்கிறது!
காற்று!

எண்ணி சலித்தன பறவைகள்
வானில் மின்னிய
நட்சத்திரங்கள்!

பூத்தன
மணக்கவில்லை!
நட்சத்திரங்கள்!

கிட்ட நின்றும் எட்ட முடியவில்லை!
சிறுத்த நட்சத்திரங்கள்
நிலா!
 
கடலில் குளித்த
சூரியன்!
குளிர்ந்த பூமி!

முத்தமிட்டும்
சத்தம் கேட்கவில்லை!
எறும்புகள்!

ஓசை சத்தத்தில்
உறங்கவில்லை இரவு
புல்லினங்கள்!

கொள்ளை போனது
நஷ்டமில்லை!
குழந்தையின் சிரிப்பு!





தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!     

Comments

  1. .. ஓசை சத்தத்தில்
    உறங்கவில்லை இரவு
    புல்லினங்கள்! ...

    நன்று...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!