புகைப்பட ஹைக்கூ 42
புகைப்பட ஹைக்கூ 42
1. ஆடிக் கார்
இல்லை
ஆடு கார்!
2. ஆட்டின்
முதுகில்
ஆனந்த பவனி
3. புகையில்லா
வாகனத்தில்
பகையில்லா சவாரி!
4. பேன் உணவோடு
பேரானந்த
பவனி!
5. வானரத்திற்கு
வாகனமானது
ஆடு!
6. எரிபொருள் நிரப்பாமல்
எங்கும்
பயணிக்கும்
வாகனம்!
7. கிடா முதுகில் பேன்
கிடைத்தது
மந்திக்கு
ஆட்டு சவாரி!
8. மலையேறிய ஆட்டில்
மந்திகள்
ஏறி
மகிழ்ந்தன!
9. களைத்த மந்திகள்
கிளைத்தன
ஆட்டு சவாரி!
10. விலங்கினமாய் இருந்தாலும்
விலங்காகவில்லை
சாதி!
11. சுமையாக எண்ணவில்லை
சுகமாக சுமந்தது
ஆடு!
12. ஊரான் பிள்ளைக்கு
ஊர்தி ஆனது
ஆடு!
13. மேச வாகனத்தில்
மந்தி
ஊர்வலம்!
14. ஆடாமல்
ஆட்டுவித்தது
குரங்குகள்!
15. பாசம் மலர்கையில்
வேசம் கலைகிறது
ஆட்டின் முதுகில் குரங்குகள்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
// மேச வாகனத்தில் மந்தி ஊர்வலம்...// அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeletearumai..
ReplyDeleteபடம் அருமை அருமை
ReplyDelete