புகைப்பட ஹைக்கூ 44
புகைப்பட ஹைக்கூ 44
   1.வெளிப்பட்ட
   மிருகத்திடம் அடிபட்டது
   மனிதம்!
  2. வலி தெரிந்தும்
  வழி தெரியவில்லை!
  பாவம் குதிரை!
 3 மனிதம் 
  மரணிக்கையில் பிறக்கிறது
  மிருகம்!
 4.ஓடாய் தேய்ந்து
  முடங்கிப் போனது
  குதிரை!
 5. பிழைக்க உழைத்ததில்
  பிழை!
  அடிபட்டது குதிரை!
 6 காசு பிரதானமானதில்
   மறைந்து போனது
   காருண்யம்!
 7 ஓடுங்கும் ஜீவனை
   பிடுங்கும் 
   மிருகம்!
 8 தடம் மாறியதால்
   தடுமாறிப் போனது
   குதிரையின் வாழ்வு!
 9 வேடிக்கை பீடித்ததில்
    வேதனை மறந்த மனிதர்கள்
    பாவம் குதிரை!
 10  இரக்கமில்லா அரக்கன்
    இனி மீளுமா
    குதிரை!
 11   வீரம் மிகுகையில்
      விரைந்து குறைகிறது
      ஈரம்!
 12  வாலிபனுக்கு
      உறைக்கவில்லை!
      வாயில்லா குதிரையின் வலி
  13 லாபம் சுமந்தவன்
     பாவம் சுமக்கிறான்
     பாவம் பாறம் சுமந்த குதிரை!
   14 காய்ந்தமையால் சாய்ந்தது
      மேய்ச்சலில்லா
      குதிரை!
   15 நடுவீதியில் பாடம் கற்றது
      நன்றி மறந்தவனை
      சுமந்தகுதிரை!
   16 அடி வைக்க முடியாதால்
      அடி படுகிறது
      அடிபட்ட குதிரை!  
17. வற்றிப்போனது 
வயிறு மட்டுமல்ல!
 ஈரமும்!
    18. பசி விரட்டல் முன்
       பணிந்து போனது
       எசமான் கட்டளை!
    19 கல்நெஞ்சம்
       கருணை பஞ்சம்
       அடிபட்டது குதிரை!
    20 ஊமைகள் ஆன மனிதர்கள்
       ஊனப்பட்டது
       குதிரை!
   தங்கள் வருகைக்கு நன்றி!  பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
 

 
 
லாபம் சுமந்தவன்... பாவம் சுமக்கிறான்...
ReplyDeleteazhakaana kavithai..!
ReplyDeleteநடுவீதியில் பாடம் கற்றது
ReplyDeleteநன்றி மறந்தவனை
சுமந்தகுதிரை!
.//வெளிப்பட்ட
ReplyDeleteமிருகத்திடம் அடிபட்டது
மனிதம்!//
அருமை .
கலக்கல் கவிதைகள். பாராட்டுக்கள் சுரேஷ்
மனிதாபிமானம் இல்லாதவன்
ReplyDeleteபுகைப்படத்தைப் பார்த்ததும் மனது துவண்டு போனது. கவிதைகள் மனதை இன்னும் நோகடித்தன.
ReplyDeleteவாயில்லா ஜீவனிடம் தன் வீரத்தைக் காட்டும் கோழை!
//கல்நெஞ்சம்
ReplyDeleteகருணை பஞ்சம்//
சொல்லிட முடியுமா
.......கொடுமை துஞ்சும்!
வலிதரும் படங்களும் வரிகளும் சகோ!
எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்!
என் இரு கண்களும் வெந்நீர் துளிகள் அய்யா
ReplyDeleteஉண்மை சம்பவம் அல்லவா ஊமை ஆகி விட்ட மனிதர்கள் பேச தெரிந்த மிருகங்கள்
ReplyDelete