புகைப்பட ஹைக்கூ 38
புகைப்பட ஹைக்கூ 38
சூட்டில்
சூடு தெரியவில்லை!
பசி!
வலித்தாலும் தெரிகிறது
வாழ்க்கைக்கு
வழி!
சில்லறை காசுக்கு
சிறைபட்டது குழந்தை
மனசு!
வீசீ எறியும்
காசில் விலைபோகிறது
வாழ்க்கை!
சட்டங்கள் வந்தும்
சட்டங்களில் சிக்கி நிற்கிறது
கூத்தாடி வாழ்க்கை!
தொலைத்த வாழ்க்கையை
தொலைவில் பார்க்கும்
கூத்தாடி சிறுவன்!
புழுதியில் வாழ்ந்தாலும்
பழுதில்லா வாழ்க்கை
கூத்தாடிகள்!
ஜாண் வயிறுக்கு
முழம் போடுகிறார்கள்
கூத்தாடிகள்!
விளையாட்டு பிள்ளை
அல்ல!
பிள்ளை விளையாட்டு!
இதயம்இரங்கினால்
நிறைகிறது வயிறு
கூத்தாடிகள்!
கனா காணும் வயதில்
காட்சிப்பொருளானான்
உணவுக்கு!
வித்தை
விளைவித்தான்
வித்தைக்கு!
காசுக்கு முன்னே
கறுகின
கனவுகள்!
டிஸ்கி} சென்ற கவிதைப் பதிவில் திரு பாலகணேஷ் அவர்கள் கவிதை எழுதிவிட்டு போட்டோவை தேடுவீர்களா? அல்லது போட்டோவுக்கு கவிதையா? என்று கேட்டு இருந்தார். போட்டோவுக்குதான் கவிதை எழுதுகிறேன். தினமலர் இணையதளத்தில் வரும் படங்களுக்குத்தான் பெரும்பாலும் என் வரிகள் பிறந்துள்ளன. படங்களை பார்க்கையில் மனதில் படுவதை ஹைக்கூவாக வெளிப்படுத்துகிறேன்! தொடர்ந்து வாசித்து ஊக்கம் அளித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அனைத்தும் நன்று... (டிஸ்கி விளக்கமும்) தொடர்க... பாராட்டுக்கள்...
ReplyDeleteஅருமையான வரிகள்..
ReplyDeletearumai sako..
ReplyDeletemanam nerudiyathu..