தூசு தட்டின ஜோக்ஸ்!

தூசு தட்டின ஜோக்ஸ்!


நான் சின்னவீடு வெச்சிருக்கிற விஷயம் எப்படியோ என் மனைவிக்கு தெரிஞ்சுபோச்சு!
   அப்புறம்?
அந்த வீட்டையும் அவ பேருக்கு எழுதி வைக்கணுங்கிறா!
                            கோவி. கோவன்.

சுக்கிரன் இரண்டாம் இடத்திலும் ராகு நான்காம் இடத்திலும் இருப்பதால் கன மழை பெய்யலாம்.. சூரியன் ஏழாம் இடத்திலும் கேது எட்டாம் இடத்திலும் இருப்பதால் சூறாவளி வீச வாய்ப்புள்ளது...!
     யாரோ ஜோஸ்யரை வானிலை அறிக்கை சொல்ல சேர்த்திருக்காங்க போலிருக்கு!
                                         கோவி. கோவன்.
என்ன மேடம் இது.. மூணு வருஷத்துக்கு முன்னாடி வயசு என்னன்னு கேட்டதுக்கு 18ன்னு சொன்னீங்க.. இப்ப வயசு என்னன்னு கேட்டா மறுபடியும் 18ன்னு சொல்றீங்க?
  மறுபடியும் நீங்க அதே கேள்வி கேட்டீங்க! ஒரு கேள்விக்கு ஒரு பதில் தானே!
                                      கோவி. கோவன்.

எங்கப்பா ரொம்ப தமாஷ் பேர்வழி!
  எப்படி சொல்றே?
நான் எல்லா பாடத்திலும் முட்டை வாங்கிட்டு போனா, வெங்காயம் வாங்கிட்டு வாடா! ஆம்லெட் போடலாம்னு சொல்வார்!
                           கொங்கணாபுரம் வே.செந்தில்.
எதுக்குப்பா முருங்கைக்காய் உருளைக் கிழங்கு வாங்கி தந்துட்டு போறே?
முருங்கைகாய் சாம்பார் உருளைக் கிழங்கு கறி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது தாயே! இந்த ஏழைக்கு கொஞ்சம் சமைச்சு போடுங்கம்மா!
                                       எம். பூங்கோதை.

மூணு நாளா உள்ளங்கை அரிச்சுக்கிட்டு இருந்தது..
  பணம் வரும்னு சொல்லுவாங்களே!
சொறிஞ்சதுல கட்டிதான் வந்திருக்கு!
                              ஸ்ரீதர்.
சிக்கன நடவடிக்கைங்கிற பேர்ல நம்ம ஹெட் ஆபீஸ்ல அநியாயம் பண்றாங்க!
   ஏன் என்னாச்சு...?
ரகசிய ஃபைலை பாதுகாக்க லாக்கர் கேட்டதுக்கு ரெண்டு நல்ல பாம்பை அனுப்பியிருக்காங்க!
                        வேதபுரி எஸ்.ரமேஷ்.

யோவ் கான்ஸ்டபிள்! எங்கேயே யூனிஃபார்ம்?
  சார் யூனிஃபார்ம்ல வெளியே போனா எல்லாரும் திருடன் திருடன்னு பயப்படறாங்க சார்!
                                           பாஸ்கி.
அப்பா! நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்!
  சரி சுத்தி வளைக்காம சுண்டல் பாக்கி எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லு பணம் தர்றேன்.
                              கடலாடி அரிராம்.
நான் வாழ்க்கையில பல தோல்விகளை சந்திச்சு நொந்துட்டேன் டாக்டர்! நான் வாழ்ந்து யாருக்கென்ன லாபம்?
  இப்ப என்ன சொல்லவர்றீங்க? உங்களுக்கு நான் ஆபரேஷன் செய்யனும் அவ்வளவுதானே!

                             வேதபுரி எஸ். ரமேஷ்.
டேய் பக்கிரி! எனக்கு சேலத்துக்கு மாற்றல் உத்தரவு வந்திருக்கு..
 கவலைப்படாதீங்க ஐயா.. அங்க என் மச்சான் தான் சாராயமெல்லாம் காய்ச்சறாரு.. அவருக்கு கடுதாசி தர்றேன்.. அவர் உங்களை கவனிச்சுப்பாரு!
                                 பி.யூ நாராயணன்.

பரவாயில்லையே.. அவங்க அறுபதாம் கல்யாணத்துக்கு இவ்வளவு கூட்டம் வந்திருக்கே!
அட நீங்க வேற ஒண்ணு! இதுதான் அவங்களோட கல்யாணம். ரெண்டுபேரும் காதலிச்சு பெற்றோர் சம்மதம் வாங்கிக் கல்யாணம் செஞ்சுக்க இத்தனை வருஷமாயிருச்சு!
                           கடலூர் கன்னியப்பன்.


பொண்ணுப்பார்க்க கார் மெக்கானிக்கை கூட்டிகிட்டு போனது தப்பா போச்சு!
  என்னாச்சு?
பொண்ணோட டேட் ஆப் பர்த் என்னன்னு கேட்கறதுக்கு பதிலா பொண்ணு எந்த வருஷத்திய மாடல்?னு கேக்கறான்.
                                டால்ரிக்ஸ்


அவ்வளவும் தங்க நகைதானே?
இல்லை கவரிங்...!
பரவாயில்லை கழட்டு... என் மாமியாருக்காச்சும் கொடுக்கலாம்!
                                          எஸ்.ரவி.

ஆபிஸுக்கு முதல் முதலா இன்னிக்கு வேலைக்கு போன என்னை ராகிங் செஞ்சாங்க?
எப்படி?
நின்னுகிட்டே தூங்க சொன்னாங்க!
                           ஆர். அப்துல் கலாம்.

என்னங்க காய்கறி மார்க்கெட்ல ஆம்புலன்ஸ் நிக்குது!
  ஆமாங்க! காய்கறி விலை கேட்டு சில பேர் மயக்கமாயிட்டாங்க!
                                        கார்த்திக்

அட ! நான் உங்க மனைவிதானே! கூச்சப்படாம கொஞ்சம் இறுக்கித்தான் அணைங்களேன்.. சேலை கசங்கினாத்தான் என்ன இப்போ?
  ஆமா உனக்கென்ன சொல்லுவே! நாளைக்கு நாந்தானே அதை துவைக்கணும்!
                                ராசி. பன்னீர்செல்வன்.

நன்றி: ஆனந்தவிகடன் பழைய இதழ்கள்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

 1. எல்லாம் சூப்பர்...

  ReplyDelete
 2. கடைசி ஜோக் பழசானாலும் கிளாஸ்..

  ReplyDelete
 3. அனைத்தும் நல்ல நகைச்சுவைகள்...

  ReplyDelete
 4. ஒரு அவசரமானத் தேவைக்காக இதில் நகைச்சுவை பதிந்துள்ள டால்ரிக்ஸ் என்பவரைத் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது.தயவு செய்து அவரைத் தொடர்பு கொள்ள வழியேதும் உண்ட எனத் தயவு செய்து அறியத்தர முடியுமா யாராவது ப்ளீஸ்...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2