புகைப்பட ஹைக்கூ 41


 1 கனா கானும் வயதில்
   கற்காலம் ஆனது
   வறுமை!

  2 உடைந்து போனது
   கற்களுடன்
   கல்வியும்!

  3 உடைபட்ட கற்களால்
   தடைபட்டது
   கல்வி!

  4  வறுமை உடைபட
   கல்லுடைக்கும்
   சிறுமி!
 5  தங்கையின் அழுகை
   தம்பியின்  பசி
   தந்தது தமக்கைக்கு சோகம்!

 6   சோக விழிகளில்
    சொல்கிறது
    சொல்லொனா வேதனை!

  7   பாதை அமைக்கிறாள்
     பாதை
     தவறியவள்!

 8  சிதறும் கற்களில்
     சிதறிப்போனது
     சிறுமியின் எதிர்காலம்!
     
   9   ஏக்கவிழிகள்
      வரைந்தன
      ஏழ்மையை!

    10  விடியலைத்தேடும்
      பறவைகள்!
      விலங்காய் ஏழ்மை!

    11   கல் உடைக்கையில்
       கல் நெஞ்சமும்
       உடையும்!

    12   ஒளிரும் இந்தியாவின்
       ஒளிந்த முனைகள்!
       கல்லுடைக்கும் சிறுமி!
    13 உடைபடும் கற்களால்
       ஒளிர்கிறது சிறுமியின்
       குடும்பம்!

   14. விடை தவறென்றாலும்
       சரியாக்குகிறது
      வாழ்க்கைப்பாடம்!

   15. கல்விக்கு விடைகொடுத்தாள்
       கல்லுக்கு கை கொடுத்தாள்
       வாழ்க்கைப்பாரம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
      


Comments

  1. மனம் கல்லாகிப் போனது !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  2. எதிர்காலம் நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது...

    ReplyDelete
  3. பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிறான் ஏழை இன்னும் ஏழையாகிறான்.

    இந்த வறுமைக்கு ஒரு வறுமை வராதா ?

    ReplyDelete
  4. சிறுவர்கள்
    உடைத்தது
    கல்லை
    துண்டாகித்
    துகளாகிப்
    போனதென்னவோ
    மனம்தான்

    ReplyDelete
  5. Ithu marave marathu appti thaan ...eni appti thaan

    ReplyDelete
  6. What I can do except crying inside. I dont Know what politicians are doing?

    ReplyDelete
  7. ##விடை தவறென்றாலும்
    சரியாக்குகிறது
    வாழ்க்கைப்பாடம்!## அருமை... இதனைப் புகழ்வதில் வெட்கப்படுகிறேன்....

    ReplyDelete
  8. அனைத்தும் அருமை
    //பாதை அமைக்கிறாள்
    பாதை
    தவறியவள்!//
    எனபதற்கு பதிலாக
    "பாதை அமைக்கிறாள்
    பாதை தெரியாதவள்"
    என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ?
    மன்னிக்கவும் .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2