ஆயிரம் பேருடன் கட்சியில் சேர்ந்தவர்! சிரிக்கவைத்த சிரிப்புக்கள்! பகுதி 7

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 7


1.இந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
  சின்ன ஊசியா போடுங்கன்னு சொன்னதுக்கு குண்டூசியை எடுக்கறாரே!
                       ஆனந்த் சீனிவாசன்.
2. நம்ம தலைவருக்கு இதுதான் சொந்த ஊர்!
   இங்கேதான் அவர் பிறந்தாரா?
ம்ஹூம் பினாமிகள் பேர்ல இந்த ஊரையே சொந்தமா விலைக்கு வாங்கிட்டார்!
                    அ. பேச்சியப்பன்.
3.தலைவருக்கு சீக்கிரமே பத்மஸ்ரீ கிடைச்சிடும்னு சொல்றீயே அவருக்கு ஏது அவ்வளவு தகுதி?
   பத்மஸ்ரீங்கறது மகளிரணித்தலைவரோட தங்கச்சி பேரு!
                      லெ.நா. சிவகுமார்.
4. என் பையன் ஊரை சுத்திட்டு சாப்பிடறதுக்கு மட்டும் வீட்டுக்கு வர்றான்.
  அப்ப கை கழுவறதுக்கு எங்க போறான்?
                               ஜி.லட்சுமிபதி
5.உன் மனைவியை பிடிச்சிருக்கிறது நிச்சயமா ஒரு ஆண் பேய்தான்னு எதை வெச்சி சொல்றெ?
  பேய் பிடிச்சதுலயிருந்து விடாம சமைச்சிகிட்டே இருக்காளே!
                                     வீ. விஷ்ணுகுமார்.
6.அவரு பேரு சிங் சீனியா ரொம்ப வித்தியாசமா இருக்குதே?
  அவரு பேரு சிங்காரம்தான் அல்சர் வந்து காரம் ஒத்துக்காதுன்னு டாக்டர் சொன்னதாலே பேரை சிங்சீனின்னு மாத்தி வச்சிகிட்டார்!
                           அன்னலட்சுமி
7.இப்படி மடத்தனமா ஊழல் செஞ்சு மாட்டிகிட்ட என் புத்தியை செருப்பால அடிக்கணும்!
  செருப்பு வைச்சிருக்கீங்க! புத்திக்கு எங்கே போவீங்க தலைவா?
                           பர்வீன் யூனுஸ்.
8.காந்திவழியிலே நடப்போம்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சா ஏன்?
கால் வலிக்கும்யா.. கார்ல போகலாம்னு சொல்றாரே!
                                        சிக்ஸ்முகம்.
9.தலைவர் வீட்ல நிறைய டாய்லட் இருக்குதே ஏன்?
ரெய்டு நடக்கறப்ப வீட்ல எல்லோருக்கும் வயிற்றை கலக்குதே!
                             தாமிரசெல்வன்.
10 அவருக்கு ஆங்கில வாடையே பிடிக்காது
   அப்படியா?
ஆமா யாராவது அவர் முன்னாடி ஆங்கிலம் பேசினா மூக்கைப் பொத்திக்குவார்னா பாரேன்!
          
                    ராசி.
11.குழந்தை வயிறு ஏன் உப்பி இருக்கு?
    சொட்டு மருந்து இலவசம்தானேன்னு எல்லா முகாமுக்கும் தூக்கிகிட்டு போனேன்.
                                     எஸ்.மோகன்.
12.கட்சிக்கு சீட்டே வேணாம்னு சொல்லிட்டாராமே தலைவர்.. ஏன்?
 ஜெயிச்சு வந்தவங்களை விலைகொடுத்து வாங்கிடலாம்கற தெம்புலத்தான்!
                                   ஜி. மூக்கையன்.
13.கபாலி எதுக்கு ஆஸ்பத்திரிக்குள்ள சுத்திகிட்டு இருக்கான்!
    ஒரு சேஞ்சுக்கு கிட்னி திருடப்போறானாம்!
                           பி.ஜி.பி. இசக்கி
14ஆபரேசன் செய்ததும் இப்படியெல்லாம் எழுந்து நடந்தா தையல் பிரிஞ்சிடும்!
    அவ்வளவு மோசமான நூலால ஏன் தைச்சீங்க டாக்டர்?
                         பி.சீனிவாசன்.
15.மாப்பிள்ளை பொறியாளர்னு சொன்னதை நம்பி பெண்ணைக் கொடுத்தது தப்பாப் போச்சு!
   ஏன் என்ன ஆச்சு?
  தெருத் தெருவா பொரி விக்கறார்!
                          பச்சைமணி மைந்தன்.
16.அந்த வக்கீல் ஒரு போலி!
  எப்படி?
 வழக்கு தொடுக்க நார் இருக்கான்னு கேட்கிறாரே!
                                கே.ஆர் பத்மா?
17.நம்ம டாக்டர் சரியான வழிசல் கேசுன்னு எப்படி சொல்றே?
    ஆஸ்பத்திரியிலே வார்டு கேர்ள் தான் போட்டிருக்கார்னா பாரேன்!
                           வைகை ஆறுமுகம்.
18.என்னப்பா இந்த ஆள் ஆயிரம் பேருடன் கட்சியில் இணைய வருகிறேன்னுட்டு இப்ப தனியா வந்திருக்கிறாரே!
   தலைவரே அவருக்கு ஆயிரம் கெட்ட பேர் இருக்குதாம்!
                        ஆர்.துரை ராஜ்.
19.உன் பொண்டாட்டி கோபப்பட்டதும் எதுக்கு அவ காலிலே விழுந்து கும்பிடறே?
   நான் தான் சொன்னேனே கோபம் வந்தா என் மனைவி பத்ரகாளி ஆயிடுவான்னு!
                                    வ.சகிதா முருகன்.
20.தலைவர் என் சொத்துக்களோட நதிமூலம், பார்க்க ஆரம்பிச்சிட்டார்!
   அப்புறம்?
  நிதிமூலம் சரி செஞ்சுட்டேன்!
                வீ.விஷ்ணுகுமார்.

நன்றி: தினமலர்-வாரமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சிறப்பான நகைச்சுவைத் தொகுப்பு .வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி
    பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா ஹா ரசித்து சிரித்தேன்....அதிலும் அந்தப் பொறியாளர்...ஹி ஹி....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!