புகைப்பட ஹைக்கூ 43

புகைப்பட ஹைக்கூ 43


  பேரணிக்கு அல்ல
  ஊறுணிக்கு அணிவகுப்பு
  கால்நடைகள்!

 ஊர்வலம் வந்தன
 உணவைத்தேடி!
 மாடுகள்!

 ஒரே கொள்கையில்
  பேரணி!
உணவைத்தேடி மாடுகள்!

தீவனம் தேடி
தீயில் ஊர்வலம்
மாடுகள்!

அடிதடி கலவரம் இல்லா
அமைதி ஊர்வலம்!
மாடுகள்!

காடுகள் வீடுகளாகையில்
மாடுகள் பெயர்ந்தன
இரையைத்தேடி!

தள்ளுமுள்ளு இல்லா
ஊர்வலம்
மாடுகள்!

இரைதேடி
நடைபயின்றன
கால்நடைகள்!

மேய்ச்சலைத்தேடி
மேய்ந்தன
கால்நடைகள்!

‘கா’வைத்தேடி
கால்நடைப்பயணம்
கால்நடைகள்!

உடையாத கூட்டணி
அமைத்தன
கால்நடைகள்!

தொலைந்தது இயற்கை
தேடின
கால்நடைகள்!

நடை பயிற்சியில்
கால்நடைகள்!
நலியும் இயற்கை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. // அமைதி ஊர்வலம்... // அனைத்தும் அருமை...

  ReplyDelete
 2. அத்தனையும் அருமை சகோ!

  //காடுகள் வீடுகளாகையில்
  மாடுகள் பெயர்ந்தன
  இரையைத்தேடி!//

  என் மனதைத் தொட்டது...

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. மனிதர்கள் உணர வேண்டிய ஹைக்கூ கள் !!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!