புகைப்பட ஹைக்கூ 37

புகைப்பட ஹைக்கூ


பழுதானாலும்
விழுதாய் தொடர்கிறது
உழவு!

ஆழ உழுகிறது
ஆளுமைக்கு
காளைகள்!

பெய்த மழை
பேணியது
உழவு!

குத்தினாலும் கிளறினாலும்
கோபிக்காமல் கொடுக்கிறது
மண்!

வீதிகளில் தேரோட
வயல்களில் ஓடியது
ஏர்!

உழுத காளைகள்
எழுதின
உழவனின் முகவரி!

களையிழந்த உழவை
கலையாக்கின
காளைகள்!

விளைநிலம் உழ
விரைந்தன
காளைகள்!

மாறிவரும் சூழல்
மாரி வந்ததால்
மாறியது உழவுக்கு!

ஏரோட்டும் உழவன்
பாராட்டும் காளைகள்
தாலாட்ட தழைத்தது உழவு!

  பசிப்பிணி போக்க

  பண்பட்டது நிலம்
  பதப்படுத்தின காளைகள்!

  வறண்டு போனாலும்
  சுருண்டு போகவில்லை
  வயலில் உழவன்!

   விளையுள் நிலங்களில்
   விதைந்து கிடக்கிறது
   விவசாயியின் கனவு!

   பசிக்கு சோறிட
   பதப்படுகிறது மண்
   உழவு!

   தொழாவிடினும்
   விழாமல் காக்கவேண்டும்
   உழவு

   விலையில்லாததால்
   விளையுளை பார்க்க
   தயாரானது நிலம்!தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. // விலையில்லாததால்
  விளையுளை பார்க்க
  தயாரானது நிலம்! //

  உண்மைதான்...

  ReplyDelete
 2. /// குத்தினாலும் கிளறினாலும்
  கோபிக்காமல் கொடுக்கிறது
  மண்! ///

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. தாங்கியே எதையும் தந்திடும் தாய்நிலம்
  ஏங்கிட வைக்காது ஏழையெனப் பார்க்காது
  தேக்கியே வைத்துள தேட்டம் யாவுமே
  பாக்கி இன்றியே பகிர்ந்தே தருகுதே!

  அழகிய சிந்தனை சகோ!
  மண், உழவு, காளைகள், விவசாயி என்று சிறந்த கற்பனை!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. ஆ கவிதை! நல்லாவும் வந்திருக்குதே! படத்தை முதல்ல செலக்ட் பண்ணிட்டு கவிதை எழுதினீங்களா...? இல்லை கவிதைய எழுதிட்டு படத்தை தேடினீங்களா? அருமை!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2